18 அக்டோபர், 2021

இழை

எழுத்துக்களை எழுதும் பொழுது சில சமயங்களில் எண்ண ஓட்டங்கள் பிரமாதமாக ஓடுகிறது. எடுத்துக்காட்டாக, கடந்த போஸ்டிங் ‘மழை’ எழுதும் பொழுது சும்மா மழை பெய்வது மாதிரி ஒரு நூறு போஸ்டிங்களுக்கு வேண்டிய எண்ணங்கள் மனதிலே வந்தது. 

டூ வீலர் கும்பல், தேன் கூடு மாதிரி இருந்தது என்ற எண்ணத்தை ஒரு கவிதையாக வடிக்கலாம் என்று தோன்றியது.

எண்ண இழைகளும், எழுதும் செயலும் அப்படியே ஒரு அனுபவமாகச் சென்றது. எழுத்திலே வடிக்கவில்லை. எண்ணங்கள் மறந்து போயின.

அடுத்த மூன்று நாட்கள் போஸ்டிங்கே நடக்கவில்லை. எண்ண இழைகளும் மாறியது.

மகன் மேல் இருந்த கரிசனம், அவன் தூங்கு மூஞ்சியாகவும், அவன் ‘சள்சள்’ பேச்சுக்களாலும், பிசிகல் அலட்டலில்லாமல் ஒரு விடியோ கேமையே ஆடிக்கொண்டிருப்பதாலும் கோபமாக மாறியது.

பிஸிகல் ஆக்டிவிட்டி இல்லையென்றால் எப்படி தொப்பை குறையும்?

கணபதியே வந்தனம். கணபதியிடம் வேண்டும் இழையும், நடையும் கூட சல்லீஸாக விட்டுப் போகிறது.

கணபதியே நன்றி. என் வேண்டுதல்களுக்கு நல்ல போல் செவி கொடுத்து அருள் பாவித்துக் கொண்டிருக்கிறாய்.


16 அக்டோபர், 2021

மழை

மழை சொறீனென்று பெய்து கொண்டிருக்கிறது.

மகன் டூ வீலரில் எப்படி வருவான் என்று மனம் கவலை கொள்கிறது.


கவலை கொண்டிருந்தால் கவலை பட்டுக் கொண்டிருக்கலாம். இந்த மாதிரி சந்தர்பங்களில் என்ன செய்யலாம்?


1.எங்கேயாவது நின்று விட்டு வரவேண்டும்.

2.மழையில் நனைந்து கொண்டு வரவேண்டும்.





நானாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன். அவனும் அதைத்தான் செய்வான். இதிலென்ன கவலை?

நேற்று அங்கே, நைஸ் ரோடிலே வரும்பொழுது, ரோட்டின் மேலே போகும் இன்னொரு மேல் ரோட் மேம்பாலத்தை கூரையாக கொண்டு, ஒரு தேனீ கூண்டைப் போல அடிவாரத்தில்குமைந்து கிடந்த டூ வீலர் கும்பலை பார்த்தாயே.

டூ வீலரில் ஆங்காங்கே ஓடாடும் பல மக்களைப் போலல்லவா என் மகனும். 

எப்படியோ வந்து விடுவான்.

கவலைப் படு. கவலை மேலிருந்து எழு. என்ன ஓக்கேயா?

படவாப் பய மடிவாளா வரை மழையில் மானேஜ் செய்து, பிறகு என் நண்பன் வீட்டில் தங்கி வருகிறேன் என்று சொல்லி காலையில் வந்தான்.


11 அக்டோபர், 2021

ரஜத்

 

Gunas

(image credit https://www.unbrokenself.com/the-three-gunas-a-revolutionary-model-for-mastering-your-mind-and-life/)


ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் அதாவது ரஜத் குணத்தால் இங்கு எழுத வந்திருக்கிரேனா?

நல்ல சத்வ குணம் தற்பொழுது மனதில் குடி கொண்டிருப்பதால் எழுத வந்திருக்கிரேனா?

அல்லது தமோ குணம் மனதிலும் உடலிலும் இல்லாதிருப்பது இங்கு எழுத வரக் காரணமோ? 

மனம் இப்படி ஆராய்சி செய்வது இந்த மூன்று குணங்களைப் பற்றி என்றால் என்ன விஷயம்?

மூன்று குணங்களின் கலவை மனதில் பரவியிருப்பதை அனுபவித்தல் என்பது தான் விஷயம்.

அனுபவித்தல் என்பது ….. ம் ம் ம்... ரஜத் குணமா அல்லது சாத்வீக குணமா? 

எழுதுவதை ஒரு செயலாக செய்வது தாமோவா? என்ன எழுதுகிறேன் என்று ஒரு ஈடுபாடு கொண்டு செய்வது ரஜோ குணம் என்று வைத்துக் கொள்ளலாமா? எழுதுவது ஒரு நல்ல செய்தி என்றால் அது சத் குணமென்று வைத்துக் கொள்ளலாம்.

நாம் செய்து கொண்டிருப்பதை/ செய்யாமலிருப்பதை  மனம் இந்த மூன்று குணங்களின் விழிப்புணர்வுடன் அசை போட்டால் ஒரு தனி அனுபவம்.



08 அக்டோபர், 2021

அம்மா

 இந்த அம்மா ரூமிலே ஒரு AO ஸ்மித் water filter வெள்ளை அட்டைப் பெட்டி இருக்கிறது. அந்த வெள்ளைப் பெட்டியிலே அம்மாவின் அதிகப்பட்ட புடவைகள் உள்ளன.


அம்மாவுக்கு நிறைய புடவைகள் வைத்துக் கொண்டு கட்ட வேண்டும் என்ற ஆசை. நான் இந்த ரூமிர்க்கு வந்தால், அந்த வெள்ளைப் பெட்டியை எடுத்துக் கொடு, அதில் குமார் எடுத்துக் கொடுத்த புடவை, நீ காசிக்கு சென்றபொழுது எடுத்துக் கொடுத்த புடவை எல்லாம் இருக்கிறது நான் கட்ட வேண்டும் என்று சொல்லுவார்.


மனசு கேட்க்காது. எடுத்துக் கொடுத்து விடலாம் என்று தோன்றும்..


புடவைகள் சிலது கனமாக இருக்கும். அந்தப் புடவைகள் பீரோவிற்கு வந்தால் ஒரு பெரிய மலையாகும். ரொம்ப முடியாத கைகளால் அவைகளை அடுக்க முயற்சிப்பாள். ஒரே mess ஆகி விடும். அந்தப் புடவைகளை கட்டினால் அவளுக்கும் கனமாக இருக்கும்.


நல்ல இதயத்துடன் மனசு சொல்வதை கேட்காமல், அவளுக்கு சுளுவாக இருக்கும் புடவைகளை பீரோவில் வைத்துக் கொடுத்திருக்கிறாள் மனைவி. ஆனால் அம்மைக்கு அது happy ஆக இல்லை.


இப்பொழுது நாம் எல்லோரும் happy ஆக இருப்பது மாதிரி இருக்க வேண்டுமா அல்லது அம்மாவை happy செய்ய வேண்டும் என்று அவளுக்கு கஷ்டம் கொடுப்பதா?





தமிழும் சரஸ்வதியும்

 தமிழும் சரஸ்வதியும்




மணி 10:50. கூகிள் க்ரோமை ஓப்பன் செய்து ஹோம் பட்டனை அழுத்தினால் கூகிள் கீப்பிற்கு சென்று விடுவேன்.

இதோ அம்மா ரூமிற்கு வந்து இன்றைய நூறு வார்த்தைகளை எழுதுகிறேன்.


என்ன எழுதலாம்?


'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் நல்ல காலம் தமிழ் தப்பி விடுகிறான். தமிழும் நமச்சியும் போலீஸ் ஸ்டேஷனில் அவஸ்தைப் படும் அந்த வேளையில் ஷைலஜா பொண்ணு வந்து உண்மையெல்லாம் சொல்லி ஷ்யாமின் முகத்திரையை கழட்டுகிறார்கள். லிங்கம் தன் தப்பை உணர்ந்து தமிழை கட்டிக்கொள்கிறார். நமச்சி போலீஸ்காரர்களை இன்ஸ்பெக்டர் உதவியுடன் அடேன்ஷனில் நிற்க வைத்து ஷ்யாமை 'டிஷும் டிஷும்' என்று குத்தி குதூகலப் படுத்துகிறார். குதூகலமாக இருந்தது சீரியல் பார்க்க. இனி சீரியல் திங்கட்க்கிழமை வரும். என்ன திருப்பங்கள் உண்டோ?


மணி இப்பொழுது 12:55. மறுபடி அம்மா ரூம். அம்மா தூங்கிக்கிட்டிருக்கா.

என் மகனின் அம்மா பூஜை பண்ணிக்கிட்டிருக்கா.


ஆஹா இன்றைய 100 வார்த்தைகள் இது!


 


07 அக்டோபர், 2021

கொஞ்சல்

 கொஞ்சல்


சரிப்பா ஒரு பன்னிரண்டு மணி வரை லாப்டாப்புடன் கொஞ்சிக்கிட்டிருப்போம். கூகிள் கீப் -ல் இன்றைக்கான பிளாக் போஸ்ட்டுக்கு எதாவது எழுதுவோம்.

சரி. லாப்டாப் அம்மா ரூமிலே உள்ளது.


நேற்று மாலை திருமகுண்டனஹள்ளிப் பிள்ளையாரை மனைவியுடன் காரில் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.


அப்படியே சந்தாப்பூர் over bridge வரை சென்று பெண்டாட்டி உதிரிப் பூக்கள் வாங்கிக்கொள்ள உதவி செய்தேன். ஆனவரை அவளை திருப்தி படுத்துவது நோக்கம். ஆனால் அது பல சமயம் backfire ஆகி விடும். ஆகட்டும்.


புலம்ப மாட்டேன். பிள்ளையாரப்பா புலம்பவே மாட்டேன் - புதனும் வியாழனும் காலம்பற 5:45 மணி அலாரத்திற்கு எழுந்திருக்கவில்லை, பிள்ளையார் கோவிலுக்கு நடந்து செல்லவில்லை என்றெல்லாம் புலம்பவே மாட்டேன்.


இன்று மாலையும் பிள்ளையார் கோவிலுக்கு மனைவியுடன் செல்ல விரும்புகிறேன். 


சரி கொஞ்சல் என்று தலைப்பு போட்டுக் கொண்டாயே, எப்படியிருந்தது லேப்டாப் கொஞ்சல்?


பேஷாக இருந்தது. 12:30 வரை இதை எழுதிக் கொண்டிருந்தேன்.



06 அக்டோபர், 2021

பெண்டாட்டி

 நேற்று மாலை மழை பெய்வது மாதிரி இருந்தது. நடக்க தொடங்கி.... இஸ்தரிக்கு கொடுத்ததை வாங்கி வந்து விட்டேன். (ஒரு உருப்படிக்கு பத்து ரூபாய்கள். உருப்படிகளை பீரோவில் எடுத்து வைக்க வேண்டும்)


பிறகு மனைவியை கூட்டிக் கொண்டு காரில் கணேசன் கோவிலுக்கு சென்றிருந்தேன்.


நல்லாயிருந்தது.


நம்ம ஸ்வாமி சத் விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.


நல்லாத்தான் சொல்றார்.


இன்று காலம்பற அந்த garage போகும் வேலை இனிதே நடந்தேறியது.


பெண்டாட்டிக்கு குஷி.


அந்த காரஜ் நல்ல மனிதனுக்கும் ₹ 200 தட்சணை கொடுத்தேன்.


ஆக கார் அலங்காரம் முடிந்தது.


பெண்டாட்டியும் நானும் பாத்திர கடை சென்றிருந்தோம். பழைய பாத்திரங்களை கொடுத்து புது பாத்திரங்கள் வாங்கிகொண்டாள் மனைவி.


ஆனந்த் நகைக் கடைக்குச் சென்றிருந்தோம். அங்கு மனைவி சில தோடுகளை பாலீஷுக்கு கொடுத்தாள்.


மனைவியை கூட்டிக் கொண்டு வெளியே செல்லும் வைபவம் இது.


அப்புறம் அந்த பேக்கரிக்கு சென்றதை எழுத மறந்தேனே!


05 அக்டோபர், 2021

நமஸ்காரம்

 கணபதி, நமஸ்காரம்.

அந்த hundred words சைடிலே English ல நூறு வார்த்தைகள் எழுதிக் கொண்டிருந்தேன். கரெக்டாக நூறு வார்த்தைகள். அது மாதிரி பிளாகர்ல நூறு வார்த்தைகள் எழுத தொடங்கியுள்ளேன்.

ஓரிரண்டு பதிவுகளை நூறு வார்த்தைகளுக்கு மேல் இருக்க விட்டு விட்டேன். ஒரு பதிவு நூறு வார்த்தைகளுக்கு கீழ் உள்ளது.

இருக்கட்டும். 

ஏதோ பெரிதாக காலையில் கார் attend செய்யவும், கோவிலில் உள்ள பிராமணனுக்கு தானம் கொடுக்கும் வேலை இருப்பதாக...இன்று காலை கணபதி கோவில் நடையை செய்யவில்லை.

செய்திருக்கலாம். செய்யவில்லை. கணபதியே நமஸ்காரம்.

காரு ஓக்கே தான். இருந்தாலும் பெண்டாட்டிக்கு காரேஜ் காரன் இன்னும் சிறப்பாக பண்ணிக்கொடுப்பான் என்ற ஆசை. பார்ப்போம் நாளை. காரை காரேஜில் விடும் பணி நாளைக்கும் தொக்கி நிற்கிறது. பெண்டாட்டி திருப்தி ஆகட்டும். இது போதும் என்ற திருப்தி நமக்கு மாத்திரம் இருக்கட்டும்.

பெண்டாட்டி சொல்லை கொஞ்சம் பார்த்து பார்த்து கேட்டால் நாம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

கோதண்டராமர் தரிசனம் சிறப்பாக இருந்தது.

நமஸ்காரம் கணபதி, மாலை எனது வேண்டுதல் நடையை நடந்து விடலாமென்ரிருக்கிரேன்.

பார்ப்போம்.



04 அக்டோபர், 2021

கோபமாக இருக்கிறேன் கணபதி

'கோபமாய் இருக்கிறேன் கணபதி' என்று டெலிகிராஃபில் என்னுடைய கோபமெல்லாம் எழுதி வைத்திருந்தேன்.
அட சட்.
கோபமாய் நான் எழுதியது எங்கேயோ காணம். அதற்கு கூட கோபம் வந்து விட்டது.
இப்ப கோப மூட் போய்விட்டது கணபதி.
எதற்கு கோபப் பட்டேன் என்றால்:
1. லேட்டாக எழுந்தேன். உன் கோவிலை நோக்கி வேண்டுதல்களுடன் நடக்கவில்லை. நடப்பது நடக்கவில்லை.
2. அம்மா ரொம்ப சீரியஸ்ஸான பாவத்துடன் அவளை கண் டாக்டரிடம் கூட்டிப் போக வேண்டும் என்று சொல்கிறாள். எனக்கு பாவமாக உள்ளது. நான் பாவப்பட்டால் முடியுமா? பெண்டாட்டியும் சேர்ந்து மனது வைக்க வேண்டும். அம்மாவால் டி.வி பார்க்க முடிகிறது. படிக்க முடிவதில்லை. சரி இருக்கட்டும் இந்தக் கோபம்.
3. கார் முப்பதாயிரம் செலவுடன் க்ளட்ச் மற்றும் அடி வாங்கிய இடங்களை சரி செய்து வந்திருக்கிறது. பெண்டாட்டி not satisfied. இன்னம் காருக்கு சில இடங்களில் சிராய்பு உள்ளது. காரை எப்படி காரேஜுக்கு எடுத்துப் போவது? அவன் என்ன சொல்வான்? பார்ப்போம் பெண்டாட்டி போக்கிலேயே விட்டு வைப்போம்.

Mind clear ஆகீடுச்சு பகவானே. இப்ப ஒரு மதிய napபிற்கு பிறகு ரொம்ப தெளிவாகவே இருக்கிறேன். இப்ப just, just உன்னிடம் வேண்டிக் கொள்வதற்காக தினமும் நான் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதை வேண்டிக் கொள்கிறேன். 

03 அக்டோபர், 2021

கணபதி பேசுகிறேன்

 பாலா கணபதி பேசுகிறேன்.

பரவாயில்லையே, இன்று உன் வேண்டுதல்களுடன், நல்ல உற்சாகமாக நடந்து வந்து, என்னிடத்தே சற்று நேரம் கம்பீரமாக உட்கார்ந்திருந்தாயே!
உனக்கு அந்த லிங்காயாத்துக்கார பூசாரியை பிடித்திருக்கிறதே!
அவர் பேச்சுக்கள் நடைமுறை தோதாக உள்ளது.
நல்ல உற்சாகமாக கோவிலை வைத்திருக்கிறார்.

காலையில் நீ ஒன்றும் 4 மணிக்கு எழுந்து உட்கார வேண்டாம். ஒரு ஐந்து மணிக்கு எழுந்து உட்கார்ந்தால் போதும்.
காபியை ஜாலியாக குடித்து விட்டு, பாத்ரூம் ஆராமாக போய்விட்டு 6:30க்கு நடையை தொடங்கினால் போதும்.
உனக்கு வேண்டிய உற்சாகத்தை நான் தருகிறேன்.
நீ வேண்டுவதை உனக்கு செய்து தருகிறேன்.
உன் மனதில் வரும் எண்ணங்களுடன் நடையும் சேர்ந்து கொண்டால் கொண்டாட்டமாகத்தானே உள்ளது.


உன் உற்சாகம் எப்படி மதியம் வாழைப் பூ கறி சாப்பிடும் வரை விரிந்து கிடந்தது.
எனக்கு மிகுந்த மகிழ்சி.

02 அக்டோபர், 2021

 இதென்னடா கணபதி?

இதென்னடா கணபதி?

காலை 6:30 வாக்கில், walk போகலாம் - அப்ப வரும் எண்ணங்களை டயரிக் குறிப்பாக வடிக்கலாம் என்ற கனவுடன் இருந்தவனை - வேறு விதமாக அரற்றல் குறிப்பை எழுத வைத்து விட்டாயே !

அலாரம் அடித்தது 5:45 மணிக்கு.

சரி தூங்கும் இன்பத்தை இன்பமாக அனுபவித்து விட்டேன்.

எப்ப நடப்பது? எப்ப என் சிறு சிறு வேண்டுதல்களை உன்னிடம் வேண்டுவது?

கணபதியே சொல் சொல்.

சரி போகட்டும் நாளை பார்த்துக் கொள்ளலாம்.

இன்று சனிக்கிழமை.

நேற்று நான் செய்த தப்பிதங்கள் மனதை வியாபிக்கிறது.

குற்றம் ஒன்று என்னவேன்றால் - லேட்டாக எழுந்துகொள்வது.

மற்றோன்று மனைவியை சரிவர புரிந்திருந்த போதிலும், அவளை நோக்கி காட்டுகத்தல் கத்தியது.

கடைசியில் நான் கத்தியதுதான் மிச்சம். நான் கத்தியது பிசகு.

சரி கணபதி.

தற்போதைய வேண்டுதல்களை சொல்கிறேன் கேள்:

1. காலையில் சீக்கிரம் எழுந்து walking போக வேண்டும்.

2. பெண்டாட்டியிடம் கத்தக் கூடாது.

3. இந்த என்னுடைய பயல் இன்னும் சுறு சுறுப்பாக, உற்சாகமாக மற்றும் தலை கனம் உள்ளாதவனாகவும் இருக்க வேண்டும்.



01 அக்டோபர், 2021

கணபதி

கணபதியை பிரார்தித்துக் கொள்வோம். 
  1. பெண்டாட்டியுடன் கத்திய பச்சாதாபம் குறைய வேண்டும், சீக்கிரமாக குறைய வேண்டும். 
  2. இந்த தமிழில் எழுதும் நூறு வார்த்தைகள் ஆசையுடன் ரூபம் கொள்ள வேண்டும்.
  3. மகன் கொஞ்சம் நடை மற்றும் சுறுசுறுப்பான வழிகளில் அவன் தொப்பையை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மனைவியின் கபம் மற்றும் மூச்சு திணறல் சரியாக வேண்டும்.
இப்படி தினமும் வேண்டிக் கொண்டு, நான் சரியான நேரத்தில், காலையில், ஒழுங்காக அந்த கணபதிராயன் கோவில் வரை நடை பயிற்சி செய்து வரவேண்டும். செய்து வந்தால் மனதிற்கு அமைதியாக இருக்கும். 
அந்த கணபதிராயன் திருமனகொண்டஹள்ளியில் உள்ளான். மனையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளான்.
சின்ன சின்ன வேண்டுதல்கள்.

சில சிக்கல்களை அவன் பார்த்துக் கொள்வான். அந்த சிக்கல்களைப் பற்றி நான் கவலைப் பட்டால் கோபமும் வருத்தமும்தான் வருகிறது. மனதில் உற்சாகம் குன்றிப் போய்விடுகிறது.
விக்னம் தீர்ப்பவன் பிள்ளையாரப்பன். 
அன்றாட சிக்கல்களை நீக்க, உற்சாகம் பெற நடப்போம்.

06 ஜனவரி, 2021

தொடக்கம்

 இரண்டாயிரத்து இருபத்தி ஒன்றில் மேலும் எழுத முயற்சிப்போம்.

கடவுளின் அருள்