24 ஜூன், 2007

சார் மௌவல் தான் கரீக்டு.


தேனீயில் வலைப்பூ திரட்டி,
என்றொரு பகுதியில் சில வலை பதிவுகளுக்கு செல்லும் பயணத்தை மேற்கொண்டேன்.
latest பதிவு ஒன்றும் வசமாக கிடைக்கவில்லை.
இன்னும் பொறுமையான தேடலை மேற்கொண்டு,
நல்ல பதிவுகளை படித்து, இரசித்து, எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்!


! ! எளிமையே இனிமை ! !

..தேடு..கிடைக்கும்..

கிடைத்ததை பிடித்துக் கொள்..

தொலையும்..

கவலை கொள்ளாதே..

எல்லாமே போன கணக்கு தான்..
(from http://holdat9000.blogspot.com/index.html)

**************************************
நேற்றிரவு சன் டி.வி. ஒளிபரப்பிய சிவாஜி திரைப்பட விமர்சனத்தில் ரஜனி வாயசைப்பில்...கண்டுபிடித்துவிட்டாள் என் பெண்!...இவ்வளவு நாள் அவர்களை பாடு படுத்திய வவ்வல் சமாசரத்தை!
சார் மௌவல் தான் கரீக்டு.
மௌவல் என்றால் காட்டு மல்லிகை.
Anonymous comment எழுதிய அன்பரே....
தீர விசாரித்து இந்த மௌவல் மெய்யை உணர்ந்தேன்.
அன்பரே அடிக்கடி இந்த பதிவுக்கு வந்து என் சந்தேகங்களை நீக்கவும்.
*****************************************
அடுத்த பதிவில் த.பு. அவர்கள் comment ஒன்றில் ஏற்பட்ட எண்ணங்களை எழுத முயற்சி செய்கிறேன்!

21 ஜூன், 2007

வவ்வல் - கவ்வல்.

வவ்வலை கவ்விக்கொண்டிடிருந்து விட்டேன்.
ஆமாம் வவ்வல் என்றால் கவ்வுதல்.
நான் நினைத்த மாதிரி 'பூ' இல்லை.
(ஹ்ஹ......ஹா)
வவ்வலை கவ்வியபொழுது நிகழ்ந்த நிகழ்வுகள்:
1)google தேடுதல் பக்கம் கிடைத்தது.
2)வலையில் ஒரு நல்ல அகராதி கிடைத்தது.
3)blog நண்பர் தவபுதல்வன் சிவாஜி படப்பாடல்களை இன்னும் கேட்கவில்லை என்று தெரிந்தது.
4)anonymous நண்பர் ஒருவர் அந்த சொல் வவ்வல் இல்லை மௌவல் என்று கூறிப்பிட்டிருந்தார்.
(ஆமாம் மௌவல் என்றால்?)
அடுத்த பதிவில் தேனீ reader பகுதிக்குச் சென்று சில வலைபதிவுகளை படித்து - என் எண்ணங்களை இங்கு பதிவு செய்ய முயற்சி செய்யவா?

20 ஜூன், 2007

வவ்வலை விடப்போவதில்லை.

வவ்வலை விடப்போவதில்லை.
வவ்வலுக்கான அர்த்தம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
ஆனால் வவ்வல் ஒரு மலர் இல்லை.
வவ்வல் குறித்து வலை பக்கங்கள் கிடைத்தது.
அவை:

1)வவ்வு, [ vvvu, ] கிறேன், வவ்வினேன், வேன், வவ்வ. To take up by the handful, and carry off, வார.
வவ்வல், v. noun. Taking up. (சது.) (from web page:(http://dsal.uchicago.edu/dictionaries/winslow/)




படம் : சிவாஜி
பாடியவர்கள் : ஹரிஹரன், சாதனாசர்கம்

இசை : ஏ.ஆர். ரஹ்மான்பாடல் : வைரமுத்து

பல்லவி========ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னைகையோ வவ்வல் வவ்வல்உன் பூவிழிப் பார்வை போதுமடிஎன் பூங்கா இலைகளும் பதறுமடிஉன் கால்கொலுசொலிகள் போதுமடிபல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு

ஆ: அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு

பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)

ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னகையோ வவ்வல் வவ்வல்சரணம்-1=========

பெ: ஹோ.. ஆ..ஆ..ஆ..

ஆ: ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்

பெ: புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்பூவுக்குள் குளிப்பீரா
ஆ..(புன்னகைப் பேரரசே)விடியும்வரை மார்புக்குள் இருப்பீராவிழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா

ஆ: ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்செயல்புயல் நானடி

பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)

ஆ: பூம்பாவாய்..சரணம்-2=======

ஆ: பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்வந்து ஒளிந்து கொண்டேன்
சுகம்சுகம் கண்டேன்

பெ: ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடிவெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்

ஆ: அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்முரண்பாட்டு மூட்டை நீ

பெ: வாஜி.வா வா வா வா..வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)

ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....

ப்ளாகிலே சிவாஜி (ரஜினி) படங்கள்.



ப்ளாகிலே சிவாஜி (ரஜினி) படங்கள் போடுவோம்.


ரஜினி ரசிகன் அல்லவா நான் !

18 ஜூன், 2007

.சிவாஜி


வியாழக்கிழமை 14/06/07 முதல் சிவாஜி திரைப்படத்தைப் பற்றி தகவல்கள் நிறைய படித்தேன், கேட்டேன் மற்றும் பார்த்தேன்.


much hyped film


பாடல்கள் கேட்டேன்.

ஒரு பாடலில் ஆம்பல் மற்றும் வவ்வல் வார்தைகள் வருகிறது.

பாடல் இனிமையாக உள்ளது.

தேனியில் கிடைக்கும் அகராதியில் ஆம்பல் என்றால் lilyப் பூ என்று தெரிந்து கொண்டேன்.

வவ்வல் தேடியபொழுது, வவ்வால் கிடைத்தது.

வௌவல் என்று எழுத வேண்டுமா?
__________________________________________________________________
வவ்வல் 1 1. bat, vespertilionidae cheiroptera ; 2. pomfret,
sea-fish, stramatovsparu
ஆம்பல் 4 ஆம்பல் 1. water-lily, nymphaea lotus ; 2. musical pipe;
3. a melody-type played on a pipe; 4. bamboo; 5. blow-horn; 6. elephant; 7.
toddy; 8. a very high number; 9. affliction; 10. arrangement, order; 11.
moon
___________________________________________________________________

வௌவல் என்றால் எந்த மலர்?

14 ஜூன், 2007

தவபுதல்வன் கவனத்திற்கு.





















முதலில் dashboard செல்லவும். (படம் பார்க்கவும்)


அடுத்தது settings.


settingsல் comments.


படத்தில் ஒரு வட்டம் போட்டிருக்கிறேன்.


commentsல் மூன்று options உள்ளன.


anyone தேர்ந்தெடுக்கவும்.

only members of this blog only
registered users
optionகள் -
என்னை மாதிரி கிறுக்கன்கள் மாத்திரம் கிறுக்குவார்கள்.
anyone, blogகை படிக்கும் எல்லாக் கிருக்கற்களும் கிறுக்குவார்கள்.

13 ஜூன், 2007

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

ஹல்லோ !! பாலசுப்ரமணியம் கணபதி, வணக்கம்.நானா?,என்னைப் பற்றியா!காத்திருக்கிறேன் கண்களை விரித்து. -
தவபுதல்வன் எனது வலைபதிவில் எழுதிய comment.

நற்றி.....

இவர் ஒரு கை தேர்ந்த techie,
அருமையான கவிஞர்.
எழுத்தில், சந்தேகங்களை நிவர்த்தி செய்வதில் மிகவும் சுறுசுறுப்பு.
குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஒரு பதிவை ஏற்படுதியுள்ளார். .
மேலும் சொல்கிறேனே அடுத்த பதிவுகளில்.


ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் -
வெறும்கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(2)(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனிதஇன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(2)(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதைநமக்காக நம் கையால் செய்வது நன்று

(2)(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) -
அதில்பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(2)(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க (2)
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(2)(ஏழு)


தவபுதல்வன், தேனீ

(தொடரும்.....)

11 ஜூன், 2007

தவபுதல்வன்

தவபுதல்வன்
- இவர் நான் compose tamil தளத்தில் சந்தித்த நண்பர்.
ஏதாவது வேலை செய்யும்பொழுது ஒரு துணை கிடைத்தால் அந்த வேலையின் பளு தெரியவே தெரியாது.
அந்த வேலை செய்ய இன்னும் ஆர்வம் அதிகரிக்கிறது.
இந்த பதிவுக்கு அவர் முயற்சிகள் எனக்கு உற்சாகமளிக்கிறது.

இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தேனீ தளத்தைதான், இந்த பூ வட்டமடித்துக்கோண்டிருக்கும்.
இன்று தேனீயில் தமிழ் பாடல் வரிகளுக்கான பக்கத்திற்குச் சென்றேன். பாரதியின் வரிகளை copy செய்தேன்:

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

பாரதிதான் கடவுளை தீண்டிய அனுபவத்தை, எவ்வளவு அழகாக சொல்லுகிறார்?

தவபுதல்வனைப் பற்றியும் தேனீயில் நான் சுவைத்த தேனைப் பற்றியும் எனது அடுத்த பதிவில் எழுத ஆசை!

08 ஜூன், 2007

தேனீ


ஓ..

இன்று வலையில் எங்கெல்லாமோ சென்று விட்டேன்.

எவ்வளவு பதிவுகள்?

எவ்வளவு வசதிகள்?

தற்போது தேனீ வலையகத்தில் மாத்திரம் தேடுகிறேன்.

தேனீ அகராதியில் link சொல்லுக்கு தொடுத்தல் என்ற அர்த்தம் கிடைத்தது. நல்ல தமிழ் பக்கங்களை இந்த பக்கத்தின் தொடுத்தல் பகுதியில் தொடுக்கிறேன்.

தேனீயில் இன்னும் என்னவெல்லாம் வச்திகள் உள்ளன?
தொடர்கிறேன்....தொடுக்கிறேன்.

பக்கதில், அதாவது தொடுத்தல் பகுதியின் மேலுள்ள படம் மற்றும் இந்த பதிவினூடே இணைத்த படம் பிடித்துள்ளதா?

படிப்பது எழுதுவது சும்மாயிருப்பது!

சில சமயம் படிப்பது சுகம்.
சில சமயம் எழுதுவது சுகம்.
சும்மாயிருப்பது சுகமோ சுகம்!
சும்மாயிருக்கும்பொழுது,தமிழ் வலை தளங்களுக்கு <லின்க்> கொடுத்து வைக்கலாம்.
இந்த குறிப்புடன் வரும் லின்க்:

தேனீ

லின்க் என்பதை தமிழில் என்ன சொல்லலாம்?
ஒவ்வொரு குறிப்பையும் ஒரு கேள்விக்குறியுடன் முடிக்கலாம்.
அதற்கான பதில் தயாரானவுடன், அடுத்த குறிப்பை தொடங்குகிறேன்.
குறிப்புகளுக்கு தொடர்பு வைத்து விட்டேன்!
ஆக லின்க் (link) என்பதற்கு தமிழ் சொல் என்ன?

06 ஜூன், 2007

'வலை கிறுக்கல்'

கிறுக்கல்கள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கட்டும்!
சந்தோஷம் என்னவென்றால், தமிழில் blog செய்ய கற்றுக்கொண்டுவிட்டேன்!
blog என்ற ஆங்கில சொல்லை தமிழில் என்ன சொல்லலாம்? வலை குறிப்பு? என்னைப் பொறுத்தவரை 'வலை கிறுக்கல்' பொருத்தமாகப்படுகிறது.இந்த கிறுக்கலை எழுத உதவியவை:
1)Compose Tamil
2)
தேனீ
மற்றும் நண்பர் அம்பி.
அடுத்த கிறுக்கலை இதனுடன் சம்பந்தப்படுத்த வேண்டும்.

கடவுளின் அருள்