23 செப்டம்பர், 2014

விகடன் வாசித்த விவரத்தை விளக்குங்களேன்.

அந்தக் காலத்தில் ஜோக் அட்டைப் படத்துடன் கூடிய குமுதம் அளவிலான விகடனை படித்துக் கொண்டிருந்தேன் என்று ஆரம்பிக்க மாட்டேன். (குமுதத்தை விட ஒரு சுற்று பெரிசு விகடன்)
பெரிய அளவிலான விகடன் வாசிப்பு குறைச்சல் தான். இருந்தாலும் விகடன் வாசிப்பு வரப் பிரசாதம் தான்.

நிற்க.

சொல் வனம் சரியாக இருக்கா? கேள்வியைப் பாருங்க. வார்த்தைகளை வ'கரத்திலேயே அமைத்துள்ளேன்.
சொல் வனம் பகுதி நல்ல வளமாக உள்ளது விகடனில்.
வாசகர்கள் வனப் பகுதியை நன்கு வளப் படுத்துகிறார்கள்.

ப. தியாகு எழுதிய இந்த சொல் வனத்தை பாருங்களேன்:

 மிடறு மிடறாக....
சற்றே தகிக்கிறது என்றாலும்
மறுக்கவியலாது
அது
ஒவ்வொரு மிடறிலும்
இனிப்பதையும்,
தேநீர்போலும்
வருமிந்த
ஊடல்.

கவிதைப் பக்கத்தில் ஒரு குழந்தை வகுப்பெடுக்கும் நேர்த்தி, அப்படியே அதை உங்களுடன் பகிர மனம் விழைகிறது.



​​

எல்லாம் செய்கிறேன். ஆனால் சிறுகதை வாசிப்பு அபூர்வமாக அமைகிறது. சுப்ரபாரதிமணியன் எழுதிய  "இது அழகிகளின் கதையல்ல"  ஒரு நெருடலை எற்படுத்தியது. 

வாசிப்புக்கு சிறந்தது சில கட்டுரைகள். நடப்புக் கட்டுரைகள். பிரியா தம்பியின் "பேசாத பேச்செல்லாம்.." நல்ல பேச்சு. மகளிர்  சுற்றுலா செல்லுகையில் ஏற்படும்  இன்னல்களை நன்றாகப் பேசுகிறது. ஒரு வரியை சுட்டு ட்வீட் ஆக்கினேன்.


வாசிக்கும் ரசனையை பற்றி இதுவரை வரைந்தேன். (வ...வா!!)

இதைத்  தவிர சமீப கால செய்திகள்....சினிமா செய்திகள் ...இன் பாக்ஸ் முதலியன.....இவைகளை பிறகொரு தரம் கூற விரும்புகிறேன்.

இந்த ப்ளாக் பாணியை நான் விகடன் பகுதியான நானே கேள்வி...  நானே பதில்...பகுதி போல் அமைத்துக் கொண்டுள்ளேன். ஒரு நாள்   இந்தப்பகுதியில் நான் எதாவுது எழுத வேண்டும் என்ற அவா உள்ளது.




--
cgbalu from Hubbali

16 செப்டம்பர், 2014

என்னப்பா, என்ன சமாச்சாரம்?

நல்ல சமாச்சாரம் தான். தமிழ் ப்ளாக்ல எழுத வந்திருக்கேன். ரொம்ப நாளுக்குப் பிறகு குமுதம் வாசித்தேன். 
குமுதம் இப்பொழுது கர்நாடகாவில் விலை ரூ 17/-
குமுதம் விலை பைசாக்களாக இருக்கும் பொழுது, வயசும் சிறிசாக இருந்தது. விலை ஒற்றை டிஜிட் ரூபாய்களாக இருந்த பொழுது என் வயது முப்பதை கடந்து விட்டது. இன்னும் எஸ் ஏ பி , சுந்தரேசன், ரங்கராஜன் குழுமம் என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. லைட்ஸ் ஆனும், அரசு பதில்களும் லைட்டாகப் படித்து மனம் லைட்டாகத்தான் ஆனது. 
இப்பொழுது, லைட்ஸ் ஆனில் (சுனில்) லேட்டஸ்டான சூடான சினிமா செய்திகளை படிக்கும் ஆர்வமில்லை. பழைய சினிமா சம்பந்த கேள்வி பதில் பகுதி பிடிக்கிறது.
அரசு பதில்கள் ஓக்கே. இன்னும் முதுகுகளும், மேடு பள்ளங்களும் அரசு பதில்களை அதே களையுடன் வைத்திருக்கின்றன.
சினிமா செய்திகள் (கவர்சிப்படங்களை தவிர) படிக்க ஆர்வமில்லை. 
தன்னம்பிக்கை கட்டுரைகள் உள்ளன. இப்பொழுது இறையன்பு எழுதுகிறார்.
ஒருப் பக்க கதைகள், கொஞ்சம் நீளமான கதை எல்லாம் சுவாரஸ்யமாக உள்ளன. ஒரு பேய்கதை நன்றாக இருந்தது.
விஜய் டி வி நிகழ்சி ஒன்று குறித்து சர்சை ஒன்றிருந்தது. 
தேர்தல் குறித்து தலையங்கம், கார்டூன் மோடிக்கு கொடுக்கும் ஐடியா.
தீபாவளி குமுதம் இதழ்கள் குறித்து அறிவிப்பு பிரமாண்டமாக உள்ளது.
தீபாவளி இதழ்கள் வாங்கலாம்மா?
குமுத பாணி சமாச்சாரங்கள் எனக்கு ட்விடரிலேயே கிடைத்து விடுவதால்....குமுதம் வாங்கும் பழக்கமே விட்டு விட்டது.


--
cgbalu from Hubbali

01 பிப்ரவரி, 2014

கேள்விகள் கேட்க பயமா?

பயம் தான்.
நீ பயந்தால் உனக்குத்தான் நஷ்டம்.

பாரு, 
உங்க பாஸ் பயப்படாமல் கேள்வி கேக்குறாரு இல்ல?
உம்மை சரியாக வேலை செய்விக்க, அவரு கேள்வி கேட்பதில்லை?


சரியா வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே உனக்கு ஒரு மனைவி இருக்காங்க. 
கேள்வி கேட்பாங்க. 
பதில் தெரியவில்லையா? 
அசடாக இருந்து விடு. 
சமத்தாக வெளியே வா.
கேள்விகள் கேட்கும் பயத்தை விட்டு விடு.
கேள்.
உருப்படுவாய்.

cgbalu from Hubbali

13 ஜனவரி, 2014

அடுத்த கேள்விக்காக ஒரு குறிப்பும் எழுதிக்கொள்ளவில்லையே?


ஆமாம் புது வருடத்தில் அந்த பழக்கத்தை விட்டு விட்டேன். எதற்கு ஒரு பொருளை வைத்துக் கொண்டு முழிக்க வேண்டும்? தோன்றும் எண்ணங்களை உடனே எழுதி விடுவோம். எழுத முடியாவிட்டால் அதை மறந்து புது எண்ணங்களுக்கு காத்திருப்போம்.

05 ஜனவரி, 2014

2014ல் இந்த பிளாகில் அதிகம் எழுதுவீர்களா?

இந்த 2014 ஆண்டில் சந்தோஷமாக எழுத அடிக்கடி வருவோம். சந்தோஷத்திற்காக கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.
280 டயரி வலை தளத்தில் தினமும் ஒரு 280 தமிழ் எழுத்துக்களை தட்டிக்கொண்டு வருகிறேன்.


அது மாதிரி இங்கும் எதாவது எழுதி, நாலு பேரை படிக்க வைக்க முயற்சி செய்கிறேன்.
என்ன, டயரி எழுதுவது சுலபம்.
அப்ப அப்ப நடக்குற கஷ்டங்களையும், படும் வேதனைகளையும் புலம்பி விடலாம்.
அதிகம் யோசிக்கவோ, தப்பாக எழுதி விடுவோமோ என்ற பயமும் தேவையிருக்காது.
எதாவது ஒரு பொருளைப் பற்றி மேலும் தகவல்கள் சேகரிக்கும் பாடும் பட வேண்டாம்.
சந்தோஷமாக எழுத கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.
வாரம் ஒரு முறை கொஞ்சம் மெனக்கிடலாம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
இன்னும் அடிக்கடி வர முடிந்தாலும் சந்தோஷம்தான்.
சுலபமாக டயரி எழுதும் பொழுது, எதாவது ஒரு சின்னப் பொருளைப் பற்றி நாலைந்து கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டியது.
மனதிலிருந்தோ, வேறு தகவல்களிலிருந்தோ சந்தோஷமாக எழுத வேண்டியது தான்.

CYBERSIMMAN\'S BLOG

 சென்றால் கூட இங்கு எனக்கு எழுத பொருள்கள் நிரம்ப கிடைக்கும்.

கடவுளின் அருள்