24 பிப்ரவரி, 2012

சமீபத்தில் ஏதாவது கவிதை எழுதினீர்களா?

எழுதினேன். இறப்பைப் பற்றிய ஒரு கவிதை. சில நேரங்களில் மறைந்த என் உறவினர்கள் நண்பர்கள் நான் ரசித்த கலைஞ்சர்கள்  எல்லோரும் நினைவுக்கு வருவார்கள். எவனும் எவளும் நிரந்தரமில்லை என்பதை ஒரு வித பயத்துடன் உணர்ந்த பொழுது உருவானது இந்தக் கவிதை.


மறைந்தால்......
அவ்வளவேதான்..........!
"மறைந்தால்"  என்றால் பயம் வருகிறது.
"மறைவும்" "பயமும்" இன்றியமை.


மறைந்தவர்களைப்பற்றி யோசிக்கும்பொழுது.....
புதிதாக மறைந்தவர்கள் தான்,
மிகுந்த துன்பத்துடன் நினைவிற்கு வருகிறார்கள்...


பழைய மறைந்தவர்கள்
மறைந்துவிடுகிறார்கள். 

அட அடுத்த பதிப்பிற்கு ஒரு கேள்வி ரெடியாக உள்ளதே!
 "சினிமா பார்க்கும்பொழுது என்ன செய்வீர்கள்?

கடவுளின் அருள்