26 செப்டம்பர், 2018

கருத்துப்படிவம் - எண்ணம் - மனஉரு.

கருத்துப்படிவம்
எண்ணம்
மனஉரு.
ஒரு கருத்தை கேட்கிறேன்.
புரிகிறது.
மனம் கருத்தை ஒரு மாதிரி புரிந்து கொள்கிறது.
அதை உங்களிடம் எழுத்து மூலமாக புரிய வைக்க முடியமா?
நான் எழுதியது,  நான் புரிந்து கொண்ட கருத்தை அப்படியே சொல்லுமா?
சந்தேகம்தான்.
நான் புரிந்து கொண்ட கருத்து, அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை அப்படியே மனதில் ஏற்றுக் கொண்டுள்ளதா?
சந்தேகம்தான்!
இப்பொழுது என்ன சொல்ல விழைகிறேன்?
மனம் நான் உணர்ந்ததை சொல்ல விரும்பிகிறது.
சொற்ப எண்ணங்களுக்கு வார்த்தைகள் வருகிறது.
அந்த வார்த்தைகள் என் மன உருவை ப்ரதிபலிக்கிறதா?
தெரியவில்லை.
இருக்கட்டும்.
90 எண்ணங்களுக்கு/கருத்துக்களுக்கு ஒரு 9 வார்த்தைகள் கிடைக்கிறதா?
நல்லது.
கவலைப் பட வேண்டாம்.
81 எண்ணங்களை சொல்ல முடியவில்லையே என்று வருந்துதல் வேண்டாம்.
9 கருத்துக்கள் கிடைத்தனவே!
9 புரிதல்களை வைத்து செயல் படு. சொல்லு. எழுது.
எல்லா புரிதல்களையும் புரிய வைப்பது கடினமன்றோ!
இது ஒரு கருத்துப்படிவம்.












  



14 செப்டம்பர், 2018

கல்கி கேக்கலா

கல்கி கேக்கலா என்று உச்சரிக்க வேண்டும்.  
கல்கி கொச்சலின் இல்லை.
டிவிட்டர் கல்கி கண்மணி என்று சொல்கிறது.
வித்தியாசமாக இருக்கிறது, கல்கியின் performance.
சின்னம் போல் உள்ள இந்தப் பெண் கலைஞரின் திறமையை முதலில்
அந்த BBC Podcast ல் மெச்சினேன்.
பாண்டிச்சேரியில் பிறந்த இந்த இளைஞி விஷயங்களை அழகாக சொல்லுகிறார்.
#MyIndianlife என்ற தலைப்பின் கீழ்,
ஒரு இளைஞரின் belly dance திறன், ஒரு திக்கும் இளைஞரின் இசை உயர்வையும்
மிக நன்றாக சொல்லுகிறார்.
உலக வாழ்க்கையில் மனிதர்களில் எவ்வளவு பார்க்காத நிறங்கள்.
இந்த podcast கேட்ட  உத்ஸாகத்தில் கல்கி நடித்த படங்களை பார்த்தேன்.
‘’Waiting’’ என்ற படத்தில், கோமா ஸ்டேஜில் இருக்கும் கணவனுடன்,
மருத்துவமனையில் இருக்கையில் அங்கே அதே மாதிரி இக்கட்டுடன் இருக்கும்
மத்திய வயதிய சிவா என்ற  ஆணுடன் ஏற்படும் நட்பை
நன்கு நடித்துக் காட்டியிருந்தார்.
Ribbon படத்தில், பெண் குழந்தை வளர்க்கும் பொறுப்பை பிரதிபலித்திருந்தார்.
குட்.

10 செப்டம்பர், 2018

நிதானமாக எழுதுவோம்.

நூறு வார்த்தைகள் எழுதும் அனுபவத்தை ஒரே மூச்சில் அனுபவிக்க வேண்டுமா?
தேவையில்லை.
வெள்ளிக்கிழமை மதியம் இதை எழுத தொடங்கி,
திங்கட்கிழமை நிதானமாக முடித்துக் கொண்டு blog ல போஸ்ட் பண்ணிக்கலாம்.
திங்கள் இல்லையா? செவ்வாய் பண்ணிக்கலாம்.
‘அம்மா’ பற்றிய சொற்களையும், ‘எழுத்து என்ன சொல்கிறது?’
என்பதை பற்றியும் புனைந்த வார்த்தைகளை  இது மாதிரித் தான் செய்தேன்.

இரண்டு நாட்கள் எழுதும் சந்தோஷத்தை அனுபவித்தேன்.
வார்த்தைகளை மாற்றினேன். யோசித்தேன். நிதானமாக எழுதினேன்.
எழுதுவதை விரும்பினேன்.
இந்த குறிப்பிற்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கிறேன்.
எழுதிய வார்த்தைகளை blog ல் போடும் முன் திரும்ப படித்து,
சந்தோஷத்தை அனுபவித்துக் கொள்கிறேன்.

கல்கி கொச்லின்’ பற்றிய எழுத்துக்களை எழுதும் பொழுது அவர் நடித்த
திரைப் படங்கள் பார்க்க வேண்டுமென்றிருந்தேன்.
இரண்டு படங்களை watch list ல போட்டு வைத்துள்ளேன்.
‘Ribbon’ மற்றும் ‘Waiting’
Hot Star  app ல கிடைத்துள்ளது.
காத்திருக்கிறேன்...படங்களை பார்க்க, எழுத…..


06 செப்டம்பர், 2018

மனதின் வார்த்தைகள் வேண்டும்


கடந்த குறிப்பில், ‘எழுத்து’ என்ன சொல்கிறது என்று சொல்லுகையில்
ஒரு படத்தை போட்டு சொன்னேன். கூகிள் கீப்பில்,
நான் படித்த ‘’வாழ்க்கை’ மற்றும் ‘கலை’ பற்றிய ஒரு மேற்கோளை வைத்திருந்து,
அதை படம் பிடித்துக் கொண்டு,  
குறிப்பில் நுழைத்து, படித்துக் கொண்டே ஆங்கிலத்தை தமிழ் படுத்தினேன்.
அப்படி செய்தது எனக்கு பிடித்திருந்தது.


இந்தக் குறிப்பிலே நான் என் அம்மாவைக் குறித்து 2016ல் 100 words.com
எழுதியிருந்த ஒரு குறிப்பை படமாகப் போட்டு,
சில வார்த்தைகளை எழுத விரும்புகிறேன்.


‘மொழி’ திரைப் படத்திலே ஜோதிகா ஊமை மற்றும்
காது கேளாதவராய் நடித்திருந்தார்.


அம்மாவுக்கு காது கேட்கவில்லையே என்னும் ஏக்கம், என் தலையாய ஏக்கம்.


படத்தின் ஹீரோ, காதலிக்கு காது கேட்கவில்லை என்றாலும் விரும்புகிறார்.


இந்த திரைப் படம் பார்த்தபின் என் ஏக்கம் குறைந்தது.


அன்பு செலுத்த என் பேச்சு அம்மாவுக்கு  கேட்க வேண்டும் என்பது,
அவசியமே இல்லை.

மனதின் வார்த்தைகள் வேண்டும்.

04 செப்டம்பர், 2018

எழுத்து, அல்லது எழுதுவது என்ன சொல்லித் தருகிறது?

கலையால்,  போர், தனிமை,  பொறாமை, பேராசை, மூப்பு, சாவு   
இவைகளிலிருந்து நம்மை தடுத்து நிறுத்தி நம் வாழ்வை  காப்பாற்ற முடியமா?



கலையால் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றுதான் நமக்கு ஆசை.


கலையால் ஒன்று செய்ய முடியும்: இவையெல்லா இன்னல்களும்  
வாழ்க்கையில் இருந்தும், அதை மறக்க செய்து,
நம் வாழ்க்கையை  புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க செய்யும்..


வாழ்க்கை ஒன்றும் நமக்கு சொந்தமானதல்ல -உரிமை கொண்டாட.


எழுத்து, அல்லது எழுதுவது என்ன சொல்லித் தருகிறது?


முதலில் வாழ்க்கை, நாம் உயிருடன் இருக்கிறோம்
என்பதை நமக்கு உணர்த்துகின்றது.  உயிருடன் இருப்பது ஒரு பரிசு, ஒரு சலுகை.
வாழ்க்கை ஒன்றும் நமக்கு உரிமையானது இல்லை.


நமக்கு அளிக்கப் பட்ட  வாழ்க்கையின்
அடிப்படையான உயிரை முதலில் நாம் சம்பாதிக்க வேண்டும்.
வாழ்க்கை நம்மை  மிகுந்த விருப்பத்துடன் உயிரூட்டியிருப்பதால்,
நம்மிடமிருந்து சில வெகுமதிகளை எதிர் பார்க்கிறது.


அந்த வெகுமதிகள் தான் கலை.
ஏதாவது கலை கற்போம்.
ஏதாவது இன்பத்துடன் படைக்க முற்படுவோம்.

01 செப்டம்பர், 2018

‘கல்கி கொச்லின்’

என்ன குரலப்பா- கணீர் என்று! வெண்கல குரல் என்பார்களா?
(சீக்கிரம் எழுந்திருப்பதென்றால், மூன்று மணிக்கே எழுந்து
முழித்துக் கொண்டிருப்பதில்லை.
ஒரு 5:30 க்கு எழுந்திருச்சுக்கணம்.
ஃபிரெஷாக நூறு வார்த்தைகள் எழுதணம்.
ரைட்டு.)
குரல் என்று தொடங்கினேன் அல்லவா? அது ‘கல்கி கொச்லின்’  என்பவரின் குரல்.
BBC Podcast கேட்டுக் கொண்டிருந்தேன்.
கல்கி கோச்லின் பாரத பெண்மணிகளை சிலாகித்து இந்த podcast ல
ப்ரெசெண்ட் பண்ணிக்கிட்டிருக்காங்க.
ISRO வில் பணிபுரியும் தாக்ஷாயினி என்ற பெண் விஞ்ஞானியைப் பற்றி
அவர் கூறிய தகவல்கள் inspiring ஆக இருந்தது.
தாக்ஷாயினி பாரதத்தின் மங்கள்யான் திட்டத்தில் பெரும் பங்கு வகித்தவர்.
சாட்டிலைட் எந்த ஸ்பீடிலே சென்றால்,
செவ்வாய் கிரகத்தின் சமீபத்தில் அடையலாம் என்பதை கணிக்கும்
கணக்கை செவ்வன செய்தவர் தாக்ஷாயினி.
சாடிலைட் ஸ்பீடை கணிக்கும் இவர், இருபது பேருக்கும் சமைப்பார்களாம்.
மேலும் ஒரு எபிசோட் கேட்க சமயம் செய்து கொள்ள வேண்டும். ஓக்கே!
Kalki Koechlin

ஒரு ஆறுதல். ஒரு பிரமிப்பு.

காத்திருக்கும் சமயத்தில் நூறு வார்த்தைகள் எழுதலாம்.
மனைவியுடன் NMR Scan center ல காத்திருக்கேன்.
Lungs ல எதோ மச்சம் வளர்ந்திருக்கிறதா என்று டாக்டர் பார்க்கப் போகிறார்.
டாக்டர்களிடமும், மருத்துவ சோதனைச்சாலைகளுக்கும் வந்தால் ஒரு பிரமிப்பு.
எத்தனை மக்கள் வந்திருக்கிறார்கள்!
நமது மாதிரியே எல்லோருக்கும், எதாவது உபாதைகள்.
ஒரு ஆறுதல்.
ஒரு பிரமிப்பு.
உயிர் வாழ்தலின் அவஸ்தைகள்.
தனியாக இந்த அவஸ்தைகளை யோசிப்பதை விட, இந்த ஆசுப்பத்திரி சூழலில் யோசிப்பது மேல். பயத்தை கொடுப்பதில்லை.
காத்திருத்தல், நமக்கோ நம்முடன் இருப்பவர்களுக்கோ எதோ செய்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தியை கொடுக்கிறது.
மனைவி நலமுடன் இருக்கட்டும்.
அவள், இருமலாலும் மூச்சு முட்டுவதாலும் அவஸ்தையுறும்பொழுது மனதிற்கு கஷ்டமாக இருந்தது.
அவள் இயற்கை வைத்தியத்திலோ, வென்னீர் குடித்தோ சரி செய்து கொள்ளலாம் என்று பெரும் பாடு பட்டாள்.
டாக்டர்கள் உதவியும் தேவை. அவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும்.
கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுக்க வேண்டும்.
காத்திருத்தலும் வேண்டும்.

கடவுளின் அருள்