28 ஏப்ரல், 2019

இது ஐந்தாவது போஸ்ட்.

இது ஐந்தாவது போஸ்ட்.  எதோ அச்சுப் பிச்சு எழுதுவதென்றாலும்,
இதற்காகவே  கொஞ்சம் Time எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
நச்சு பிச்சு என்று வேலைகள் இருந்து விட்டால்  
ஒரே மூச்சில் ஒன்றும் எழுத முடிவதில்லை.


என்ன சொல்ல விழைகிறேன் என்று எனக்கே தெரிவதில்லை.
இந்த கணினி உபயோகித்து எழுதும் குறிப்புக்களில் இது ஐந்தாவது.
அடுத்த வாரம் இரண்டு நாட்கள்.
இன்னொரு குறிப்பு எழுதி விடலாமென்ற நம்பிக்கையுள்ளது.
அப்புறம் இந்த கணினி, இந்த செக்ஷன் பந்த்.


வெள்ளிக்கிழமை இதை எழுதுகிறேன்.
இன்று பிசி. எனது ஆபிஸ் மக்களுக்கு சாப்பாடு போடுகிறேன்.
20 மக்களை வேறு ஆபிசுகளிலிருந்து அழைத்திருக்கிறேன்.
ஒரு 80 மக்கள் என்பது கணக்கு. பணம்  எவ்வளவு ஆகும்?


கொஞ்சம் anxiety!



சென்ற குறிப்பில்  சொன்ன ஜியோ பில் பாஸானது.  
மனம் மனதை மெச்சியது.
இப்போதைய ஆதுரம் , விருந்து மற்றும் சோலார் பில்கள்.
அடுத்த குறிப்பு எழுதும் பொழுது இதை பற்றி சொல்ல வேண்டும்.

19 ஏப்ரல், 2019

நான்காவது வாரம்

எனக்குப் பிடித்தமாக நாள், வாரம் தொடங்க வேண்டுமா என்ன?

அந்த நாள் இட்டுச் செல்லுகிற போக்கில் சென்று நமது முக்கியமான குறிக்கோளையும் நடத்திக் கொள்ள வேண்டாமோ?

முக்கியமான குறிக்கோள் என்ன?
மனம் மெச்சும் படி செயல் செய்ய வேண்டும்.

ஒரு ஜியோ பில் பாசாகாமல் தேங்கி நிற்கிறது.
சந்தோஷுக்கு கால் சரியில்லையென்று லீவ் போட்டுவிட்டு சென்று விட்டான். பாபுவின் உதவி பெற்று வேலை செய்யலாமென்றால்,
அவனுக்கு சர்ச் வேலைகள் உண்டென லீவ் போட்டு விட்டான்.
ஜியோ பில் எப்படி பாஸ் ஆகி மனம் என்னை மெச்சும்?

இருக்கட்டும்.

எனக்கு பிடித்தமானது நடக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை
.
இதென்ன எழுத தோன்றும் பொழுது எழுத முடியாததும், எழுத எத்தனிக்கையில் வார்த்தைகள் வராததும்?

இந்த வாரம் மூன்று வேலை நாட்கள். இரண்டு விடுமுறைகள்.

அமீர் திருமண ரிசப்ஷன் திங்கட்கிழமை. MTS ரயில்வே கலியாண மண்டபத்தில்.

சீனு, பிராதர் அர்ஜுன் ஜதே காரில் சென்று வந்தோம்.



12 ஏப்ரல், 2019

ஒவ்வொரு நாளும் சில வார்த்தைகள்.

இந்த வாரம் மூன்றாம் போஸ்ட் வாரமல்லவா?
இன்று திங்கட்கிழமை.
ஒவ்வொரு நாளும் சில வார்த்தைகள் எழுதிக்கொள்ளலாம்.
இன்று செவ்வாய்கிழமை. இன்றைய வார்த்தைகள்:
புதனும் வியாழக்கிழமையும் CL போட்டுக் கொண்டுள்ளேன்.
இன்னும் ஒரு CL பாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமைக்கு ஆபிஸ்  வந்து விட்டேன்.
புதனும் வியாழனும் பயணங்கள். ‘ராணி சென்னம்மா’
மஹாதேவனுடைய புது டாடா SUV வண்டி மற்றும் சித்தகங்கா இண்டர்சிட்டி.
ஆகிய பயண ஊர்திகளில் பயணப்பட்டேன்
பயணத்திற்கான நிகழ்வு: மஹாதேவனுடைய நிச்சியதார்த்த வைபவம்.
இந்த வைபவம் வெல்லூர் ‘லட்சுமி பவன்’ ஹாலில் நடந்தது.
நன்று.
மகனையும்  பார்த்தேன்.
அவன்  புகப் போகும் புது  மனையை பார்க்க முடியவில்லை.
இருக்கட்டும்.  அவனுக்கு நல்லவைகள் அமையட்டும்.
இன்னும் சொற்ப தினங்களே.  இந்தக் கணினியை பயன் படுத்தும் யோகம்.
இப்போதைய கணக்குப்  படி 9 நாட்கள்.

அடுத்த வாரம் மூன்று நாட்கள் கிடைக்கும்,
இந்தக் கணினியை உபயோகப் படுத்த.
எழுதி விடுவோம்,  
இன்னொரு நூறு வார்த்தைகளை ஜம்மென்று.

04 ஏப்ரல், 2019

இந்த வாரத்தின் போஸ்ட்.

இந்த வாரத்தின் போஸ்ட்.
இன்னும் 4 வாரங்கள் மற்றும் ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் எஞ்சியுள்ளது .
நல்லது,  ஐந்து போஸ்ட்  குறிக்கோளில் இரண்டாவது  போஸ்டடை
தொட்டுவிட்டேன்.
ஒரு படம் இணைக்கிறேன்.
இது தற்போது நான் செய்யும் பில் பாசிங் வேலைக்கு உதவும் AIMS.
நல்லா இருக்கில்ல?
ஒரு ஐடி இருக்கு. ஒரு  கடவுச் சொல் இருக்கு. AIMs காரன்
ரிஜிஸ்ட்டர்ட்  மொபைல் நம்பருக்கு OTP அனுப்புவான்.
இவ்வளவு சாவிகளை உபயோகித்து  AIMs திறந்து, சொற்ப வேலை செய்வேன்.
நம்ம செக்ஷன் பசங்க, இந்த AIMs உபயோகித்து நிறைய  பில்கள் பாஸ் செய்து
என்னை கையெழுத்திட வைப்பாங்க.
நல்ல  வேலையல்லவா?
என் செக்ஷன் பசங்க பெயர்கள் யாது?
பூஜாரி , பாபு  ரத்தினம், சந்தோஷ் பிசிரொட்டி.  
பூஜாரி மற்றும் பாபு ரத்தினத்தை பசங்க என்று சொல்ல முடியாது.
ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள்.
என் பையன் பெயருடைய சந்தோஷை பசங்க என்று சொல்லலாம்.

இளம் குழு!

கடவுளின் அருள்