24 ஜூலை, 2007

பிரச்னை


பிரச்னை; பிரச்சினை எப்படி எழுதுவது சரி?
இது ஒரு பிரச்னை! டி.வி. மெகா
சீரியல் முழுவதும் பிரச்னை.
பிரச்னை பிரச்னை என்று சீரியலை
ஓட்டுகிறார்கள்.
மகனுக்கு பிரச்னை வார்த்தை பிடித்திருக்கிறது.
சந்தோஷமாக
இருக்கும் சமயத்தில், "அம்மா எனக்கொரு பிரச்னை" என்று சொல்வான்.
எங்களுக்கு ஆனந்தமாய் இருக்கும்.
மூட் அவுட் ஆகும் சமயங்களில் பெரிதாக
பிரச்னை பண்ணுகிறான்.
எங்களுக்கு பிரச்னை ஆகிவிடுகிறது.
சரி.
இப்போதைய பிரச்னை:
விக்கியில் மேய்ந்த தகவலை முதலில் பதிவு செய்வதா அல்லது செல் ஃபோன் மூலம்
BLOGல் பதிவு செய்ய முயற்சிப்பதா?
ஃபோன் மூலம் BLOG பண்ணுவோம் முதலில். அப்புறம் விக்கி.

--

http://madscribbler.googlepages.com/

20 ஜூலை, 2007

அசை போடுதல்



நான் ஒரு மாடு.




இங்கே பசுமையாக இருக்கிறது, அங்கே பசுமையாக இருக்கிறது என்று Blog, wiki தளங்களில் மேய்கிறேன்.




அசை போடுகிறேன் சில நேரங்களில்.




அவசர அவசரமாக உண்டதை மனதிலிருந்து கொணர்ந்து அசை போட முயற்சிக்கிறேன்.




Relaxed ஆக அசை போட்டதை பதிவு செய்ய விரும்புகிறேன்.




அப்படி விக்கியில் மேய்ந்த பொழுது கிடைத்த படங்களும் தகவலும்....


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


தேனீ பூவில் இருந்து பூந்தேன் உறிஞ்சுகின்றது
தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் பல அறுகோண அறைகள் கொண்ட, கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் வெளியிடும் மெழுகால் இந்த கூடுகள் அமைக்கப்படுகின்றன.


இந்த மாடு மறுபடி விக்கி செல்லும் தகவல்களை மேய!
cell phone மூலம் பதிவு செய்ய இந்த மாடு முயற்சி செய்யும்!











11 ஜூலை, 2007

நெகடிவ் பாசிடிவ்.

தவபுதல்வன் comments ஒன்றில் தோன்றிய பதிவு.
______________________________________________________________
Dhavapudhalvan said...
\\எண்ணங்களின்\\
வேகத்தை ஈடு செய்ய வடிப்புகளால் முடியவில்லையே.

______________________________________________________________


எண்ணங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. சில சமயம் மிக வேகமாய் எண்ணங்கள் ஓடுகின்றன!

ஓட்டத்தை 'கபக்' என்று எழுத்தில் பிடிக்க முடிவதில்லை.

____________________________________________

அவ்வப்போது கிறுக்கிப் பழகியதால்......எண்ண ஓட்டம் வரும்பொழுது....இந்த எண்ணத்தை எழுத்தில் பிடித்துவிடலாமா என்று தோன்றுகிறது.

_____________________________________________

'நெகடிவ்வாக'ப் பிடித்து 'பாசிட்டிவாக' பதிப்பித்து விடலாமா என்று தோற்றுகிறது.

_____________________________________________

காமிராவில் நல்ல தருணமொன்றை பதிவு செய்ய முடியாதது போல், எவ்வளவோ எண்ணங்கள் பதிவு செய்ய முடியாமலே மறைந்து விடுகிறது.

எண்ண ஓட்டத்தில் கூட ...இதை...இதை...

capture

செய்து கொள்ளலாமா என்ற குறிப்பும் மனதில் ஓடும்.

_____________________________________________

அட! அந்த நெகடிவை இங்கே பதிவு செய்து விட்டேனே!

_______________________________________________________________

அடுத்த பதிவு wiki குறித்து!

கடவுளின் அருள்