27 மார்ச், 2019

வாரம் ஒரு போஸ்ட்


வாரம் ஒரு போஸ்ட் எழுதிக்கொள்ளும் கணக்கு - இப்போதைய எண்ணம்.
ஐந்து வாரங்கள் பாக்கி உள்ளது - நான் வேலையினின்றும் ஒய்வு பெற.
ஐந்து வாரங்கள் அப்புறம் ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் எஞ்சியுள்ளது.
ஒரு செவ்வாய் எனது ரிடைர்ட்மெண்ட் நாள்.
ஐந்து போஸ்ட்டிங்களில் இது முதல் போஸ்ட்.
செக்ஷனில் எனக்கு அளிக்கப் பட்டிருக்கும் இந்த கணினி எனக்குப் பிடிக்கும்.
Desk Top நடுவில் ஒரு நல்ல மேற்கோள்.
“சோர்வாக இருக்கும் பொழுது வேலையை நிறுத்தாதே.
வேலை முடிந்தவுடன் நிறுத்திக் கொள்”
இரண்டு பக்கங்களிலும் folder arrangements.
எனக்கு முந்தைய செக்ஷன் ஆபிசர்கள் செய்து வைத்துள்ள Desk top Screen.
சில மாதங்களுக்கு முன்னால் எனது அடுத்த promotionக்கு ஆசைப் பட்டேன்.
இந்தக் கம்பியூடரலிருந்து வேறு உயர் பதவி கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தது.
இல்லை.
இந்த பிடித்த கம்பியூடர் தான்.
நிறுத்திக் கொள்ள சொல்லி விட்டது Destiny.

I shall now stop.

20 மார்ச், 2019

அட நன்று.

அட
நன்று
கூகிள் கீப்- ல் எழுத, தமிழ் உபகரணம் ஒன்று போட்டுக்கொண்டுள்ளேன்
Chrome browser ல் . நன்கு வேலை செய்கிறது.
இதோ இன்னும் 42 நாட்களில் ரிடையர் ஆகப் போகிறேன்.
அதற்குள் சில நூறு வார்தைகள் எழுதிக் கொள்கிறேன்.
எப்பொழுதாவது எனக்கு குறிப்பு எடுத்துக் கொள்ள பிடிக்கும்
என்று சொல்லியிருக்கிறேனா?
சொல்லவில்லையென்றால் இப்பொழுது சொல்கிறேன்.
நோட்புக்கும் பேனாவும் சட்டைப் பையில் வைத்துக் கொள்ள பிடிக்கிறது.
சிறு நோட்புக் வைத்துக் கொண்டுள்ளேன்.
அந்த சிறு நோட் புக்கில் எழுதியதை கொஞ்சம் விவரமாக,
கொஞ்சம் அழகாக ஒரு பெரிய நோட் புக்கில் எழுதிக் கொள்ள முயற்சி
எடுத்துக் கொள்கிறேன்.
அப்படி எழுதும் பொழுது எதோ பெரிதாக செய்ததாக, புரிந்ததாக உணருகிறேன்.
நோட் புத்தகத்தை புரட்டும் பொழுது, சில சங்கடங்கள் நிவர்த்தி
ஆகியிருப்பதை பார்க்கிறேன்.
சில கணக்குகள் சரியாகி உள்ளது.
சில  பல ‘to do’  பாட்டியல்கள்  ஜாலியாக ‘டிக்’ ஆகியுள்ளது.
நன்று
அட

கடவுளின் அருள்