30 டிசம்பர், 2009

கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருப்பது சந்தோஷமா?


சந்தோஷம்தான்.
சந்தோஷம் இல்லை தான்.
சந்தோஷம்: நாம் மனதில் நினைத்திருந்ததுபோல் வேலை சடார் என்று முடிந்தால்.
சந்தோஷம் இல்லை:  கம்ப்யூட்டர் ஹாங் ஆனால்;  மின்சாரம் இல்லை என்றால்; இன்டர்நெட் இணைப்பு கிடைக்காவிட்டால்;  இணைப்பு கிடைத்து, இருக்கும் வேலையை விடுத்து, பறந்து பறந்து வேண்டாத பக்கங்களுக்குச் சென்று, கடைசியில் என்ன வேலைக்கு வந்தோம் என்பதை மறப்பது!
சந்தோஷம்: Random  மாக படங்களை ஸ்லைட் ஷோ போட்டு, அதனுடன் Random மாக இசையை கேட்பது.
சந்தோஷமில்லை: வேண்டிய இசை, படம் கிடைக்காமல் தேடுவது.
சந்தோஷம்: கம்ப்யூட்டர் முன்னால் உத்கர்ந்திருக்கும்பொழுது மக்கள் தொந்திரவு கொடுக்காமல் இருப்பது.
சந்தோஷமில்லை: பெண்டாட்டி வந்து என்ன செய்து கொண்டிருக்கிறிர்கள்  என்றும், மேலும் நான் ஒருத்தி இருப்பது தெரியவில்லையா என்று சாடுவதும்.
சந்தோஷமில்லை: இன்னும் கம்ப்யூட்டரில் tamizhil  எழுத ஆன்லைன் நம்பிக்கொண்டிருப்பது.
இதை படிப்பவர்களும் கமெண்ட்டில் பதில் எழுதலாம்.
அடுத்த கேள்வி: மோட்டர் பைக் எண்ணங்கள் என்பது யாது? 


17 நவம்பர், 2009

குகிள் 'டாக்' என்றால் என்ன?




நான் சொல்ல வருவது Google doc பற்றி, google talk குறித்தல்ல.
என்னை மாதிரி கிறுக்கர்களுக்கு Talk பயம். எழுதுவது அவ்வளவாக பயமில்லை.
எழுதுவதற்கு Google டாக் நன்கு பயன் உள்ளதாக இருக்கிறது.
Google டாக் குகிள் வலை தளத்திலும் மற்றும் Sify mail லிலும் உள்ளது.
வீட்டிலேயே கணினியில் word pad ல் எழுதி குகிள் டாக்கில் அப்லோட் செய்து கொள்ளலாம் .
சரியாக எழுதி அப்லோட் செய்து கொண்டால் Blog  ல் பிரசுரம் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.
அந்த டாக்குமெண்டை இ மெயில் கூட செய்யலாம்.
இந்த வசதி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அடுத்த கேள்வி: கம்ப்யூட்டர் முன்னாலேயே உட்கார வேண்டுமா சந்தோஷத்திற்கு? 
கேள்விகளுக்கு இதை படிப்பவர்களும் பதில் எழுதலாம்.

20 செப்டம்பர், 2009

எப்படி பிளாக் செய்கிறேன்?

எப்படி ப்ளாக் செய்கிறேன்?
இப்படி க்ளிக்கி, அப்படி க்ளிக்கி, அந்த formக்குப் போய், இந்த formக்குபோய்....கடலென இருக்கும் Optionகளில் (optionக்கு தமிழில் என்ன?) ஒருசெட்டிங்கை தேர்ந்தெடுத்து கிறுக்கல்கள் என்று முதலில் பெயர் வைத்து,பிறகு சந்தோஷமாக எழுதுகிறேன் என்று பெயர் வைத்து கிட்டத்தட்ட 53 பதிவுகளைஇந்த ப்ளாகில் எழுதியிருக்கிறேன்.
ஓடும் ஆயிரமாயிரம் எண்ணங்களிலிருந்து....,
ஓடாமல் இருக்கும் எண்ணங்களை ஓடவைத்து ஒரு தலைப்பை தேடிக்கொள்கிறேன்.
அந்த பொருளுக்கேற்ப ஆங்காங்கு கிறுக்கி வைத்துக் கொள்கிறேன்.
கூகிள் நோட்பாட், இ‍‍ மெயில் ப்ரோக்ராம்களில் ஏகப்பட்ட கிறுக்கல்கள். கூகிள்டாக்குமெண்டில் கூட பதிவுகளை வரைவு செய்து கொள்கிறேன்.
பதிவில் ஒரு படம் போட விருப்பமிருந்தால் அதற்கு ஒரு கூகிள் தேடல்.
பல சமயங்களில் ஒரு பதிவை செய்வதற்கு மாதக்கணக்காகிறது.
சில சமயங்களில் உடனேசெய்ய முடிகிறது.
மெனக்கிட்டு பதிவு செய்யும் சில பதிவுகளை படிக்க எனக்கேபிடிப்பதில்லை.
இப்படி ப்ளாக் செய்கிறேன்.
அடுத்த கேள்வி: கூகிள் டாக் என்றால் என்ன?

16 ஜூலை, 2009

நான் என் BLOG செய்கிறேன்?

நான் ஏன் பிளாக் செய்கிறேன்?

கேள்வி கேட்டுக் கொண்டு விட்டேன். பதில் எழுத திண்டாடுகிறேன்.

BLOG செய்வது, யாரவது படிக்க மாட்டார்களா என்று தானே?

என்னுடைய எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆம், அதில்லென்ன தயக்கம்?

எண்ணங்களை அப்படியே எழுத முடியாது. ஒரு பொருள், தலைப்பு வேண்டியள்ளது. கட் கட்டாக வரும் எண்ணங்களை கட்டு கட்டாக கட்டி ஒரு வடிவு கொடுக்க வேண்டும். எண்ணங்களை கோர்வைப் படுத்த வேண்டும்.

நம் எண்ணங்களை எல்லாம் கொட்டி விட முடியுமா என்ன?

எண்ணங்களை எல்லாம் எழுதினால் எல்லோரும் படித்து விடுவார்களா என்ன? எல்லோருக்கும் வேறு உருப்படியான வேலைகள் இல்லையா!

நான் மற்றவர்கள் எழுத்தில் வடித்திருக்கும் எண்ணங்களை படித்து விடுகிறேனா என்ன?

மற்றவர்கள் என் BLOG கைப் படித்து என் எண்ணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றுதான் ஆசை. படித்து, அவர்களுடைய எண்ணங்களை கருத்தாகச் சொல்ல வேண்டுமென்றும் விரும்புகிறேன். அதனால் BLOG செய்கிறேன்.

எல்லோருக்கும் பொதுவான செய்திகளை எழுதினால் கொஞ்சம் நிறைய மக்கள் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஒரு நண்பர் word press வலை தளத்தில் நல்லதொரு பதிவு செய்கிறார். வரைட்டியான விஷயங்களை படங்களுடன் நன்றாக பகிர்ந்து கொள்கிறார். இந்த பிளாக் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஓரிரு முறை எனது கருத்துக்களை அந்த பிளாக்கில் எழுதியுள்ளேன்.அந்த நண்பர் என் பிளாக் பக்கமே வரவில்லை. இதோ எனக்குப் பிடித்த அந்த பிளாக் விலாசம்:

மற்றொரு சென்னை நண்பர் இருக்கிறார். இவரை நான் வலை மூலம் சந்தித்து, ஒரு சந்தர்பத்தில், அவர் மற்றும் அவர் குடும்பத்தினரை பர்சனலாகவும் சந்தித்திருக்கிறேன்.(பர்சனல்லாக என்பதை எப்படி தமிழ் படுத்துவது? )சார் சும்மா கவிதை எழுதி கலாய்கிறார். படியுங்களேன் அவர் கவிதைகளை: ஆம்பல் மலர்.
பொறுமையாக அவரின் ஆத்ம சரிதத்தையும் பதிக்கிறார். அவ்வப்பொழுது உரிமையாக நான் ஏன் அடிக்கடி பிளாக் செய்வதில்லை என்றும் கேட்கிறார்.
நான் சென்ற மற்றொரு பிளாக் ஜெஸிலாவின் கிறுக்கல்கள். தற்பொழுதிய டெக்னிக்களை உபயோகப்படுத்தி உருவாகிய பிளாக். நல்ல சினிமாப் படங்களை விமர்சினம் செய்கிறார். கவிதைக் கூட்டங்களைப் பற்றி எழுதுகிறார். இவரது வலைப் பூவை விகடன் விலாசமிட்டுக் காட்டியுள்ளது. கருத்துக்கள் சொல்ல நல்லதொரு நண்பர் குழாமும் இவருக்குள்ளது. கருத்து சொல்ல இவரை என் பிளாகுக்கு வரவழைக்க முடியவில்லை.
மற்றொரு நல்ல பிளாக் ஞாநி. இதைப் பற்றி இந்த பிளாக்கில் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். அதற்கான லிங்க்.ஞானி என்ற பாத்திரம் மூலம் இவர் நல்ல கருத்துக்களை சொல்கிறார். இவர் என் பிளாகிற்கு வந்து அவரின் ஞானியை சந்தித்ததற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.
வலை தளங்களில் எவ்வளவோ வலைப்பூக்கள் இருந்தாலும், சில பூக்கள் மாத்திரம் மனதில் தங்குகிறது. நமது பக்கங்கள் என்ன - ஜுஜுபி.
ஆக,
BLOGGER
WORDPRESS
WEBDUNIYA
என்ற மூன்று தளங்களில் என்னுடைய எண்ணங்களை (பெரும்பாலும் ஆபீஸ் மற்றும் குடும்பம் சம்பந்தமான எண்ணங்கள்) எழுதிக்கொண்டுள்ளேன்.
மக்கள் வந்து படித்து கருத்துக்கள் சொன்னால் மேலும் சந்தோஷமாக எழுத முயற்சி செய்வேன். வலை தளங்களில் மிதந்து கொண்டிருப்பேன்.
பார்ப்போம்.
இப்படி கேள்வி பதில்களாகவே இந்த பிளாகை சந்தோஷமாக தொடர்வோம். இந்தப் பதிவில் 'எப்படி BLOG செய்கிறேன்' என்பதை விவரிக்கவில்லை. அதை அடுத்த பதிவில் முயற்சி செய்கிறேன்.





--
cgbalu from Hubbali

22 மே, 2009

அம்மா, பெண்டாட்டி


என் அம்மாவுக்கு ஏதாவது அன்பாக செய்தால் பெண்டாட்டிக்கு ஏன் சார் கோபம் வருது?
சார் அதனால நீங்கள் மனதை தளர விடாதீங்க. மனைவியிடம் நீங்கள் ரொம்ப 'தாய் பாசக்காரர்' என்று நிரூபிக்கத் தேவையில்லை. அப்புறம் ஒரு நாள் (உங்களுக்கு மகனிருந்தால்) உங்கள் மனைவியின் மருமகள் அவங்களை சரியாக கவனித்துக் கொள்வாள்.
வீரமாக மனைவியை திட்டாதீங்க. மிக மிக அமைதியாக பழி வாங்குங்க உங்கள் மனைவியை! அம்மாவுக்கு இன்னும் இரட்டிப்பாக நல்லது செய்யுங்கள்.
அப்புறம் இன்னொரு விஷயமுங்க: அவங்க மாமியாருக்கு நல்லது செய்யும்பொழுது அவங்களுக்கு எரிச்சல் வரவில்லை என்றால்தான் - மனைவிக்கு எதோ கோளாறு என்று அர்த்தம்.
ஏன் பிளாக் செய்கிறேன் எதற்கு செய்கிறேன் எப்படி செய்கிறேன் எங்கு செய்கிறேன் இதையெல்லாம் யோசித்து, வரும் எண்ணங்களை அடுத்த பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

இந்த ப்ளாகை மேலும் அலங்கரிக்க ஒரு படம் மற்றும் லிங்க் சேர்கிறேன். தலைப்பை கிளிக் செய்தால் அருமையான ஒரு அம்மா கவிதை.

04 மே, 2009

அது ஒரு நிலாக்காலம்.

எழுத்தாளர் சுஜாதாதிரைப்படத்தில் தோன்றும் காட்சி பார்த்ததுண்டா?
ஆமாங்க சமீபத்தில் லோக்சபா சானலில் பார்க்கும் யோகம் கிடைத்தது.
படம்: 'அது ஒரு நிலாக்காலம்'
சுஜாதாஅவர் மனைவியுடன் அந்த தியேட்டருக்கு வருகிறார் காரில். பொடியர்கள், அமரும் புள்ளியும் ப்ளாக் டிக்கெட் விக்கிறார்கள். புள்ளி சல்லீஸாக சுஜாதாவின் பேனாவை லவுட்டுகிறான்.
சீர்திருத்தப் பள்ளியில் அந்த வேலைக்காரப் பையன்கள் விதிவசத்தால் விழுந்த பயன் அது.
அந்த தியேட்டரில் இவர்கள் இந்த நிலைக்கான, இந்தப் பையன்கள் கடத்தியதாக கருதப்பட்ட 'நிலா' நடித்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பாவம் சிறுவர்கள். ஒரு நிலாக்காலத்தில் மாத்திரம் அவர்களால் நிலவுடன் விளையாட முடிந்தது.
Great சுஜாதா!
அடுத்த பதிவுக்கும் ஒரு கேள்வி பதில் தயார் பண்ணி விட்டேன் சார்!!

16 ஏப்ரல், 2009

கேள்வியும் நானே பதிலும் நானே.





முந்தையப் பதிவு:
சமீபத்தில் நீங்கள் ரசித்துப் பார்த்த திரைப்படம் எது?
"மெக்கனாஸ் கோல்ட்."
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னால் பெங்களூர் லிடோ தியேட்டரில் மெக்கனாஸ் கோல்ட் சினிமாபார்த்திருந்தேன்.
அப்பொழுது இவை எல்லாம் நடக்கும் என்று தெரியாது:
௧) டி வி என்ற கருவி வரும்.
௨) சன் -டி வி சானல் வரும்
௩)ஹாலிவுட் படங்களை அருமையாக தமிழ் வசனங்களுடன் நமக்குத் தருவார்கள்.
ஞாயிறு மாலையிலே 'மக்கான' என்ற சமாதனமான ஹீரோ, குறு குறுப்பான 'கலரேடோ' என்ற வில்லனுடனும் இன்னும் தங்க ஆசை கொண்டவர்களுடனும் சேர்ந்து, மலைகள் முட்டி நிற்கும் தரைகளிலே, குதிரைகள் மீதேறி விறு விறுவென்று தங்கம் தேடும் காட்சிகளைப் பார்த்தது மிகவும் சூப்பராக இருந்தது.
என்ன, அந்த ஹாலிவுட் அழகிகள் இயற்கையான குளமொன்ரிலே பிறந்த மேனியாக நீச்சல் போடும் காட்சிகளை கத்தரித்து விட்டார்கள்!
அடுத்த பதிவிலும் 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்று இன்னுமொரு கேள்வியைக்கேட்டு பதிலளிக்க முயற்சிக்கிறேன்

20 மார்ச், 2009

சந்தோஷம் 2







Fly over ஏறும்பொழுது ஒரு கவனம்.



இறங்கும்பொழுது ஒரு கவனம்.



கூட வரும் வண்டிகளை பார்த்து,



எனது வண்டியை திருப்பும்பொழுது ஒரு கவனம்.






கவனங்களில் வெற்றி கண்டு,



நேர் ரோடில் ஹாயாக வண்டியைசெலுதும்பொழுது ஒரு சந்தோஷம்!






நீண்ட நாட்களாக ஆனந்த விகடனில் வரும் "கேள்வியும் நானே பதிலும் நானே" பகுதியில் வருவது மாதிரி கேள்வி பதில் எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. அடுத்த பதிவில் சந்தோஷமாக எழுதுகிறேனே!!

06 மார்ச், 2009

வேங்கடவன்.


பல இடங்களில் முட்டியை வலிக்கச் செய்யும் படிகள்.
சில இடங்களில் இதயத்தை சாதரணமாக இயங்க வைக்கும்,நடைபாதைகள்.
எதற்கும் நமது முறைக்கு காத்திருக்க வேண்டும் -என்பதை உணர்த்தும் பலவகையான மனிதர்கள் வரிசை.
நமது முறை கண்டிப்பாக வரும் என்று தெரிந்திருந்தும்,மற்றவனை/மற்றவளை முந்த வைக்கும் மனது!இவையனைதும் செய்தால்,மனித தெய்வங்களுடன் சேர்ந்து,
ஒரு நிமிடம்வேங்கடவனை பார்க்கும் சந்தோஷம்.

அடுத்த பதிவையும் தயாராக இருக்கும் கவிதை கொண்டு ஒப்பேற்றி விடுகிறேன்.

09 பிப்ரவரி, 2009

90 வினாடிக்குள்!

சுந்தர் வீட்டிலே கோபித்துக் கொண்டு அந்த சிக்னல் அருகே வெறுப்பாக நின்றிருந்தான்.

அப்பாவும் அம்மாவும் சேர்ந்து மாற்றி மாற்றி திட்டிய, "கையாலாகதப் பயலே" என்ற "திட்டு ஜாம்" மனதில் மிகுந்த நெரிசலை ஏற்படுத்தியிருந்தது.

சிவப்பு விளக்கு போட்டு, நல்ல எண்ணங்களை நிறுத்தியிருந்தது - மனம்!

டவுன் பஸ் ஒன்று சிக்னலில் நின்றது.கபக்கென்று சிறுவனொருவன், பஸ்ஸிலிருந்து வெளியே வந்தான். ஓடிச்சென்று அருகில் உள்ள மின்சாரிய வாரிய ஆஃபீஸில் பில்லிற்கான பணத்தை கட்டி விட்டு, ஓடி வந்து மறுபடி அதே பஸ்ஸில் தொற்றிக்கொண்டு விட்டான்.

பஸ் சிக்னலிலே நிற்ற 90 வினாடியிலே சிறுவன் எலக்டிரிசிட்டி பில்லைக் கட்டி விட்டான்.

பச்சை விளக்கு விழுந்து பஸ் புறப்பட, சுந்தர் மனதிலும் பச்சை சிக்னல் விழுந்தது!

"அட, இந்த 90 வினாடிக்குள் முடியும் வேலைக்கா நான் வீட்டில் சண்டை போட்டேன்? அப்பாவிடம் வண்டி கொடுக்காவிட்டால் பில் கட்டப்போக மாட்டேன் என்று கத்தினேனே! நீ கட்டும்மா என்று அம்மாவிடம் சாடினேனே!"

ஓட்டமெடுத்தான் வீட்டிற்கு. அம்மா செய்த பொங்கலை சாப்பிட!

அடுத்த பதிவாக ஒரு கவிதையை கொணர்கிறேன்.

23 ஜனவரி, 2009

ஒன்றே குறி

நிலாசாரலில் படித்த ஜென் கதை ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்:

ஒரு கண்டிப்பான பாட்டு வாத்தியாரிடம் பாடல் பாடக் கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன். முதல் நாள் கற்ற அதே பாடலே, இரண்டாம் நாள் பாடமாகவும், அதற்கடுத்தடுத்த நாட்களின் பாடமாகவும் அமைந்தது. வேறு எதையுமே அவர் சொல்லித் தரவில்லை. ஒரே பாடலையே திரும்பத் திரும்பப் பாடி எரிச்சலாகி வெறுத்துப் போன இளைஞன் அந்த வாத்தியாரை விட்டு ஒருநாள் ஓடியே போனான்.


தற்செயலாக பாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்த அந்த மண்டபத்திற்குள் நுழைந்தவனை பாடகன் என நினைத்து அவனையும் போட்டியில் சேர்த்துக் கொள்ள, தனக்குத் தெரிந்த அந்த ஒரு பாடலையே அவன் சிறப்பாகப் பாட, மக்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது. முதல் பரிசைத் தட்டிச்சென்ற அவனை மற்ற போட்டியாளர்கள் அழைத்து அவனது குருவைப் பற்றி விசாரித்தனர்.

பின்னாளில் அவனே மிகச்சிறந்த பாட்டு வாத்தியாராக ஆனான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதுதான் வெற்றிக்கான வழி.

ஒன்றைப்
பிடித்துக்கொள்ளுங்கள்...


நன்றாக... மிக நன்றாக.

அடுத்த பதிவு: ஒரு சிறுகதை.

கடவுளின் அருள்