30 டிசம்பர், 2008

தேடல்







தேடுகிறோம்.
கிடைக்கிறது.
கிடைத்ததை தேடுகிறோம்,
மறுபடியும்!


அடுத்த பதிவாக ஒன்றை பிடித்துக்கொள்கிறேன் .....அதற்கடுத்த பதிவாக ஒரு சிறு கதையை பதிக்கிறேன் ........எல்லாம் முதலில் தமிழ் நெஞ்சங்களில் பதித்தது.

01 டிசம்பர், 2008

இரத்தம்.


வாடிக்கையாளர் மீது உட்கார்ந்த,
கொசுவை விசிறி அன்புடன் துரத்திவிட்டான்,

வட்டிக்கடைக்காரன்.


அடுத்த கவிதை.

தேடல்

07 நவம்பர், 2008

இது ஹைக்கூ?


இது ஹை கூ?
- balu g.

'நீ' என்று கூப்பிடவா?
'நீங்கள்'என்று கூப்பிடவா?
அன்னியோனியம் வளரவேயில்லை,
தயக்கத்தில்!


அபிதாப்பச்சன் பதிவு
” Tolerance beyond the point of absurdity is not a virtue but cowardice “

அடுத்த பதிவு :
இரத்தம்


















































































29 அக்டோபர், 2008

கற்றுக் கொண்டு விட்டேன்


அம்மாவிடம் பேச முடிவதில்லை.
பாவம் அவளுக்கு காது கேட்பதில்லை.
என் விடலை மகனிடம் பேச முடிவதில்லை.
அப்பன் உளறுகிறான்,
'சரி சரி' என்று பேச்சை முடித்து விடுகிறான்.
மனைவியிடம் பேச முடிவதில்லை.
குடும்ப சம்பந்தமாக அவள் யோசித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆங்க்!ஐடியா!
என்னிடமே உரக்க பேசக் கற்றுக் கொண்டு விட்டேன்.
பதிலளிக்கவும் கற்றுக் கொண்டு விட்டேன்!

அடுத்த கவிதை
இது ஹை கூ?

19 செப்டம்பர், 2008

இன்பமான அவஸ்தை




இந்தப் பதிவில்


முதலில் நண்பர் எழுதிய கவிதையை ரசித்தேன்.

குப்பை


சேர்த்து விட்டேன்
குப்பையாய்
காகிதங்களை.

எழுதவோ
மறந்து விட்டேன்
கவிதைகளை.

வீசி விட
மனமோ
துணியவில்லை.

கவிதைகளைவடித்திட,
எண்ணங்களோ
தோன்றவில்லை.

-தவப்புதல்வன்.


இப்பொழுது Compose Tamil இணையகத்தில் முன்பு நான் எழுதிய கவிதை:


இன்பமான அவஸ்த்தை!
- balu g.
வலிப்பு மாதிரி வெட்டி வெட்டி வரும் எண்ணங்கள்.


எண்ணங்களை ஒரு வழியாக போக வைப்பது அவஸ்த்தை!


ஒரு வழியாக போகும் எண்ணங்களை கிறுக்கி வைப்பது அவஸ்த்தை!


கிறுக்கலை எழுத்தாக்கவோ, செயலாக்கவோ செய்யும் முயற்சி -


அவஸ்த்தை.இன்பமான அவஸ்த்தை!!


அடுத்த கவிதை
கற்றுக் கொண்டு விட்டேன்!!!
தொடுப்புக்களில் தமிழ் நெஞ்சங்கள்


12 செப்டம்பர், 2008

திருமணம்.


நடிகையை சாகடித்து விட்டார்கள்.
மெகா சீரியலில்!
நடிகைக்கு திருமணமாம்.




அடுத்த கவிதை:

இன்பமான அவஸ்த்தை!

04 செப்டம்பர், 2008

ரசிப்பு

வயது வளர,வளர,
ரசனைகளும்,கிளைவிட்டு வளருகிறது.
வாரிசுகளின் ரசனைகளையும்,
ரசிக்கிறேன்!
அடுத்த கவிதை:
திருமணம்

01 செப்டம்பர், 2008

இன்று, இப்பொழுது,




நாளை வேலையை தொடங்கிவிடலாம்.
நேற்றே வேலையை முடித்திருக்கலாம்.
இன்று பகல் பொழுதில் அவளிடம்,அதை அவ்விதம் சொல்லியிருக்கவேண்டாம்.
வேண்டாம்.....வேண்டாம்...
இந்த எண்ணங்கள்!
இன்று, இப்பொழுது,எனக்கு தூக்கம் வந்தால் போதும்!
அடுத்த கவிதை: ரசிப்பு

08 ஆகஸ்ட், 2008

கவிதை கிறுக்கல்கள்


இந்தக் கவிதை கிறுக்கல்கள் எல்லாம் compose tamil.com பதிவில் முதிலிலேயே எழுதியவை.
கவிதைகளை இங்கு பதித்தால் சற்று அதிகமான பதிவுகளை பதிவேற்றலாம் என்ற எண்ணம்.
நண்பர் ப. நா. அவர்களின் ஊக்கத்திற்கு நன்றிகள்.
முதலில் என் பையன் பல்லை அழகாக செய்வதற்கு சிகிச்சை மேற்கொண்டபொழுது எழுதிய கவிதை.

பல்
இளம் ப்ச்சை தொப்பி போட்டு,
சாம்பல் நிற ஏப்ரான் கட்டி,
பல்லைப் பிடுங்கும்,தேவர்களே,தேவதைகளே,
கடவுள் கொடுத்த,எனது ஸந்தோஷின் நாலு பற்களை,புடுங்கி விட்டீற்களே!வாயை கட்டிக்கொண்டிருக்கும், தந்த வைத்தியர்களே! நீங்கள வாயை கட்டிக்கொண்டிருந்தால எனக்கு பேச பயமாக இருக்கிறது.

அடுத்த

கவிதை:
இன்று, இப்பொழுது.

30 ஜூலை, 2008

சின்ன சின்ன ஆசை


வைரமுத்து சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நிபுணர்.ரோஜா திரைப்படம் பார்த்தபொழுது எனக்கு "சின்ன சின்ன ஆசை" பாட்டு நிரம்ப பிடித்திருந்தது.

ஏன் இன்றும் கூட 'டை... ங்...' என்று ஜிங்கிளாக அந்த இசை வரும்பொழுது, "சின்ன சின்ன ஆசை" பாடல் கேட்கும் இன்பம் பெரிய இன்பத்தை கொடுக்கிறது."என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை"
##########
"பூ பூக்கும் ஓசை, அதை கேட்கத்தான் ஆசை" - வைரமுத்து சாரு உங்க ஆசை ஜோரு!கருவாச்சி காவியத்தில், கருவாச்சி மூலமாக பாம்பு தோலுரிக்கும் காட்சியைக் கூட ஆசையுடன் பார்த்து விட்டீர்களே!

##########

அதிகமாக பொறாமை படாமல், வைரமுத்து ரசித்தவைகளை, நான் ரசித்தவைகளாக பாவித்துக் கொள்கிறேனே!

##########
இப்ப பாருங்க எனது யாஹீ'விலிருந்து கருவாச்சி காவித்தின் இன்ப துளிகளை பகிர்ந்து கொள்ளும் எனது சின்ன சின்ன ஆசையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனது யாஹு ID திருடப்பட்டு, நான் மெயிலில் DIAMOND PEARL என்றொரு folder-ல் சேகரித்திருந்த குறிப்புகள் எல்லாம் பணால் ஆகி விட்டது. சின்ன ஆசையை சின்னதாக சில பதிவுகளில் செய்து கொண்டு விட்டேன். போதுமல்லவா?
##########
கொஞ்சம் பெரிதாக ஆசைப் படுகிறேன். நான் கிறுக்கிய சில கவிதைகளை அடுத்த பதிவிலிருந்து பதிக்கிறேன்!

ஓகே?
############

20 ஜூன், 2008

களைகளைப் பற்றி மேலும் .....



களைகளைப் பற்றி மேலும் .....
கருவாச்சி களைகளைப் பற்றி இவ்வாறு நினைக்கிறாள்:
"அம்மா நல்ல விதைகளைத்தான் விதைத்தாள். களைகள் எங்கிருந்து முளைத்தன? களைக்கு விதை எங்கிருந்தது?
உலக வாழ்க்கையும், நிலப் பயிரும் ஒன்று. இங்கு உலகத்தில் நாம் நல்லது விதைக்கிறோம். கெட்டதான முளைகளும் அதுவாக முளைக்கின்றது.
தானியங்களை விதைக்கின்றவன் , தானியங்களுடன் முளைகளையும் அறுவடை செய்து கொள்கிறான்.
தானியத்தை விதைத்து தானியத்தை பெறுவது புத்தி .
விதைக்காமலே களைகள் கிடைப்பது விதி.
களைகளை களைந்து பயிரை பெறுவதைப்போல், விதியை மதியால் களைய வேண்டும்.
பார்க்கலாம்.
வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.
தோற்றால் அனுபவம்.
மோதி பார்த்து விடலாம்"
காவியத்தில் கருவாச்சியின் மோதல்கள் இன்றும் கண் முன்னே நிற்கின்றது.
அடுத்த பதிவில் சின்னதாக, 'சின்ன சின்ன ஆசை' பற்றி எழுத ஆசை!

28 மே, 2008

சடையப்ப தேவர்.

வந்து விட்டேன் கட்டையன் தகப்பன் பெயரோடு!

சடையப்பதேவர்.

ஒரு அத்தியாயத்தில் சடையப்பதேவர் கோவணம் உடுத்தி மஜாவாக வெவெதுப்பான நீரில் குளிக்கும் காட்சியை விவரிக்கிறார் வைரமுத்து.

கடனுக்கு வட்டி வருவது போல், பயிருக்கு களை.

சில களைகளின் பெயர்கள்: அருகு, மகிழி, தொக்கிழி, தும்பை .....

கருவாச்சி களைகளைப் பற்றி என்ன நினைக்கிறாள்?

அடுத்த பதிவில் பார்க்கலாம்!

25 ஏப்ரல், 2008

மறந்தவைகளும் நினைவுகளும்.

மாலையில் சூரியன் மறைவது என்?
உலகத்தில் நடக்கும் துன்பங்களை காணமுடியாமல் சூரியன் மறைகிறானாம்!
கருவாச்சிக்கு முதலில் துன்பங்கள் தொடங்குவது கட்டையனால்.
கட்டையன் அவளை திருமணம் செய்து கொண்டவன்.
முன்னொரு காலத்தில் கருவாச்சி குடம்பத்தினரால் பாதிக்கப்பட்ட கட்டையனின் தகப்பன், அந்த குடும்பத்தை பழி வாங்க தன் மகனை கருவாச்சிக்கு திருமணம் செய்து வைக்கிறான்.
கட்டையன் தகப்பன் பெயர் என்ன?
எனது குறிப்புக்களிலிருந்து கண்டுபிடித்துவிடலாம்!
அந்த பழைய பகைமை என்ன?
சுத்தமாக மறந்து போச்சு!
வருகிறேன் அடுத்த பதிவில் கட்டையன் தகப்பன் பெயரோடு!

13 ஏப்ரல், 2008

கள்ளிக்காட்டு இதிகாசம் பற்றி இன்னும் கொஞ்சம் வலைகளில் மேய்ந்தேன்.


கூகிள் டிரான்ஸ்ளிலிட்டறேஷன் பக்கத்தில் எழுதுவது அவ்வளவாக பழகமாகவில்லை.


கள்ளிக்காட்டு இதிகாசம் பற்றி இன்னும் கொஞ்சம் வலைகளில் மேய்ந்தேன். ஒரு நண்பர் பேயத்தேவர் பசுவிற்கு பிரசவம் பார்த்ததை வைரமுத்து விவரித்திருந்ததை சிலாகித்திருந்தார்.


இது மாதிரி பல பல சம்பவங்கள் ......அவ்வப்போது ஞாபகம் வரும்.
எழுதுகிறேன்.


கருவாச்சி காவியத்தை என் மனைவியும் நானும் சேர்ந்து ரசித்துப் படித்தோம்.


வாழ்க்கையே துன்பமானதுதான். அதில் மகிழ்ச்சியை கண்டெடுப்பது ஒரு ரசனை.


அதுவும் கருவாச்சியின் துன்பங்கள் முன்னால் நமக்கிருக்கும் துன்பங்கள் ஒன்றுமேயில்லை!


அவள் பெற்ற துன்ப-இன்பங்களை இங்கே கொணர முயற்சிக்கிறேன்.


கொஞ்சம் சீக்கிரமாக என்னுடைய பழங்குறிப்புக்களையும் கற்பனையும் சேர்த்தால் நல்ல பதிவுகளாக பதிக்கலாம்.


செய்கிறேன். சீக்கிரமாக.


அடுத்த பதிவு விரைவில்.

05 மார்ச், 2008

கள்ளிக்காட்டு இதிகாசம்

2005 ஆம் வருடத்தில் கிறுக்கிய கிறுக்கல்களை நினைவிற்கு கொணர முயற்சி செய்கிறேன்.

கிராமத்தில் அணைக்கட்டு வருவதால் அங்கு மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் பிரும்மாண்டமாய் படைத்திருந்தார் வைரமுத்து.

மறுபடி ஒரு முறை படிக்க வேண்டும் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்தை.

கதானாயகனாக வரும் கிழவனையும் அவன் பேரன் மொக்கராசுவையும் இன்னொரு முறை சந்திக்கவேண்டும்.

சீனு காய்ச்சும் சாராயத்தை ருசி பார்க்க வேண்டும்.
பேயத்தேவரிடம் கற்க வாழ்க்கைப் பாடங்கள் நிறைய இருந்தன.
கருவாச்சி காவியம் படித்து எழுதிய குறிப்புக்கள் அதிகம் உள்ளன. அடுத்த பதிவு அதைப்பற்றிதான்.











08 பிப்ரவரி, 2008

பட்டியல்


== தமிழ்ப் பழமொழிகள் ==
அகத்தினழகு முகத்தில் தெரியும்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
(from Wiki quote)விக்கிகோட்டுக்கு.

விக்கி ஞாநி சென்றிருந்தபோது:-

கற்கள் தடைகள் இவைகளை நாம் நீக்கத்தான் செய்ய வேண்டும்.
முடியாதபொழுது ஞாநியின் சொற்கள் ஓ.கே.



விக்கி ஞாநி இணைய விலாசம்:-http://nyani.wikispaces.com/
விக்கியில் பல பல விஷயங்கள் உள்ளன.
விக்கி அகராதி, விக்கி ஸ்பேஸஸ்..........இந்த தடவை ஸ்பேஸஸுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

##################################################################

குமுதத்தில் வரும் கேள்வி பதில் பகுதியை செம்பட நிர்வாகம் செய்கிறார் வைரமுத்து.

விஞ்ஞானமாகட்டும், ஞானமாகட்டும் அல்லது நகைச்சுவையாகட்டும் அவருடைய நிர்வாகம் திறம்பட செயல் படுகிறது.

அதுவும் அவரின் பட்டியல் பதில்கள் மிகவும் சுவையானது.
ஒரு பதிலில் அவர் தமிழ் கதாநாயகர்களுக்கு எழுதிய, அவருக்கு விருப்பமான பாடல்களை பட்டியல்யிடுகிறார்.

அதில் எனக்குப் பிடித்தமான, ஞாபகமுள்ள வரிகளை பட்டியலிடுகிறேன்:

எம்.ஜி.ஆர். - கலைஞருடன் இருந்த நட்பால் எம்.ஜி.ஆரிடம் அதிகம் பழகவில்லை என்று குறிப்பிடும் வைரமுத்து அஞ்சலிப்பாடலாக 'சந்தனப் பேழையிலே' என்ற பாடலை தனக்குப் பிடித்ததாக பட்டியலிடுகிறார்.
சிவாஜி - முதல் மரியாதை படத்தில் வரும் 'பூங்காற்றே திரும்புமா' பாடலை பட்டியலில் தேர்வு செய்திருந்தார்.
கமல்ஹாசன் - "அந்தி மழை பொழிகிறது..." (ராஜபார்வை)
ரஜினிகாந்த். - "ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்" (படிக்காதவன்)
சிவக்குமார் - "கலைவணியே....." (சிந்து பைரவி)
பாக்கியராஜ் - "எண்ணிய எண்ணங்கள் ஈடேற...." (அந்த ஏழு நாட்கள்)

பட்டியல் போடுவது - இன்ப பட்டியலோ, துன்ப பட்டியலோ, சாதித்த பட்டியலோ, சாதிக்க இயலாமல் போனவைகளோ, முயற்சிகளோ, நம்மிடம் உள்ள நல்லவைகளோ அல்லது கெட்டவைகளோ - ஒரு சாதனைதான்.

நிதானமாக பட்டியல் போட்டு நிதானமாக அவைகளை அசை போடுவது ஒரு மஜா.
ஓரிடத்தில் அவைகளை அவ்வப்போது பட்டியல் போட முயற்சித்து சில பட்டியல்கள் உள்ளன. அவைகளில் ஒன்றுதான் மனைவி எனக்கு கட்டிக்கொடுத்த சாப்பாடுகளின் பட்டியல்.

இங்கு 'சும்மா' அதை போட்டிருக்கிறேன்.
List of lunch office carried to office.
1. Idly
2. Lemon rice.
3. Coconut rice.
4. Radish sambar rice. Beans curry.
5. Thiruvathirai kali, kootu.
6. Besi bele bath appalam.
7. Vangibath - cut cucumber.

வாழ்க பெண்டாட்டி!


சிவாஜி படத்தில் வரும் இந்த வைரமுத்து வரிகள்:
"ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது......நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது"அருமையான வரிகள்.

இப்பொழுது காதல் கீதல் சந்தர்பத்திற்கு இந்த வரிகள் எனக்கு உபயோகப்படாது.

வரிகளை இப்படி பயன் படுத்திக்கொள்கிறேன்.

"மூன்றாண்டுகளாக சேமித்த காசிது.....
மூன்று நிமிஷங்கள் தாண்டியும் வாழ்ந்தால் அதிசியமிது....."


"மூன்று வாரங்களாக சேமித்த எண்ணமிது....
மூன்று நாட்களில் எழுத இழுக்குது....."

அடுத்தது வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் ஆகிய புதினங்களிலிருந்து நான் சேமித்த எண்ணங்களை எவ்வளவு தூரம் எழுத்தில் கொணர்கிறேன் என்பதை முயற்சி செய்யப்போகிறேன்!!

08 ஜனவரி, 2008

ஞானி சிறுகதைகள்

தேனீயில் ஞானி கதைகள் சுவாரஸ்யமாய் உள்ளது.
சாம்பிளுக்கு இங்கு ஒரு கதை கொடுக்கிறேன்.
மேலும் தேனீயில் படிக்கலாம்.
அல்லது ஞானி கதைகளை ஞானி என்கிற வலை தளத்தில் படிக்கலாம்.
இதன் ஆசிரியர் மோகன் கிருட்டிணமூர்த்தி.
சிறுகதைகள் சிறுசாக, ஒரு சாதரண குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை களமாகக் கொண்டு அற்புதமான யதார்த்தத்தை கொடுக்கிறது.

நரை

என்னங்க தலை நல்லா நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. போய் டை பண்ணிகிட்டு வாங்க என்று ஒரு நாள் மாலை நச்சரித்தாள் என் மனைவி.

அட டையெல்லாம் நான் பண்ணிக்க மாட்டேன். நான் இயற்கையா தான் இருப்பேன். நான் ஞானியோட சிஷ்யன். நாளைக்கு ஞானியாக போறவன். சே. போ என்றேன்.

நீங்களாவது ஞானியாகறதாவது என்று நக்கலாக சொல்லிவிட்டு அடுப்பறைக்குள் நுழைந்தாள்.

எதிர்வீட்டு பெண்மணி திடீரென்று உள்ளே நுழைந்தார். கட்டுக்கு அடங்காமல் வெளியே வந்து விழும் தொந்தியை மூச்சு பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டேன். வாங்க, வாங்க உட்காருங்க.

எங்க வீட்ல டிவி மக்கர் பண்ணுது. சட்டி ஒலி பாக்கனும் என்றார் அந்த பெண்மணி.

அதுக்கு என்ன. உட்காருங்க என்று சொல்லி தொலைகாட்சி துவக்கிவிட்டு சமையலறைக்குள் விரைவாக சென்று தண்ணீர் குவளை எடுத்து வந்து அவர் முன் வைத்தேன்.

என்ன சார் இல்லையா வீட்ல என்றேன்.

அவரா. டை அடிச்சிட்டு வர போயிருக்காரு. நாளைக்கு ஏதோ பெரிய மீட்டிங்கா.

அட டை அடிப்பாரா அவர்? அடப்பாவி மனிதா உன் முடியை பார்த்து இத்தனை வயதிலும் என்ன இளமை என்றெல்லவா நினைத்திருந்தேன் என்று மனதுக்குள் திட்டினேன்.

பின்னே. நாப்பது வயசில் நரைக்காம இருக்குமா? உங்களுக்கு எத்தனை வயது? என்றார் என்னிடம் சட்டென்று.

வரக்கூடாத கேள்வி என்று நினைக்கும் போதே வந்த கேள்வி. முப்பதததததததைந்து என்றேன். உள்ளே இருந்து என் மனைவி………..தெட்டு என்று முடித்தாள்.

ஹிஹி எட்டு என்று முடித்தேன்.

புயலை கிளப்பிவிட்டு தொடர் முடிந்ததும் வீடு திரும்பினார் அந்த பெண்மணி.

கையில் சப்பாத்தி கட்டையுடன் என் மனைவி பத்திரகாளியாக வெளியே வந்தாள். 38ஐ 35ன்னு சொல்றீங்க, தம் கட்டி வயித்தை இழுத்து பிடிச்சி வச்சிருக்கீங்க, தண்ணி எடுத்திட்டு வர துள்ளி ஓடி வர்றீங்க. இதுல ஞானி ஆவப்போரிங்களா. உங்களை விட 2 வயது பெரியவர் அவரே டை அடிச்சிக்கிறார்ல. போய் டை அடிச்சிட்டு வாங்க என்றாள் காட்டமாக.

பூனை மாதிரி உள்ளே சென்று சட்டை போட்டுக் கொண்டு முடி திருத்தும் நிலையத்திற்கு கிளம்பினேன்.

எதிர்பட்டான் ஞானி. நடந்ததை சொன்னேன்.

ஹாஹா வென்று சிரித்தான்.

நான் இருக்கும் இடத்திலிருந்து நீ இருக்கும் இடம் ரொம்ப தூரம் என்று சொல்லி பறந்தான்.

அவன் போன திசையை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.



ஞானி

ஞானி - சிறுகதை தொகுப்பு
இதன் ஆசிரியர் விக்கி ஞானி என்கிற தளத்தில் விவாதத்திற்கும் அவகாசமளிக்கிறார்.
அங்கு சென்று பார்க்க ஆசை.
விரைவில் நிறைவேற்றிகொள்கிறேன்.
இந்த பதிவினுடன் வைரமுத்து வரிகள்:

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே

{படம் ஜெண்டில்மேன்}



தேனீயுடன் இந்தப்பதிவு முடிகிறது.
அடுத்த பதிவிற்கு விக்கி செல்கிறேன்.


--
http://madscribbler.googlepages.com/

கடவுளின் அருள்