08 அக்டோபர், 2021

அம்மா

 இந்த அம்மா ரூமிலே ஒரு AO ஸ்மித் water filter வெள்ளை அட்டைப் பெட்டி இருக்கிறது. அந்த வெள்ளைப் பெட்டியிலே அம்மாவின் அதிகப்பட்ட புடவைகள் உள்ளன.


அம்மாவுக்கு நிறைய புடவைகள் வைத்துக் கொண்டு கட்ட வேண்டும் என்ற ஆசை. நான் இந்த ரூமிர்க்கு வந்தால், அந்த வெள்ளைப் பெட்டியை எடுத்துக் கொடு, அதில் குமார் எடுத்துக் கொடுத்த புடவை, நீ காசிக்கு சென்றபொழுது எடுத்துக் கொடுத்த புடவை எல்லாம் இருக்கிறது நான் கட்ட வேண்டும் என்று சொல்லுவார்.


மனசு கேட்க்காது. எடுத்துக் கொடுத்து விடலாம் என்று தோன்றும்..


புடவைகள் சிலது கனமாக இருக்கும். அந்தப் புடவைகள் பீரோவிற்கு வந்தால் ஒரு பெரிய மலையாகும். ரொம்ப முடியாத கைகளால் அவைகளை அடுக்க முயற்சிப்பாள். ஒரே mess ஆகி விடும். அந்தப் புடவைகளை கட்டினால் அவளுக்கும் கனமாக இருக்கும்.


நல்ல இதயத்துடன் மனசு சொல்வதை கேட்காமல், அவளுக்கு சுளுவாக இருக்கும் புடவைகளை பீரோவில் வைத்துக் கொடுத்திருக்கிறாள் மனைவி. ஆனால் அம்மைக்கு அது happy ஆக இல்லை.


இப்பொழுது நாம் எல்லோரும் happy ஆக இருப்பது மாதிரி இருக்க வேண்டுமா அல்லது அம்மாவை happy செய்ய வேண்டும் என்று அவளுக்கு கஷ்டம் கொடுப்பதா?





கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்