08 ஜனவரி, 2008

ஞானி சிறுகதைகள்

தேனீயில் ஞானி கதைகள் சுவாரஸ்யமாய் உள்ளது.
சாம்பிளுக்கு இங்கு ஒரு கதை கொடுக்கிறேன்.
மேலும் தேனீயில் படிக்கலாம்.
அல்லது ஞானி கதைகளை ஞானி என்கிற வலை தளத்தில் படிக்கலாம்.
இதன் ஆசிரியர் மோகன் கிருட்டிணமூர்த்தி.
சிறுகதைகள் சிறுசாக, ஒரு சாதரண குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை களமாகக் கொண்டு அற்புதமான யதார்த்தத்தை கொடுக்கிறது.

நரை

என்னங்க தலை நல்லா நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. போய் டை பண்ணிகிட்டு வாங்க என்று ஒரு நாள் மாலை நச்சரித்தாள் என் மனைவி.

அட டையெல்லாம் நான் பண்ணிக்க மாட்டேன். நான் இயற்கையா தான் இருப்பேன். நான் ஞானியோட சிஷ்யன். நாளைக்கு ஞானியாக போறவன். சே. போ என்றேன்.

நீங்களாவது ஞானியாகறதாவது என்று நக்கலாக சொல்லிவிட்டு அடுப்பறைக்குள் நுழைந்தாள்.

எதிர்வீட்டு பெண்மணி திடீரென்று உள்ளே நுழைந்தார். கட்டுக்கு அடங்காமல் வெளியே வந்து விழும் தொந்தியை மூச்சு பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டேன். வாங்க, வாங்க உட்காருங்க.

எங்க வீட்ல டிவி மக்கர் பண்ணுது. சட்டி ஒலி பாக்கனும் என்றார் அந்த பெண்மணி.

அதுக்கு என்ன. உட்காருங்க என்று சொல்லி தொலைகாட்சி துவக்கிவிட்டு சமையலறைக்குள் விரைவாக சென்று தண்ணீர் குவளை எடுத்து வந்து அவர் முன் வைத்தேன்.

என்ன சார் இல்லையா வீட்ல என்றேன்.

அவரா. டை அடிச்சிட்டு வர போயிருக்காரு. நாளைக்கு ஏதோ பெரிய மீட்டிங்கா.

அட டை அடிப்பாரா அவர்? அடப்பாவி மனிதா உன் முடியை பார்த்து இத்தனை வயதிலும் என்ன இளமை என்றெல்லவா நினைத்திருந்தேன் என்று மனதுக்குள் திட்டினேன்.

பின்னே. நாப்பது வயசில் நரைக்காம இருக்குமா? உங்களுக்கு எத்தனை வயது? என்றார் என்னிடம் சட்டென்று.

வரக்கூடாத கேள்வி என்று நினைக்கும் போதே வந்த கேள்வி. முப்பதததததததைந்து என்றேன். உள்ளே இருந்து என் மனைவி………..தெட்டு என்று முடித்தாள்.

ஹிஹி எட்டு என்று முடித்தேன்.

புயலை கிளப்பிவிட்டு தொடர் முடிந்ததும் வீடு திரும்பினார் அந்த பெண்மணி.

கையில் சப்பாத்தி கட்டையுடன் என் மனைவி பத்திரகாளியாக வெளியே வந்தாள். 38ஐ 35ன்னு சொல்றீங்க, தம் கட்டி வயித்தை இழுத்து பிடிச்சி வச்சிருக்கீங்க, தண்ணி எடுத்திட்டு வர துள்ளி ஓடி வர்றீங்க. இதுல ஞானி ஆவப்போரிங்களா. உங்களை விட 2 வயது பெரியவர் அவரே டை அடிச்சிக்கிறார்ல. போய் டை அடிச்சிட்டு வாங்க என்றாள் காட்டமாக.

பூனை மாதிரி உள்ளே சென்று சட்டை போட்டுக் கொண்டு முடி திருத்தும் நிலையத்திற்கு கிளம்பினேன்.

எதிர்பட்டான் ஞானி. நடந்ததை சொன்னேன்.

ஹாஹா வென்று சிரித்தான்.

நான் இருக்கும் இடத்திலிருந்து நீ இருக்கும் இடம் ரொம்ப தூரம் என்று சொல்லி பறந்தான்.

அவன் போன திசையை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.



ஞானி

ஞானி - சிறுகதை தொகுப்பு
இதன் ஆசிரியர் விக்கி ஞானி என்கிற தளத்தில் விவாதத்திற்கும் அவகாசமளிக்கிறார்.
அங்கு சென்று பார்க்க ஆசை.
விரைவில் நிறைவேற்றிகொள்கிறேன்.
இந்த பதிவினுடன் வைரமுத்து வரிகள்:

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே

{படம் ஜெண்டில்மேன்}



தேனீயுடன் இந்தப்பதிவு முடிகிறது.
அடுத்த பதிவிற்கு விக்கி செல்கிறேன்.


--
http://madscribbler.googlepages.com/

கடவுளின் அருள்