13 ஜூன், 2007

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

ஹல்லோ !! பாலசுப்ரமணியம் கணபதி, வணக்கம்.நானா?,என்னைப் பற்றியா!காத்திருக்கிறேன் கண்களை விரித்து. -
தவபுதல்வன் எனது வலைபதிவில் எழுதிய comment.

நற்றி.....

இவர் ஒரு கை தேர்ந்த techie,
அருமையான கவிஞர்.
எழுத்தில், சந்தேகங்களை நிவர்த்தி செய்வதில் மிகவும் சுறுசுறுப்பு.
குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஒரு பதிவை ஏற்படுதியுள்ளார். .
மேலும் சொல்கிறேனே அடுத்த பதிவுகளில்.


ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் -
வெறும்கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(2)(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனிதஇன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(2)(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதைநமக்காக நம் கையால் செய்வது நன்று

(2)(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) -
அதில்பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(2)(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க (2)
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(2)(ஏழு)


தவபுதல்வன், தேனீ

(தொடரும்.....)

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

நண்பரே! வணக்கம்.
இன்றொரு சந்தேகம்,நிவர்த்தி செய்வீர்களா?
1) என்னுடைய Blog கில், கருத்துக்களைத் தெரிவிக்க Google/Bloger identy வாய்ப்பு மட்டுமே உள்ளது. தங்கள் Blog ல் உள்ளது போல, 3 வாய்ப்புகள் இடம் பெற்றிருப்பது (Google/Bloger, Others and Anonymous )போல, என்னுடைய Blog கிலும் தெரிய, என்ன செய்ய வேண்டும்?

கடவுளின் அருள்