01 செப்டம்பர், 2018

ஒரு ஆறுதல். ஒரு பிரமிப்பு.

காத்திருக்கும் சமயத்தில் நூறு வார்த்தைகள் எழுதலாம்.
மனைவியுடன் NMR Scan center ல காத்திருக்கேன்.
Lungs ல எதோ மச்சம் வளர்ந்திருக்கிறதா என்று டாக்டர் பார்க்கப் போகிறார்.
டாக்டர்களிடமும், மருத்துவ சோதனைச்சாலைகளுக்கும் வந்தால் ஒரு பிரமிப்பு.
எத்தனை மக்கள் வந்திருக்கிறார்கள்!
நமது மாதிரியே எல்லோருக்கும், எதாவது உபாதைகள்.
ஒரு ஆறுதல்.
ஒரு பிரமிப்பு.
உயிர் வாழ்தலின் அவஸ்தைகள்.
தனியாக இந்த அவஸ்தைகளை யோசிப்பதை விட, இந்த ஆசுப்பத்திரி சூழலில் யோசிப்பது மேல். பயத்தை கொடுப்பதில்லை.
காத்திருத்தல், நமக்கோ நம்முடன் இருப்பவர்களுக்கோ எதோ செய்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தியை கொடுக்கிறது.
மனைவி நலமுடன் இருக்கட்டும்.
அவள், இருமலாலும் மூச்சு முட்டுவதாலும் அவஸ்தையுறும்பொழுது மனதிற்கு கஷ்டமாக இருந்தது.
அவள் இயற்கை வைத்தியத்திலோ, வென்னீர் குடித்தோ சரி செய்து கொள்ளலாம் என்று பெரும் பாடு பட்டாள்.
டாக்டர்கள் உதவியும் தேவை. அவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும்.
கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுக்க வேண்டும்.
காத்திருத்தலும் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்