______________________________________________________________
Dhavapudhalvan said...
\\எண்ணங்களின்\\வேகத்தை ஈடு செய்ய வடிப்புகளால் முடியவில்லையே.
______________________________________________________________
எண்ணங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. சில சமயம் மிக வேகமாய் எண்ணங்கள் ஓடுகின்றன!
ஓட்டத்தை 'கபக்' என்று எழுத்தில் பிடிக்க முடிவதில்லை.
____________________________________________
அவ்வப்போது கிறுக்கிப் பழகியதால்......எண்ண ஓட்டம் வரும்பொழுது....இந்த எண்ணத்தை எழுத்தில் பிடித்துவிடலாமா என்று தோன்றுகிறது.
_____________________________________________
'நெகடிவ்வாக'ப் பிடித்து 'பாசிட்டிவாக' பதிப்பித்து விடலாமா என்று தோற்றுகிறது.
_____________________________________________
காமிராவில் நல்ல தருணமொன்றை பதிவு செய்ய முடியாதது போல், எவ்வளவோ எண்ணங்கள் பதிவு செய்ய முடியாமலே மறைந்து விடுகிறது.
எண்ண ஓட்டத்தில் கூட ...இதை...இதை...
capture
செய்து கொள்ளலாமா என்ற குறிப்பும் மனதில் ஓடும்.
_____________________________________________
அட! அந்த நெகடிவை இங்கே பதிவு செய்து விட்டேனே!
_______________________________________________________________
அடுத்த பதிவு wiki குறித்து!
1 கருத்து:
எமது விமர்சனத்தையே ஒரு கருவாக்க் கொண்டு,அற்புதமாக ஒரு பதிவு செய்துள்ளீர். மிக்க நன்று.
கருத்துரையிடுக