21 செப்டம்பர், 2007

அவமானம் தாங்குதல்.

மற்றோரு முத்து வைரத்திலிருந்து:

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு முதல் தகுதி என்ன?

அவமானம் தாங்குதல்.

சுயமானமே பெரிதென்று கருதுகின்றவர்கள் பொதுமானம் காக்க முடியாது.


அனாதைப் பிள்ளைகளுக்கு நிதி திரட்டக் கடை வீதிக்குப் போகிறார் அன்னை தெரசா.


ஒரு கடைக்காரன் கஞ்சன், தேனிலவுக்குக் கூடத் தனியாய்ப் போய் வந்தவன்.



அவனிடம் கையேந்துகிறார் அன்னை."ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு..."



"ஒண்ணும் தரமுடியாது; ஓடிப்போ கெழவி"



ஏந்திய கை மடங்கவில்லை. "ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு..."



"சொன்னாக் கேக்கமாட்டே.."



ஏந்திய இடக்கையில் வந்து விழுகிறது அவன் காறித்துப்பிய கற்றை. எச்சில் விழுந்த இடக்கையை மூடிக்கொண்டு,



"நீ காறித்துப்பியது எனக்கு; என் பிள்ளைகளுக்கு..." என்று வலக்கை நீட்டுகிறார் அன்னை.



எழுந்து நின்று கும்பிட்டு, கண் துடைத்துக்கொண்டே காசு போடுகிறான் கடைக்காரன்.

கேள்விகளுக்கு உருப்படியான பதில்கள் கொடுப்பது ஒரு கலை.
எனது அடுத்த பதிவில் நண்பர் ப. நா கேட்கும் கேள்விகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

இதே அரசியல் என்றால் ?!!!!!!!!!!

test

please click the link This song is sung by. Satyanarayana.