14 செப்டம்பர், 2007

எனக்குப் பிடித்தது.

இதோ குமுதத்தில் வாசித்த எனக்குப் பிடித்த வைரமுத்து பதில்:

இந்த உலகத்தில் கொடுத்து வைத்தவர் யார்?

இதோ இந்தப் பதிலை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் -
ஆண்டுதோறும் நிகழும் பத்து லட்சம் பூகம்பங்களில் ஏதேனுமொன்றால் இந்த பூமி எங்கோ ஒரு மூலையில் அதிர்ந்து கொண்டிருக்கிறது.


உலகின் ஏதேனுமோர் எரிமலை அக்கினி வாந்தி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.



ஏதோ ஒரு சாலை விபத்தில் உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன உடல்கள்.


சில 'பயாப்சி' சோதனைகள் புற்றுநோயை உறுதிப்படுத்துகின்றன.


பலரின் பங்குகள் சந்தையில் சரிந்து கொண்டிருக்கின்றன.


உரிமையில்லாத பெண் உடல்களில் சில மிருகங்கள் வன்முறையால் நுழைந்து கொண்டிருக்கின்றன.


சில நீதிமன்றங்களில் உறவுகளின் கடைசி கையொப்பம் பதிவாகிக் கொண்டிருக்கிறது.



இவற்றுள் ஏதோரு பாதிப்பும் நேராமல் குமுதம் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களல்லவோ கொடுத்து வைத்தவர்?

இசை அரசி பி.சுசீலா அவர்கள் படிய சமீபத்தில் கேட்டவை.

solo: பக்கத்து வீட்டு பருவமச்சான்...பார்வையிலே படம் பிடிச்சான்...
with TMS 1)அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்......
2)ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன்.... நீ ஒரு தனிப் பிறவி.....

அடுத்தப் பதிவில் வைரமுத்துவின் இன்னொரு அருமையான பதில்.

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

இசையரசியின் பழைய படல் வரிகளை பதிவிலே குறிப்பிட்டதின் மூலம், எம் இளமைக்கால நினைவுகளை நினைவுப்படுத்தி
விட்டீர்கள். 'தனிமையிலே இனிமை காண முடியுமா ' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு, தனிமையில் பாடிய பாடல்களில் இவையும் சில. மிக்க மகிச்சி.

பின் குறிப்பு:: நம் பதிவுகளில் இணையதள, இணைய வலைப்பக்கங்கள் முகவரிகளைக் குறித்தால், அதை Click செய்து, அந்தப் பக்கத்திற்கு செல்லமுடிகிறது. 'இசையரசி', 'தமிழ் நெஞ்சங்கள்' 'தேனி' இப்படி குறியீடுகள் தமிழில் எப்படிக் கொண்டு வருவது ? இனிய வினாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.

கடவுளின் அருள்