04 டிசம்பர், 2010

அட இவனுக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்று பொறாமை வரும்பொழுது என்ன செய்வது?

பொறாமை வரும்போது, இந்த ஔவையார் பாடல் நினைவுக்கு கொணர்தல் நல்லது. 
நம்மால் கூட சில காரியங்களை எளிதாக சிறப்பாக செய்ய முடியும். 
அதை செய்வோம். 
நாம் பொறாமை படுபவர்களிடமிருந்து அவர்கள் சிறப்பாக செய்யும் காரியங்களை பாராட்டிப் பெற்றுக்கொள்வோம்.

"வான் குருவியின் கூடு வல்சுரக்குத் தொல் கறையான்
தேன் சிலம்பி யாவருக்கும் செய்ய அரிதால் - யாம் பெரிதும் 
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் கான் 
எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது!"  - ஔவையார்

 தூக்கணாங் குருவியின் கூடு, வலிமை உடைய அரக்கு, பழைமையான கறையான், தேன், சிலந்திக் கூடு, இவை யாவர்க்கும் செய்ய அரிதானவை, எனவே 'யாம் பெரிய'  என  தற்சிறப்புப் பேச வேண்டாம். எல்லோருக்கும் ஒவ்வொரு காரியம் எளிதானது, எப்போதும்! 


சில பல படங்களை பார்த்து வைத்துக் கொள்கிறேன். அடுத்த கேள்வியாக 'சமீபத்தில் ரசித்த புகைப்படம் எது?'வென கேள்வி கேட்டுக்கொள்கிறேன். ஒரு ஐந்து புகைப்படங்களை பிரசுரித்து அடுத்த பதிவை ஜமாய்கிறேன். 

எதேர்ச்சையாக இதை படிக்க நேரிடுபவர்களுக்கு நன்றி. இங்கு இருக்கும் கேள்விகளுக்கு தாங்களும் சின்னதாக, சிக்காக பதில் தரலாம் - காமென்ட் பகுதியில்

5 கருத்துகள்:

Dhavappudhalvan சொன்னது…

"எதேர்ச்சையாக இதை படிக்க நேரிடுபவர்களுக்கு" அப்படிதான் ஆகிவிட்டது எம் நிலைமை, முகநூல் பதிவுகளுக்கு அதிக நேரம் செலவிடுவதால். நினைவுக்கு வந்தது நினைத்தவுடன் வாசித்து விட்டேன். வித்தாயாசமான பதிவுகள். மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

dr.raghavan சொன்னது…

எண்ணங்களை எழுத முயற்சி
GREAT ANNA .ஆயிரமாயிர எண்ணங்கள்
ஆழ்மனத்தில் அலைமோத
அகழ்ந்தெடுக்கும் சொற்களெல்லாம்
அம்பலத்தில் நடனமாட
அருமையான காட்சிகளாய்
அதுவமைந்து விட்டால்
ஆரவாரம் பெருக்கெடுத்து
அதிருமே அரங்கமது அண்ணனா.....

dr.raghavan சொன்னது…

அண்ணனா..... ஆசைதான்
எனக்கு தெரிந்ததைச் சொல்ல

Unknown சொன்னது…

thediya pakkangalil piditha pakkam.

பெயரில்லா சொன்னது…

என்றாலும் தற்பெருமை ஆபத்தானது. பிறர் உங்களுக்கு எது செய்வது பிடிக்குமோ அதை நீங்களும் மற்றவருக்குச் செய்யலாம்.

கடவுளின் அருள்