08 மார்ச், 2026

தப்பு... தப்பா? இல்லை மஹா தப்பா?

 


🧐

ஆதாரம்: வேலுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் விதுர நீதி சொற்பொழிவு.

நாம எல்லாருமே தப்பு பண்றோம். ஆனா தப்பே பண்ணாம இருக்கிறதுதான் ஒரு மஹா தப்பு! ஏன்னா தப்பு செய்யாதவன் மனுஷனே இல்லை.

சரி, நாம பண்ற இந்த தப்புக்களை எல்லாம் பார்க்கிற 'முழு உரிமை' யாருக்கு இருக்குன்னு நினைக்கிறீங்க?

மூணு பேருக்குத்தான் அந்த ஸ்பெஷல் ரைட்ஸ் இருக்கு:

தாயார் (பெற்றவள்/ஜெகன்மாதா)

அவளுடைய நாயகன் (பரந்தாமன்)

தர்ம தேவதை

சரி, இதைத் தப்பா எடுத்துக்காதீங்க... ஒருவேளை தப்பா எடுத்துக்கிட்டாலும் ஒரு தப்பும் இல்லை! 😉

உண்மையைச் சொல்லப்போனா, நாம பண்ற தப்புக்களை எல்லாம் அந்தத் தாயாரோ, அவளோட நாயகனோ இல்ல தர்ம தேவதையோ பெருசா கண்டுக்கிறதே இல்லை. அவங்க "போகட்டும் விடு"ன்னு விட்டுடுறாங்க.

ஆனா நாம? நாம தான் பெரிய 'ரைட்டு'ன்னு ஒரு நினைப்பு! அவங்க செய்ற தப்புக்களை (அதாவது இறைவனோட விளையாட்டுக்களை) நாம எவ்வளவு ஆர்வமா, தப்பாம நோட்டம் பார்க்கிறோம்? மத்தவங்க பண்ற சின்ன சின்ன தப்புக்களை பூதக்கண்ணாடி வச்சு தேடுறோம்.

இதைப் பார்த்து அந்த தர்ம தேவதை அங்கலாய்ப்பது என் காதில் விழுகிறது:

"நாங்களே உங்கள் தப்புக்களைக் கண்டுக்கிறது இல்லை... ஆனா நீங்க மட்டும் ஏன் மத்தவங்க தப்புக்களைப் பார்க்கிறதுல இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க?"

தப்பு... தப்பா? இல்லை மஹா தப்பா?

  🧐 ஆதாரம்: வேலுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் விதுர நீதி சொற்பொழிவு. நாம எல்லாருமே தப்பு பண்றோம். ஆனா தப்பே பண்ணாம இருக்கிறதுதான் ஒரு மஹா தப...