புராணம் என்றால் என்ன?
புராணம் பழையதாக இருக்கலாம். ஆனால், இன்று படித்தாலும் அதில்
சொன்ன கருத்துக்களை இப்போதைய சந்தர்ப்பத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
சொன்ன கருத்துக்களை இப்போதைய சந்தர்ப்பத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
புராணத்திற்கு ஐந்து தகுதிகள் இருக்க வேண்டும்:
- உலகம் எப்படி உண்டாக்கப் பட்டது என்பதை புராணம் சொல்ல வேண்டும்.
- உலகம் எப்படி அழியும் என்பதை புராணம் சொல்ல வேண்டும்.
- உலகம் தொடங்கி, எந்தெந்த வம்சித்தினர் உலகை ஆண்டனர் என்பதை புராணங்கள் சொல்லும்.
- அந்தெந்த காலக்கட்டத்தில் அரச குடும்பத்தினர் எவ்வாறு உலகை நிர்வாகம் செய்தனர் என்பதை சொல்வதும் புராணங்கள்.
- பகவான், அந்தந்த கால கட்டத்தில் எடுத்த அவதாரங்கள் - அந்த அவதாரங்கள் எவ்வாறு உலகை உவகை அடையச் செய்தனர் என்ற கதைகளையும் புராணங்கள் சொல்லும்.
18 புராணங்கள் உள்ளன.
தற்பொழுது பாகவத புராணம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வியாச பகவான் எழுதி, அவர் மகன் சுகர், ப்ரிக்ஷுத் மகாராஜாவுக்கு
சொல்லும் பாணியில் புராணம் அமைக்கப் பட்டுள்ளது.
புராணம் சொல்லும் பெரியவர்களுக்கும், YouTube வசதிக்கும் மிக்க நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக