நிற்பதுவே நடப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால் சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக