இப்ப மணி மதியம் 2:25.
இன்று இந்தப் பொழுதை எதிர் நோக்கி இருந்தேன்.
ஆபிசில் 100 வார்த்தைகள் எழுத இந்தப் பொழுதை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன். மக்கள் இல்லை.
எல்லோரும் சாப்பிட போய் விட்டார்கள்.
மூன்று மணி வரை ஆகும் மக்கள் வருவதற்கு.
இது நமக்கு தோதுவான நேரம்.
இன்று இதை எழுதி விட்டால், இனி இரண்டு நாட்கள் அலுவலகத்தில் எழுத இயலாது. விடுமுறை.
எல்லோரும் எதை எதையோ எழுதி சாதனைகள் புரிகிறார்கள்.
நாம் இந்த 100 வார்த்தைகள் எழுதுவதை சாதனையாக கருதுகிறோம்.
இதை எழுதுவதற்கு நிரம்ப யோசிக்கிறோம்.
ஒரு control+shift+c போட்டுப் பார்ப்போமா? எவ்வளவு வார்த்தைகள் எழுதியிருக்கிறேன்?
72 ப்பா.
எழுத உட்கார்ந்தால் ‘ஜப ஜப’ வென்று வார்த்தைகள் கொட்டிட வேண்டும்.
அது ஒரு கருத்து குறித்து இருக்க வேண்டும்.
தமாஷாக இருக்க வேண்டும்.
மீண்டும் ஒரு முறை படித்தால், புன்னுருவல் புரிய வேண்டும்.
அது ஒரு கருத்து குறித்து இருக்க வேண்டும்.
தமாஷாக இருக்க வேண்டும்.
மீண்டும் ஒரு முறை படித்தால், புன்னுருவல் புரிய வேண்டும்.
2:45.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக