31 ஆகஸ்ட், 2018

விமானப் பயணங்கள்

ஏர் பிகாஸாஸ் (Air Pegasus) விமான சர்விஸே இப்போது இல்லை. கம்பெனியை, மூடி விட்டார்கள். (Ceased 27 July 2016) King Fisher Airlines மூடியது - (Ceased operations: October 2012) இந்த தகவல்களை ஏன் சொல்லுகிறேன்? Air Pegasus விமானத்தில் எப்பொழுது மனைவியை அழைத்துக் கொண்டு சென்றேன் என்று தேடினேன். வருடம் 2015. அக்டோபர். 30, 31 தேதிகளில். அந்த சமயம் sms tweet செய்து கொண்டு பறந்தோம். காலம் மாறுகிறது. வசதிகள், கம்பெனிகள் மூடப் படுகிறது. சென்னை விமான தளத்தில் சில king fisher விமானங்கள் உபயோகமில்லாமல் நின்று கொண்டிருந்தன. அந்தக் காட்சி அம்மாவை பெங்களூர் கூட்டி சென்ற காலத்தை நினைவு படுத்தியது. எப்பொழுது அம்மாவை கூட்டிக்கொண்டு பெங்களூரு சென்றேன்? நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். 2006 ல், இருக்கலாம். அப்பொழுது king fisher. பாட்டியை ஒரு முறை கோவை கூட்டிச் சென்றது ஏர்-இந்தியா விமானத்தில்.
1983 இருக்கலாம்.



30 ஆகஸ்ட், 2018

ஆகாயத்தில் நூறு வார்த்தைகள் எழுதி முடித்து விட வேண்டாமா?

இதோ...இண்டிகோ 6 E 5991 விமான crew கேட் ஒன்றுக்கு வந்து விட்டார்கள்.
15:50 க் கு Departure.

விமானம் வந்தவுடன் உள்ளே நுழைய விடுவார்கள்.

அதற்குள், நூறு வார்த்தைகள் எழுதி விடுவேனா?

ஹுப்பளி காத்திருத்தில் சமயத்திலும், சென்னை காத்திருந்த சமயத்திலும்,
எடுத்த படங்களை, மறக்காமல் இந்தக் குறிப்பில் போட வேண்டும்.

Hubballi
Hubballi
















Chennai

















நூறு வார்த்தைகள் எழுதுவதற்குள், விமானம் புறப்பட ஆயுத்தமாகி விட்டது. ‘எடுத்த படங்களை’ என்ற வார்த்தைகளிலிருந்து ஆகாயத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். மேகங்களிடையே உட்கார்ந்து எழுதிக் கொண்டுள்ளேன்.


விமானத்தில் முதல் முறையாக வாஷ் ரூம் உபயோகித்த பின்,
சந்தோஷமாக வானத்தில் எழுதிக்கொண்டுள்ளேன்.






















ஹுப்பள்ளி வர இன்னும் இருபது நிமிஷங்கள் உள்ளனவாம்.
Announce பண்ணிட்டிருக்காங்க.
ஆகாயத்தில் நூறு வார்த்தைகள் எழுதி முடித்து விட வேண்டாமா?


மனைவிக்கு இன்னும் ஏர் பிகாசஸ் என்று ட்ராவல் பண்ணினோம்
என்பதை இன்னும் exact  சொல்லவில்லை.


பழைய குறிப்பை பார்க வேணும்.

அடுத்த குறிப்பில் சொல்கிறேனே...

29 ஆகஸ்ட், 2018

ஹுப்பள்ளி ஏர் போர்ட்.

கடைசி தடவை ஹுப்பள்ளி ஏர்போர்ட் எப்ப வந்திருந்தோம்?
மனைவி கேள்வி கேட்டு விட்டாள்.

பதில் சொல்லணம்.

மனைவியின் அண்ணன் ரிடையர்மெண்ட் ஆன சமயம். ஒரு அக்டோபர் மாதம். வருடம் 2015? பெங்களூருக்கு ஏர் பிகாசஸ் நிறுவன விமானம் மூலம் பெங்களூரு சென்றிருந்தோம்.
இருக்கட்டும்.
அப்ப சின்னதாக இருந்தது ஏர்போர்ட்.
பார்க்கிங் சின்னது. இப்ப நல்ல பெரிய பார்க்கிங்.
மகனை ஒரு தடவை ஏர் போர்ட் விடும் பொழுதும் ஏர் போர்ட் சின்னதாகத் தான் இருந்தது.

ஒரு வாரம் முன்பு ரம்யாவை விட ஏர் போர்ட் வந்திருந்தேன்

இப்ப நிறைய செக்யூரிட்டி பர்சனல், செக்-இன்.
எனக்கு தெரிந்து, கிங் ஃபிஷர், ஏர் பிகாசஸ் நிறுவனங்கள் விமானம் ஓட்டிக் கொண்டிருந்தது.
அம்மாவை ஒரு தடவை கிங் ஃபிஷர் விமானத்தில் பெங்களூர் கூட்டிச் சென்றுள்ளேன்.
இப்ப இண்டிகோ நிறுவன விமானத்தில் சென்னை சென்று கொண்டிருக்கிறோம்.
ஹுப்பள்ளி விமான நிலையம், இப்பொழுது நல்ல பெரிசாக வளர்ந்து விட்டது.

28 ஆகஸ்ட், 2018

மனைவிக்கு ஏற்பாடுகள் பிடித்திருந்தது.

காலையில் முதல் முதல் வேலையாக, எண்ணங்களை  எழுதும் நாள் வரும் வரை,
இந்த நோட்புக் உபகரணத்தை உபயோகித்தே என் முதல் ட்ராஃப்டை
செய்து கொள்கிறேன்.

மணி இப்பொழுது 14:47.
நண்பர் குல்கர்ணி இன்று ரிடையர்மெண்ட் பார்ட்டி கொடுத்தார்.


நேற்று, நண்பர் ஜாலிக்கர் ஏற்பாடு செய்திருந்த அதே செஞ்சுனெரி கம்யூனிட்டி ஹால்.

கொஞ்சம் அலங்காரங்கள் ஜாஸ்தி. வெள்ளை,ஆரஞ்சு வண்ண பலூன்கள்.
நீல வெள்ளை பலூன்கள்.



இன்று ஒரு லீவே போட்டு மனைவியை நானே அழைத்து கொண்டு சென்றேன்.
படு ரிலாக்ஸ்டாக உணவருந்தினோம்.

ஆபீசிலிருந்து வருவது, மறுபடி போவது போன்ற டெண்ஷன்கள் இல்லை.
மனைவிக்கு ஏற்பாடுகள் பிடித்திருந்தது.


என் ரிடையர்மெண்டுக்கும் இது மாதிரி ஏற்பாடு என்று சொல்லி விட்டாள்.
மனைவி சொல்லியபின், என் ரிடையர்மெண்ட் குறித்து என்ன யோசனை?


பார்ட்டிகளிலே மக்கள் கேட்கும், ‘என் ரிடயர்மெண்ட் எப்ப’ என்ற கேள்வி இருக்கும்.

பதில்களின் இவரவர் ரிடைர்மெண்ட் இப்ப என்ற தகவல்களும் இருக்கும்.

27 ஆகஸ்ட், 2018

இன்று ஒரு விருந்து

‘Project Hundred Words’ folder க்கு பச்சைக் கலர் கொடுத்தேன். அந்த folder உள்,
உள்ள தமிழ் folder க்கு சிவப்புக் கலர் கொடுத்திட்டேன். பேஷ்.


இன்று அலுவுலகத்தில் எழுதும் நேரம்:


மதியம் எழுத அவ்வளவாக தோது படாது என்று காலம்பறவே
எழுத தொடங்கி விட்டேன்.
நண்பர் ஒருவர் இந்த மாதம் ரிடையர் ஆகிறார்.
மதியம் எல்லோருக்கும் உணவு ஏற்பாடு செய்திருக்கிறார்.

அங்கு செல்ல வேண்டும்.
அங்கு உணவு அருந்திய பின் எப்பொழுது ஆபிஸ் வருவேனா தெரியாது.
மனைவியும் இந்த விருந்தில் கலந்து கொள்வாள்.
வீட்டிற்குப் போய் மறுபடி ஆபீஸ் வர வேண்டியிருக்கும். எழுத ஓடாது.


100 வார்த்தைகள் ஒரே முட்டா கொட்டிட வேண்டுமா?
அல்லது இங்கே நிறுத்தி மாலையில் முடித்துக் கொள்ளலாமா?


மாலையில் முடித்துக் கொள்ளலாம். (83)


மதியம் முடித்துக் கொள்கிறேன்.  
2 மணிக்கெல்லாம் ஆபிஸ் வந்து விட்டேன்.
வீட்டிற்குச் செல்லவில்லை.
மனைவி ஆட்டோவில் மனை சென்று விட்டாள். (100)




26 ஆகஸ்ட், 2018

சிறி

தொடங்கி விடப்பா இன்றைய விடுமுறையை கொண்டாட.
கொண்டாட்டம் என்பது எனக்கு எழுதுவது.
மனதில் தோன்றுவதை எழுதுவது.
இன்றைய கொண்டாட்டம், 'ரக்‌ஷா பந்தன்'

'சிறி' கிட்ட சொல்லி காலம்பற ஐந்து மணிக்கு எழுந்து நூறு வார்த்தைகள் எழுதிவிடலாம் என்று இன்றைய எழுதும் ப்ராஜக்டை நிர்ணயித்திருந்தேன்.
எழுந்திருக்கவில்லை.
என்றாவது ஒரு நாள் காலையில் முதல் வேலையாக எழுத தொடங்குவேன். தற்போதைக்கு அடுத்த விடுமுறை நாளுக்கு இதை குறியாக வைத்துக் கொள்கிறேன்.

எழுத தொடங்கும் பொழுது மணி 11:30.
நன்று.

தங்கை ராக்கி அனுப்பியிருந்தாள்.
உள்ளூர சந்தோஷம்.
ஆன் லைனில் ஆர்டர் செய்து, குரியர் மூலம் வந்தடைந்த ராக்கிக் கயிறு, குங்குமம், அரிசி, சின்ன ட்ரே, இரண்டு பட்டில்கள், சாக்கலேட் எல்லாவற்றையும் அன்புடன் உபயோகப் படுத்தும் நாள்.

கையில் ராக்கி கட்டிக் கொள்ளும் நாள்.

சந்தோஷமாக கட்டிக் கொண்டேன்.

ரக்ஷா பந்தன்.

பாக்கியவான். எனக்கு இரண்டு தங்கைகள்.
தங்கைகளுக்கு நல்லவைகள் நடக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.



--
Sent from Gmail Mobile

25 ஆகஸ்ட், 2018

Note book

நோட்டு புத்தகங்கள் என்றால் எனக்கு பிரியம். காகித நோட்டு புத்தகங்கள் இரண்டு மூன்று வைத்துக் கொண்டு அவ்வப்போது எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.
பாக்கெட்டில ஒரு சின்ன நோட்புக் வைத்துக் கொண்டுள்ளேன்.

இங்கே, டிஜிட்டலாக எவ்வளவு நோட்டு புத்தகங்கள் வைத்துக் கொண்டுள்ளேன்?
    1.    Zoho note book
    2.    Google keep
    3.    Evernote
    4.    Box note.
    5.    iNote
    6.    Drop box
சரி 6 போதும். எதேஷ்டம். தாராளம்.
நேற்று, அலுவலகத்தில் லன்ச் டைமில் எழுதிக்கொள்வதாக திட்டம் செய்திருந்தேன். அது மாதிரி இந்த விடுமுறை தினத்தில் காலையில் முதல் வேலையாக இதை செய்யலாமென்று திட்டம் போட்டிருந்தேன்.
சரிதான். எல்லா திட்டங்களும் சரி தான்.
ஆனால் இதை எழுதுவது காலை எட்டு மணிக்கு மேல் தான்.
அது வரை எனக்கு டைம் கிடைக்கவில்லை.
என்ன செய்து கொண்டிருந்தேன்?

நண்பனுடன் ஒரு வாக்கிங்.
மனைவியுடன் அளாவுதல்.
அப்புறம்?

எழுதினேன் நூறு வார்த்தைகள்.

24 ஆகஸ்ட், 2018

ஒரு control+shift+c போட்டுப் பார்ப்போமா?

இப்ப மணி மதியம் 2:25.  
இன்று இந்தப் பொழுதை எதிர் நோக்கி இருந்தேன்.
ஆபிசில் 100 வார்த்தைகள் எழுத இந்தப் பொழுதை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன். மக்கள் இல்லை.
எல்லோரும் சாப்பிட போய் விட்டார்கள்.
மூன்று மணி வரை ஆகும் மக்கள் வருவதற்கு.
இது நமக்கு தோதுவான நேரம்.
இன்று இதை எழுதி விட்டால், இனி இரண்டு நாட்கள் அலுவலகத்தில் எழுத இயலாது. விடுமுறை.
எல்லோரும் எதை எதையோ எழுதி சாதனைகள் புரிகிறார்கள்.
நாம் இந்த 100 வார்த்தைகள் எழுதுவதை  சாதனையாக கருதுகிறோம்.
இதை எழுதுவதற்கு நிரம்ப யோசிக்கிறோம்.


ஒரு control+shift+c  போட்டுப் பார்ப்போமா? எவ்வளவு வார்த்தைகள் எழுதியிருக்கிறேன்?


72 ப்பா.


எழுத உட்கார்ந்தால் ‘ஜப ஜப’ வென்று வார்த்தைகள் கொட்டிட வேண்டும்.
அது ஒரு கருத்து குறித்து இருக்க வேண்டும்.
தமாஷாக இருக்க வேண்டும்.
மீண்டும் ஒரு முறை படித்தால், புன்னுருவல் புரிய வேண்டும்.

2:45.

23 ஆகஸ்ட், 2018

அட, வார்த்தைகளை இங்கு கொணர - வேலை செய்வது போல் உள்ளதே!

இந்தக் கம்ப்யூடரிலே கூகிள் doc உபயோகப் படுத்தலாம்.
Doc உபயோகப் படுத்துவதையோ, அதில் தமிழில் எழுதும் வசதியையோ,
வேலை செய்யும்மிடம்  கட்டுப் படுத்தவில்லை.


நேற்று, வீட்டிலே 100 வார்த்தைகள் எழுதும் பொழுது, ஒரு யோசனை வந்தது.
ஆஃபீசிலே நூறு வார்த்தைகள் எழுதும் முயற்சியை எடுத்துக் கொள்ளலாமென.
இந்த ஒரு ஆசை நல்லது தான்.
எதாவது  ஆக்கம் செய்கிறோம் என்பது, மனதில் ஒரு உற்சாகத்தை கொடுக்கலாம்.
வேலை பளுவை சற்று மாற்றலாம்.
வேலைகளை தொடங்கும் கடினத்தை கடக்கலாம்.


(அட, வார்த்தைகளை இங்கு கொணர வேலை செய்வது போல் உள்ளதே!)


வேலைகள் செய்வது மாதிரியோ அல்லது 100 வார்த்தைகள் எழுதுவதற்கு
பெரும் பாடு படுவது மாதிரியோ இருக்கக் கூடாது. ஈசியாக இருக்க வேண்டும்.
அதற்கு மனதை போட்டு பிசைந்து கொள்ளக் கூடாது.


மனது இந்த நிலைக்கு வந்தால், ஒரு இலாபமும் இல்லை.

அதனால், ‘சீட்’  வீட்டுக் கிளம்ப வேண்டும்.  யாரிடமாவது பேசி சிரிக்க வேண்டும்.

21 ஆகஸ்ட், 2018

முயற்சிப்போம்.

அந்த 100words.com தளத்தில் 18 மாதங்கள்,  
தினமும் நூறு வார்த்தைகள் எழுதியுள்ளேன்.
மே 16 முதல் ஆகஸ்ட் 18 வரை 28 மாதங்கள்.
இதில் 18 மாதங்கள் எழுதியுள்ளேன்.
64 சதவீத வெற்றி. நல்லதொரு முயற்சி.
இன்னும் கணக்கு போட்டால் (18*30*100) 54000+  வார்த்தைகள்.
(வெற்றிப் புன்னகை = சந்தோஷம்)


வலைதளங்கள், யோகா, அம்மா, என்பெண், ஆபிஸ் பரீட்சை
ஆகிய தீம்களில் எனது  எண்ணங்களை எழுதியுள்ளேன்.


இது போல் தமிழிலும் எழுதிக் கொள்ளலாம்  -
என்று நினைத்து...நினைத்து...நினைத்து….எண்ணி... எண்ணி ….
ஒரு மாதிரி இப்பொழுது எழுத ஆரம்பித்துள்ளேன்.  
எழுதுவதற்கு சந்தோஷமாய் உள்ளது.


சில எழுத்துக்கள் மனதிற்கு ஆறுதல் தருகிறது.
சில எண்ணங்கள் செயலாகவும் ஆகிறது.  
என்ன- செயலாவது சொற்ப எண்ணங்களே!


சில நாட்களுக்குப் பிறகு சில கவலைகளை படிக்கும் பொழுது,
இயலாமையை குறித்து மனம் தளர்வுறுகின்றது.


தளர்வு - சந்தோஷம் - முயற்சி...இதுதான் வாழ்க்கை.

ஏதுவாகிலும் - முயற்சிப்போம்.

05 ஆகஸ்ட், 2018

புராணம்

புராணம் என்றால் என்ன?


புராணம் பழையதாக இருக்கலாம். ஆனால், இன்று படித்தாலும் அதில்
சொன்ன கருத்துக்களை  இப்போதைய சந்தர்ப்பத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
புராணத்திற்கு ஐந்து தகுதிகள் இருக்க வேண்டும்:

  1. உலகம் எப்படி உண்டாக்கப் பட்டது என்பதை புராணம்  சொல்ல வேண்டும்.
  2. உலகம் எப்படி அழியும் என்பதை புராணம் சொல்ல வேண்டும்.
  3. உலகம் தொடங்கி, எந்தெந்த வம்சித்தினர் உலகை ஆண்டனர் என்பதை புராணங்கள் சொல்லும்.
  4. அந்தெந்த காலக்கட்டத்தில் அரச குடும்பத்தினர் எவ்வாறு உலகை நிர்வாகம் செய்தனர் என்பதை சொல்வதும் புராணங்கள்.
  5. பகவான், அந்தந்த கால கட்டத்தில் எடுத்த அவதாரங்கள் - அந்த அவதாரங்கள் எவ்வாறு உலகை உவகை அடையச் செய்தனர் என்ற கதைகளையும் புராணங்கள் சொல்லும்.


18 புராணங்கள் உள்ளன.


தற்பொழுது பாகவத புராணம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.


வியாச பகவான் எழுதி, அவர் மகன் சுகர், ப்ரிக்ஷுத் மகாராஜாவுக்கு சொல்லும் பாணியில் புராணம் அமைக்கப் பட்டுள்ளது.

புராணம் சொல்லும் பெரியவர்களுக்கும், YouTube வசதிக்கும் மிக்க நன்றி.

test

please click the link This song is sung by. Satyanarayana.