16 ஏப்ரல், 2009

கேள்வியும் நானே பதிலும் நானே.





முந்தையப் பதிவு:
சமீபத்தில் நீங்கள் ரசித்துப் பார்த்த திரைப்படம் எது?
"மெக்கனாஸ் கோல்ட்."
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னால் பெங்களூர் லிடோ தியேட்டரில் மெக்கனாஸ் கோல்ட் சினிமாபார்த்திருந்தேன்.
அப்பொழுது இவை எல்லாம் நடக்கும் என்று தெரியாது:
௧) டி வி என்ற கருவி வரும்.
௨) சன் -டி வி சானல் வரும்
௩)ஹாலிவுட் படங்களை அருமையாக தமிழ் வசனங்களுடன் நமக்குத் தருவார்கள்.
ஞாயிறு மாலையிலே 'மக்கான' என்ற சமாதனமான ஹீரோ, குறு குறுப்பான 'கலரேடோ' என்ற வில்லனுடனும் இன்னும் தங்க ஆசை கொண்டவர்களுடனும் சேர்ந்து, மலைகள் முட்டி நிற்கும் தரைகளிலே, குதிரைகள் மீதேறி விறு விறுவென்று தங்கம் தேடும் காட்சிகளைப் பார்த்தது மிகவும் சூப்பராக இருந்தது.
என்ன, அந்த ஹாலிவுட் அழகிகள் இயற்கையான குளமொன்ரிலே பிறந்த மேனியாக நீச்சல் போடும் காட்சிகளை கத்தரித்து விட்டார்கள்!
அடுத்த பதிவிலும் 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்று இன்னுமொரு கேள்வியைக்கேட்டு பதிலளிக்க முயற்சிக்கிறேன்

20 மார்ச், 2009

சந்தோஷம் 2







Fly over ஏறும்பொழுது ஒரு கவனம்.



இறங்கும்பொழுது ஒரு கவனம்.



கூட வரும் வண்டிகளை பார்த்து,



எனது வண்டியை திருப்பும்பொழுது ஒரு கவனம்.






கவனங்களில் வெற்றி கண்டு,



நேர் ரோடில் ஹாயாக வண்டியைசெலுதும்பொழுது ஒரு சந்தோஷம்!






நீண்ட நாட்களாக ஆனந்த விகடனில் வரும் "கேள்வியும் நானே பதிலும் நானே" பகுதியில் வருவது மாதிரி கேள்வி பதில் எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. அடுத்த பதிவில் சந்தோஷமாக எழுதுகிறேனே!!

06 மார்ச், 2009

வேங்கடவன்.


பல இடங்களில் முட்டியை வலிக்கச் செய்யும் படிகள்.
சில இடங்களில் இதயத்தை சாதரணமாக இயங்க வைக்கும்,நடைபாதைகள்.
எதற்கும் நமது முறைக்கு காத்திருக்க வேண்டும் -என்பதை உணர்த்தும் பலவகையான மனிதர்கள் வரிசை.
நமது முறை கண்டிப்பாக வரும் என்று தெரிந்திருந்தும்,மற்றவனை/மற்றவளை முந்த வைக்கும் மனது!இவையனைதும் செய்தால்,மனித தெய்வங்களுடன் சேர்ந்து,
ஒரு நிமிடம்வேங்கடவனை பார்க்கும் சந்தோஷம்.

அடுத்த பதிவையும் தயாராக இருக்கும் கவிதை கொண்டு ஒப்பேற்றி விடுகிறேன்.

09 பிப்ரவரி, 2009

90 வினாடிக்குள்!

சுந்தர் வீட்டிலே கோபித்துக் கொண்டு அந்த சிக்னல் அருகே வெறுப்பாக நின்றிருந்தான்.

அப்பாவும் அம்மாவும் சேர்ந்து மாற்றி மாற்றி திட்டிய, "கையாலாகதப் பயலே" என்ற "திட்டு ஜாம்" மனதில் மிகுந்த நெரிசலை ஏற்படுத்தியிருந்தது.

சிவப்பு விளக்கு போட்டு, நல்ல எண்ணங்களை நிறுத்தியிருந்தது - மனம்!

டவுன் பஸ் ஒன்று சிக்னலில் நின்றது.கபக்கென்று சிறுவனொருவன், பஸ்ஸிலிருந்து வெளியே வந்தான். ஓடிச்சென்று அருகில் உள்ள மின்சாரிய வாரிய ஆஃபீஸில் பில்லிற்கான பணத்தை கட்டி விட்டு, ஓடி வந்து மறுபடி அதே பஸ்ஸில் தொற்றிக்கொண்டு விட்டான்.

பஸ் சிக்னலிலே நிற்ற 90 வினாடியிலே சிறுவன் எலக்டிரிசிட்டி பில்லைக் கட்டி விட்டான்.

பச்சை விளக்கு விழுந்து பஸ் புறப்பட, சுந்தர் மனதிலும் பச்சை சிக்னல் விழுந்தது!

"அட, இந்த 90 வினாடிக்குள் முடியும் வேலைக்கா நான் வீட்டில் சண்டை போட்டேன்? அப்பாவிடம் வண்டி கொடுக்காவிட்டால் பில் கட்டப்போக மாட்டேன் என்று கத்தினேனே! நீ கட்டும்மா என்று அம்மாவிடம் சாடினேனே!"

ஓட்டமெடுத்தான் வீட்டிற்கு. அம்மா செய்த பொங்கலை சாப்பிட!

அடுத்த பதிவாக ஒரு கவிதையை கொணர்கிறேன்.

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...