தோல்வி என்று எண்ண வேண்டாம். சோம்பேறித்தனம் என்று வருந்த வேண்டாம்.
மனதில் எண்ணமிருக்கிறது. செயல் படுத்த வேண்டும் என்ற குறி இருக்கிறது. எண்ணமும் குறியும் இருந்தால் போதாதா? வெற்றி பெறவேண்டுமென எழுதியா உள்ளது? எண்ணமும் செயலும் முடிவில்லாமல் இருந்தால் போதாதா?
முயற்சி இருக்கிறது. முயற்சியில் மீண்டும், மீண்டும் துவண்டாலும் மீண்டெழ துணிவுள்ளது.
விட்டத்தைப் பார். விட்டதை தொடரு. எண்ணங்கள் வராமல் அவஸ்த்தைப் படு.
சொற்களை ஜோடனை செய்ய முடியாமல் தவிப்புரு.
இந்த எழுதும் செயல்பாடு ஒருபுறமிருக்க,
எழுதுவது அப்புறம்தான்.
முதலில் குடும்பத்தை கவனி. வேலையை கவனி. அப்புறம் எழுதலாம்.
கொஞ்சமாக எழுதலாம். எண்ணங்களை நூறு வார்த்தைகளில் கொண்டு வர வேண்டும்.
நல்லதோ, கெட்டதோ, பிடித்தமான யோசனையோ, பிடிக்காத யோசனையோ - யோசித்து வைப்போம். வார்த்தைகளில் யோசனைகளை கொணருவோம்.
2016 - டிசம்பர் 31 அன்று வந்த யோசனைகளை வடித்து விட்டேன்.
இப்ப என்ன யோசனை நின்று விட்டதா? யோசனைகள் நின்று விடலாமா?
கூடாது.கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக