21 டிசம்பர், 2007

தேனீ தேன்கூடு விக்கி சென்றிருந்தேன்.

புதுசு.


google indictransliteration.


இதில் நான் தமிழில் ஜாலியாக எழுதலாம்.


தேனீ, தேன்கூடு விக்கி சென்றிருந்தேன்.


தேடல் வார்த்தை: வைரமுத்து.


wiki.


http://ta.wikipedia.org/wiki/வைரமுத்து


வாழ்க்கைக் குறிப்பு: வைரமுத்து.

தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலை பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.



இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருடைய மகன் கபிலன்.


தேனீ


இந்த பாடல் வரி படித்தது:


தாஜ் மஹால் படத்திலிருந்து,


திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடாசிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடாஎட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடாஎட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா.


நான் இடுக்கைகள் எழுத அரிவாள தீட்டிகிட்டு வருகிறேன்.

தேன்கூடூ

இங்கு வைரமுத்துவை தேடப் போய் இட்டலி வடை வலையில் விழுந்தேன்.


கடிகார முட்கள் போல்... வைரமுத்து கவித்துவமான பேச்சு
மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரை நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் ஒரு கடிகாரம் போன்றது. கடிகாரம் இயங்க 2 முட்கள் தேவை. சின்ன முள்ளும், பெரிய முள்ளும் தேவை. இரண்டு முள்ளும் இல்லாவிட்டால் காலத்தை காட்ட முடியாது. சின்ன முள் நிதானமானது, நேரம் காட்டும். பெரிய முள் சுறுசுறுப்பானது, வேகமாக ஓடும். எனவே சின்ன முள்ளும், பெரிய முள்ளும் கடிகாரத்திற்கு தேவை.
திராவிட இயக்கத்தின் மீது ஆசை உள்ளவன் என்ற முறையில் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடிகாரத்தின் முட்களைப் போல் நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். அண்ணாவின் வாழ்த்தை பெற்றவர் கலைஞர். தளபதி மு.க. ஸ்டாலினுக்கு கலைஞரின் வாழ்த்து இருக்கிறது. அவருக்கு அண்ணாவின் வாழ்த்தும் இருந்தால் அவர் பெறும் வெற்றி பொன் எழுத்துக்களில் பொறித்துக் கொள்ள வேண்டிய வெற்றியாக இருக்கும்.

மேலும் படியுங்கள்.

மற்றொரு சுறு சுறு வலை பக்கத்தையும் பார்த்தேன்.

அது "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்"

தேன்கூட்டி்ற்குச் சென்றால் எதை படிப்பது என்ற குழப்பம் நிறையவே!

ஜெஸிலாவின் கிறுக்கல்கள் தூபாயிலிருந்து கிறுக்கப்படுகிறது.

நான் எங்கிருந்து அதை படிக்கிறேன் என்பதை காண்பிக்கிறது.

புது இடுக்கை பதிவு ஆனால் எனக்கு இ மெயில் மூலமாக தெரியும்.


எழுத்து சுறு சுறுப்பாக உள்ளது.


எனது அடுத்த பதிவு அடுத்த வருடம்.

எனது தேடல் வைரமுத்து தான்.

கூட கொஞ்சம் வலை தளங்கள்.





--
http://madscribbler.googlepages.com/

22 நவம்பர், 2007

link செய்வது எப்படி?

நம் பதிவுகளில் இணையதள, இணைய வலைப்பக்கங்கள் முகவரிகளைக் குறித்தால், அதை Click செய்து, அந்தப் பக்கத்திற்கு செல்லமுடிகிறது. 'இசையரசி', 'தமிழ் நெஞ்சங்கள்' 'தேனி' இப்படி குறியீடுகள் தமிழில் எப்படிக் கொண்டு வருவது ?

- தவப்புதல்வன்.







விதி தான் நமக்குவிதித்து இதுவென



விதியை நொந்துவிசனத்தால்



மனம்விதிர்த்திருந்தேன்.







மதியால் வெல்லும்மதிதான்



நமக்குமதிப்பைத்



தரும்மதியை உணர்ந்தேன்



மகிழ்வுடன் நானே.





ஆம்பல் மலரில் தாங்கள் எழுதிய இந்தக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. இப்பொழுது ஆம்பல் மலர் என்ற வார்த்தையை அடிக்கோடு போட்டுக்கொண்டு அந்த மலரின் இணைய விலாசத்தை எழுதப்போகிறேன்.





உங்கள் blog அல்லது email எழுதும் கட்டத்தில் link செய்வதற்கு ஒரு icon உண்டு.


அதாவது குறியீட்டுச் சின்னம்.


இப்படி இருக்கும்.(படம்)">Photo Sharing and Video Hosting at Photobucket

முதலில் நீங்கள் இணைய விலாசம் கொடுக்க விரும்பும் வார்த்தையை அடிக்கோடு செய்து கொள்ளவும்.


(select செய்து கொள்ளவும்.)


insert link click செய்யவும்.


இங்கு நான் ஆம்பல் மலர் என்ற வார்த்தையை select செய்து கொண்டுள்ளேன்.


ஆம்பல் மலர் இணைய முகவரி : http://aambalmalar.blogspot.com/


அதை insert link சின்னத்தை நான் click செய்தவுடன் வந்த பெட்டிகளில் copy செய்து கொள்வேன்.


அப்பொழுது அந்த வார்த்தையை click செய்தவுடன் ஆம்பல் மலர் வந்துவிடும் - அருமையான கவிதை இதழ்களுடன்!


எங்கே மெல்ல முயற்சி செய்யுங்களேன். கிறுக்கல் பக்கத்தை link செய்யுங்கள் முதலில் email லில் முயன்று பாருங்கள்.சந்தேகம் இருப்பின் சிறு சிறு, கேள்விகளாக கேட்கவும்.

இப்பொழுது நீங்கள் ஆம்பல் மலர் போன்ற வார்த்தைகளை தமிழில் எழுதி..கட்டத்தில் போடுகிறீற்களே அது மாதிரி தமிழில் எழுதி பெட்டியில் போட வேண்டியது. அப்புறம் லின்க் செய்ய வேண்டியது. அவ்வளவுதான்!


தேனீ, தேன் கூடு, விக்கி இணையகங்களுக்குச் சென்று நாட்கள் ஆகி விட்டன. அங்கு பயணித்தப் பின் - கொஞ்சமான சரக்குடன் அடுத்த பதிவு.

14 நவம்பர், 2007

அழுத்தம், அழகு.



வைரமுத்து.




எழுத்துக்கள் வைரம் போல் அழுத்தமானது.
முத்தைப் போல் அழகானது.
இதைத்தான் இனி கொஞ்ச நாட்கள் தேடப் போகிறேன்.
தேடி ரசிக்கப் போகிறேன்.




இன்று கேட்ட பாடல் வரி: யார் சொல்வதோ
யார் சொல்வதோ. . பதில் யார் சொல்வதோ?





"சிற்பமொன்று கல்லுக்குள் தூங்கும். .




சிற்று உளி அதை வெட்டி வெட்டி எடுக்கும் . .




இது கல்லின் தோல்வியா? உளியின் வெற்றியா?"




யார் சொல்வதோ
யார் சொல்வதோ. . பதில் யார் சொல்வதோ?




த. பு. அனுப்பிய படமொன்று. இந்த குளிர் காலத்திற்கு தகுந்த மாதிரி படம் தேர்ந்தெடுத்திருக்கிறார்.




அடுத்த பதிவு மற்றொரு த.பு. கேள்விக்கான பதில்.

Madscribbler

31 அக்டோபர், 2007

தங்கள் பொருமைக்கு நன்றி பல கோடி நண்பரே!


சந்தேகம் 1) http://madscribbler.googlepages.com/ , இதைப் போல் நான்எப்படி உருவாக்குவது ?
jottings என்று ஒரு வலைதளத்தைஅறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மேலோட்டமாக பார்வையிட்டேன். அருமையாகஇருந்தது. அதன் பயன்பாட்டையும், வழியையும் கூறுங்களேன்



தவப்புதல்வரே.....மெதுவாக ஒவ்வொன்றாக அசை போடுவோம்.
வலைதளம் என்பது என்ன?
எழுதுவதற்கு ஒரு ஊடகம்.

காகிதங்களையும், நோட்டுப்புத்தங்கங்களையும்,வைத்துக்கொண்டு,
நாம் எதாவது எழுத மாட்டோமா என்று தவித்துக்கோண்டு இருப்பதில்லையா?
அது மாதிரிதான்.
google pages and jottings from msn spaces எல்லாம் compose tamil blogger மாதிரி பக்கங்கள்.
என்ன வசதிகள் அதிகம்.
e mail உபயோகப்படுத்தி எழுதலாம்.
எதுவாக இருந்தாலும் நமக்கு ஒரு நல்ல ஐடியா வேண்டும் முதலில்.
நமக்கு வரும் ஐடியாக்கள் எல்லாம் முத்து என்ற எண்ணதை அழித்து விட வேண்டும்.
google pages - நீங்கள் அதை கண்டிப்பாக தமிழிலும் செய்யலாம்.
msn spaces கூட.
அப்புறம் ஒரு எண்ணம் கூட வந்தது.
என்னுடைய blogger ல் கூட நீங்கள் பதிவு செய்யலாம்.
அதற்கான வழிகள் உண்டு.
செய்வோம்.
அடுத்த பதிவை வைரமுத்து பற்றிய பதிவிற்கு பதிவு செய்து கொண்டு கேள்வி பதிலை தொடருகிறேன்.
தங்கள் பொருமைக்கு நன்றி பல கோடி நண்பரே!

பயிற்சி: எங்கே ஒரு படத்தை e mail மூலம் attatch செய்து அனுப்புங்களேன். அடுத்த பதிவில் அதை உபயோகப்படுத்திக்கொள்கிறேன்.

06 அக்டோபர், 2007

கேள்வி பதில்.


எப்படி Browse செய்துAttachments எப்படி செய்வது என்றும்சொல்லிக் கொடுக்கவும். ஏனென்றால்பதிவிலே இருப்பின் மறந்து விட்டால் கூட திரும்ப பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

தவப்புதல்வன். சென்னை.

இண்டர்நெட் அறிமுகமானதிலிருந்து இருக்கும் கிறுக்குத்தனம்:
படங்களை mouse right click செய்து கணினி யில் சேமித்துக் கொள்வது. நீங்களும் இப்படி செய்யலாம்.
அதை இ மெயிலில் attatch செய்யலாம். பதிவில் Upload செய்யலாம்.
இதோ த.பு. படத்தை ஆம்பல் மலரிலிருந்து right click செய்து கணினியில் சேமித்துக் கொண்டேன்.


blogger new postல் வரும் எழுதும் கட்டத்தில் insert image என்ற சிறிய கட்டம் உண்டு. அதை கிளிக் செய்யவும். கணினியில் இன்னொரு ஜன்னல் தோன்றும். இங்கே நீங்கள் சேமித்து வைத்த image upload செய்வதற்கான வசதி உண்டு. உங்கள் கணினியின் desk top மீது படத்தை சேமித்த்தால் சுலபமாக BROWSE செய்து படத்தை பதிவில் பதித்து விடலாம். எங்கே நிதானமாக செய்யுங்கள் பார்கலாம். இதோ ஒரு படம்.

இன்னும் கேள்விகளுக்கு பதில் எழுத முயற்சி செய்கிறேன் அடுத்த பதிவுகளில்.

21 செப்டம்பர், 2007

அவமானம் தாங்குதல்.

மற்றோரு முத்து வைரத்திலிருந்து:

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு முதல் தகுதி என்ன?

அவமானம் தாங்குதல்.

சுயமானமே பெரிதென்று கருதுகின்றவர்கள் பொதுமானம் காக்க முடியாது.


அனாதைப் பிள்ளைகளுக்கு நிதி திரட்டக் கடை வீதிக்குப் போகிறார் அன்னை தெரசா.


ஒரு கடைக்காரன் கஞ்சன், தேனிலவுக்குக் கூடத் தனியாய்ப் போய் வந்தவன்.



அவனிடம் கையேந்துகிறார் அன்னை."ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு..."



"ஒண்ணும் தரமுடியாது; ஓடிப்போ கெழவி"



ஏந்திய கை மடங்கவில்லை. "ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு..."



"சொன்னாக் கேக்கமாட்டே.."



ஏந்திய இடக்கையில் வந்து விழுகிறது அவன் காறித்துப்பிய கற்றை. எச்சில் விழுந்த இடக்கையை மூடிக்கொண்டு,



"நீ காறித்துப்பியது எனக்கு; என் பிள்ளைகளுக்கு..." என்று வலக்கை நீட்டுகிறார் அன்னை.



எழுந்து நின்று கும்பிட்டு, கண் துடைத்துக்கொண்டே காசு போடுகிறான் கடைக்காரன்.

கேள்விகளுக்கு உருப்படியான பதில்கள் கொடுப்பது ஒரு கலை.
எனது அடுத்த பதிவில் நண்பர் ப. நா கேட்கும் கேள்விகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.

14 செப்டம்பர், 2007

எனக்குப் பிடித்தது.

இதோ குமுதத்தில் வாசித்த எனக்குப் பிடித்த வைரமுத்து பதில்:

இந்த உலகத்தில் கொடுத்து வைத்தவர் யார்?

இதோ இந்தப் பதிலை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் -
ஆண்டுதோறும் நிகழும் பத்து லட்சம் பூகம்பங்களில் ஏதேனுமொன்றால் இந்த பூமி எங்கோ ஒரு மூலையில் அதிர்ந்து கொண்டிருக்கிறது.


உலகின் ஏதேனுமோர் எரிமலை அக்கினி வாந்தி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.



ஏதோ ஒரு சாலை விபத்தில் உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன உடல்கள்.


சில 'பயாப்சி' சோதனைகள் புற்றுநோயை உறுதிப்படுத்துகின்றன.


பலரின் பங்குகள் சந்தையில் சரிந்து கொண்டிருக்கின்றன.


உரிமையில்லாத பெண் உடல்களில் சில மிருகங்கள் வன்முறையால் நுழைந்து கொண்டிருக்கின்றன.


சில நீதிமன்றங்களில் உறவுகளின் கடைசி கையொப்பம் பதிவாகிக் கொண்டிருக்கிறது.



இவற்றுள் ஏதோரு பாதிப்பும் நேராமல் குமுதம் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களல்லவோ கொடுத்து வைத்தவர்?

இசை அரசி பி.சுசீலா அவர்கள் படிய சமீபத்தில் கேட்டவை.

solo: பக்கத்து வீட்டு பருவமச்சான்...பார்வையிலே படம் பிடிச்சான்...
with TMS 1)அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்......
2)ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன்.... நீ ஒரு தனிப் பிறவி.....

அடுத்தப் பதிவில் வைரமுத்துவின் இன்னொரு அருமையான பதில்.

10 செப்டம்பர், 2007

இசை அரசியின் பாடல்கள் மற்றும் தகவல்கள்.

ஓ செப்டெம்பர் நகர்ந்து கொண்டிருக்கிறது.
10 தேதி ஆகி விட்டது.
கிறுக்கல்களுக்கு வரவேயில்லை.
ஓ.கே.
இன்று வந்து விட்டேன்.
தேன்கூடு சென்று வைரமுத்து தேடினேன்.
குமுதத்தில் வரும் வைரமுத்து பதில்களை சிலாகித்திருந்தார்.....கோ.இராகவன்.

இன்னிசையரசி பி.சுசீலா அவர்களின் பாடல்களில் மெய்மறந்து கரைந்து போகும் உள்ளங்களின் துடிப்புகள் இந்த வலைப்பூவின் பதிவுகள்.

இசையரசி

இசை அரசியின் பாடல்கள் மற்றும் தகவல்கள்.
அருமையாக உள்ளது.

அடுத்த பதிவில் எனக்குப்பிடித்த வைரமுத்து பதில் ஒன்றை பதிவு செய்கிறேன்.

17 ஆகஸ்ட், 2007

தெரியவில்லை!

பைத்தியக்காரனடா நான்.
ஆபீஸீக்கு போகும்பொழுதும், வரும்பொழுதும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று browsing centreல பொழுதை செலவிடுகிறேன்.

விடுமுறைகளில் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை browsing centre எனது பிரார்த்தனைக்கூடமாக உள்ளது.

கிறுக்குத்தனமாக, பதிவுகள் செய்கிறேன்.

பயனடைகிறேனோ இல்லையோ,

வலை தளங்களுக்கு செல்கிறேன்.

ஏன்? எதற்கு?

விடை தெரியவில்லை.

என்ன பயனடைகிறேன்?

தெரியவில்லை!

தேன் கூடு தகவல்கள்:

1)உங்கள் இடுகை உடனடியாக தேன்கூட்டில் தெரிய பிங் செய்யுங்கள்!
(பிங் என்றால் என்ன?)

2)நிறைய இடுக்கைகள். ஒரு இடுக்கை எழுதும் நண்பர் பெயர்:

இட்லி சட்னி சாம்பார்......எனக்கு பிடித்த ஐடம் கூட.....

பெயர்: சட்னிவடை பெயர்க் காரணம்: சுவைஞர்களை நம்பி வைத்த பெயர்.

உண்மைக் காரணம்: பயம் தான் பிறந்தது, வளர்ந்தது: உணவகங்களில். நிரந்திர பொழுது போக்கு: சுடும் பதிவுகள் தற்போதைய பொழுதுபோக்கு: கதம்ப பதிவுகள் நிரந்திர நண்பர்கள்: இட்லி, வடை, சட்னி, சாம்பார்.

http://idlyvadai.blogspot.com/ என்ற பதிவிலிருந்து.

3)குற்றாலம் ....

http://msams.blogspot.com/ என்ற பதிவிலிருந்து.

அடுத்த பதிவிற்கான தகவல்களுக்கும் தேன்கூடு செல்கிறேன்.

படிக்க, தேட நிறைய உள்ளது.

தேன் கூட்டிற்கு வந்த வழிகள்:

1)ஒரு முறை தவப்புதல்வன், தேன்கூடு பற்றி சொல்லியிருந்தார்.

அன்புள்ள kirukan G. அவர்களுக்கு,
வணக்கம்.தங்களின் "கிறுக்கல்கள்" வலைத் தொகுப்பை பார்வையிட்டேன்.

அதில் என் கருத்தையும் தெரிவித்திருந்தேனே!!

பார்த்தீர்களா ? தங்கள் வலைத் தொகுப்பை தமிழ் வெளியிட, http://www.thenkoodu.com/ இணயதளத்தை பார்வையிடவும்.

unicode தரவிறக்கம் (download ) செய்துக் கொள்ளலாம்.

ஏ-கலப்பை unicode தரவிறக்கம் செய்துக் கொண்டு, தமிழ் எழுத்துக்களை key Board யில் தெரிந்து கொண்டு, உபயோகிக்கவும்.

அதிலேயே ஆங்கிலம்,தமிழ் எழுத்துக்களை மாற்றி, மாற்றி உபயோகிக்கவும் வசதியும் உள்ளது.

எப்படியெனில், Alt+2 ஐ, உபயோகித்து ஆங்கில எழுத்துருவிலிருந்து தமிழெழுத்துக்களுக்கும், தமிழெழுத்திலிருந்து ஆங்கில எழுத்திற்க்கும் மாற்றி மாற்றி உபயோகித்துக் கொள்ளலாம்.கிருக்கல்களில் உங்கள் EMail முகவரி சரியில்லாத்தால் தொடர்புக் கொள்ளமுடியவில்லை. உங்களுக்கு தெரிந்ததை எனக்கும் சொல்லிக் கொடுங்கள்.

Tamil News

இந்த பக்கத்திலே அப்படியே செய்திகளும் தகவல்களும் குவிந்து கிடக்கிறது.

எதை படிக்க?

எதை குறித்துக்கொள்ள?

இதை செய்த நண்பருக்கு நேரம் எப்படி கிடைக்கிறது?

படிக்கவே எனக்கு தகடுதித்தம்!

தேன்கூடு.

இப்படி தகவல்களை மேய்ந்து கொண்டு தேன்கூடு வந்துள்ளேன்.

03 ஆகஸ்ட், 2007

இ.. ஈ.. ஈ.. ஹி.. ஹி.. ஹி.. ஹீ.


cell phone மூலமாக, இதற்கு முந்தைய பதிவை செய்த முயற்சியில் வெற்றி.
அப்புறம் சில e mails எழுத முயற்சி செய்து தோல்விகளே வெற்றிகளானது!

விக்கி,தேனீ!

'இ' கரத்தில் முடியும் வார்த்தைகளெல்லாம் செக்ஸியாக உள்ளது.

அட வெற்றி செக்ஸி வார்த்தைகள் 'இ' ல் முடிகிறது.

'தோல்வி' கூட!

ஹி..ஹி.. ஹி...

புஷ்ப்பா தங்கதுரை கதை ஒன்றில் 'லாலி' என்று ஒரு பாத்திரத்திற்கு பெயர் வைத்து, இ'கரத்தில் முடியும் பெயர்கள் மிகவும் கவர்ச்சியுடயது என்று குறிப்பிட்டிருந்தார்.

ரி!

தேனீ, விக்கி பெயர் கொண்ட இணைய தளங்கள் என்னை கவர்கிறது. கடந்த பதிவொன்றில் விக்கியிலிருந்து தேனீ பற்றிய தகவலை சேமித்திருந்தேன்.

விக்கியிலிருந்து சில தகவல்கள்:

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

  • வழிசெலுத்தல் (navigation)
  • அதே கண்கள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
  • இந்தியக் குடியரசுத் தலைவர்

  • பிறந்த நாள்: டிசம்பர் 19, 1934
    பிறந்த இடம்: மகாராஷ்டிரா

    பதவி வரிசை: 12ஆவது குடியரசுத் தலைவர்
    பதவி ஏற்பு: ஜூலை 25, 2007
    பதவி நிறைவு: --
    முன்பு பதவி வகித்தவர்: முனைவர் அப்துல் கலாம்


  • தேனீ தளம் வேறு, தேன்கூடு தளம் வேறு. அடுத்தது என் பயணம் தேன்கூடு நோக்கி.





24 ஜூலை, 2007

பிரச்னை


பிரச்னை; பிரச்சினை எப்படி எழுதுவது சரி?
இது ஒரு பிரச்னை! டி.வி. மெகா
சீரியல் முழுவதும் பிரச்னை.
பிரச்னை பிரச்னை என்று சீரியலை
ஓட்டுகிறார்கள்.
மகனுக்கு பிரச்னை வார்த்தை பிடித்திருக்கிறது.
சந்தோஷமாக
இருக்கும் சமயத்தில், "அம்மா எனக்கொரு பிரச்னை" என்று சொல்வான்.
எங்களுக்கு ஆனந்தமாய் இருக்கும்.
மூட் அவுட் ஆகும் சமயங்களில் பெரிதாக
பிரச்னை பண்ணுகிறான்.
எங்களுக்கு பிரச்னை ஆகிவிடுகிறது.
சரி.
இப்போதைய பிரச்னை:
விக்கியில் மேய்ந்த தகவலை முதலில் பதிவு செய்வதா அல்லது செல் ஃபோன் மூலம்
BLOGல் பதிவு செய்ய முயற்சிப்பதா?
ஃபோன் மூலம் BLOG பண்ணுவோம் முதலில். அப்புறம் விக்கி.

--

http://madscribbler.googlepages.com/

20 ஜூலை, 2007

அசை போடுதல்



நான் ஒரு மாடு.




இங்கே பசுமையாக இருக்கிறது, அங்கே பசுமையாக இருக்கிறது என்று Blog, wiki தளங்களில் மேய்கிறேன்.




அசை போடுகிறேன் சில நேரங்களில்.




அவசர அவசரமாக உண்டதை மனதிலிருந்து கொணர்ந்து அசை போட முயற்சிக்கிறேன்.




Relaxed ஆக அசை போட்டதை பதிவு செய்ய விரும்புகிறேன்.




அப்படி விக்கியில் மேய்ந்த பொழுது கிடைத்த படங்களும் தகவலும்....


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


தேனீ பூவில் இருந்து பூந்தேன் உறிஞ்சுகின்றது
தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் பல அறுகோண அறைகள் கொண்ட, கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் வெளியிடும் மெழுகால் இந்த கூடுகள் அமைக்கப்படுகின்றன.


இந்த மாடு மறுபடி விக்கி செல்லும் தகவல்களை மேய!
cell phone மூலம் பதிவு செய்ய இந்த மாடு முயற்சி செய்யும்!











11 ஜூலை, 2007

நெகடிவ் பாசிடிவ்.

தவபுதல்வன் comments ஒன்றில் தோன்றிய பதிவு.
______________________________________________________________
Dhavapudhalvan said...
\\எண்ணங்களின்\\
வேகத்தை ஈடு செய்ய வடிப்புகளால் முடியவில்லையே.

______________________________________________________________


எண்ணங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. சில சமயம் மிக வேகமாய் எண்ணங்கள் ஓடுகின்றன!

ஓட்டத்தை 'கபக்' என்று எழுத்தில் பிடிக்க முடிவதில்லை.

____________________________________________

அவ்வப்போது கிறுக்கிப் பழகியதால்......எண்ண ஓட்டம் வரும்பொழுது....இந்த எண்ணத்தை எழுத்தில் பிடித்துவிடலாமா என்று தோன்றுகிறது.

_____________________________________________

'நெகடிவ்வாக'ப் பிடித்து 'பாசிட்டிவாக' பதிப்பித்து விடலாமா என்று தோற்றுகிறது.

_____________________________________________

காமிராவில் நல்ல தருணமொன்றை பதிவு செய்ய முடியாதது போல், எவ்வளவோ எண்ணங்கள் பதிவு செய்ய முடியாமலே மறைந்து விடுகிறது.

எண்ண ஓட்டத்தில் கூட ...இதை...இதை...

capture

செய்து கொள்ளலாமா என்ற குறிப்பும் மனதில் ஓடும்.

_____________________________________________

அட! அந்த நெகடிவை இங்கே பதிவு செய்து விட்டேனே!

_______________________________________________________________

அடுத்த பதிவு wiki குறித்து!

24 ஜூன், 2007

சார் மௌவல் தான் கரீக்டு.


தேனீயில் வலைப்பூ திரட்டி,
என்றொரு பகுதியில் சில வலை பதிவுகளுக்கு செல்லும் பயணத்தை மேற்கொண்டேன்.
latest பதிவு ஒன்றும் வசமாக கிடைக்கவில்லை.
இன்னும் பொறுமையான தேடலை மேற்கொண்டு,
நல்ல பதிவுகளை படித்து, இரசித்து, எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்!


! ! எளிமையே இனிமை ! !

..தேடு..கிடைக்கும்..

கிடைத்ததை பிடித்துக் கொள்..

தொலையும்..

கவலை கொள்ளாதே..

எல்லாமே போன கணக்கு தான்..
(from http://holdat9000.blogspot.com/index.html)

**************************************
நேற்றிரவு சன் டி.வி. ஒளிபரப்பிய சிவாஜி திரைப்பட விமர்சனத்தில் ரஜனி வாயசைப்பில்...கண்டுபிடித்துவிட்டாள் என் பெண்!...இவ்வளவு நாள் அவர்களை பாடு படுத்திய வவ்வல் சமாசரத்தை!
சார் மௌவல் தான் கரீக்டு.
மௌவல் என்றால் காட்டு மல்லிகை.
Anonymous comment எழுதிய அன்பரே....
தீர விசாரித்து இந்த மௌவல் மெய்யை உணர்ந்தேன்.
அன்பரே அடிக்கடி இந்த பதிவுக்கு வந்து என் சந்தேகங்களை நீக்கவும்.
*****************************************
அடுத்த பதிவில் த.பு. அவர்கள் comment ஒன்றில் ஏற்பட்ட எண்ணங்களை எழுத முயற்சி செய்கிறேன்!

21 ஜூன், 2007

வவ்வல் - கவ்வல்.

வவ்வலை கவ்விக்கொண்டிடிருந்து விட்டேன்.
ஆமாம் வவ்வல் என்றால் கவ்வுதல்.
நான் நினைத்த மாதிரி 'பூ' இல்லை.
(ஹ்ஹ......ஹா)
வவ்வலை கவ்வியபொழுது நிகழ்ந்த நிகழ்வுகள்:
1)google தேடுதல் பக்கம் கிடைத்தது.
2)வலையில் ஒரு நல்ல அகராதி கிடைத்தது.
3)blog நண்பர் தவபுதல்வன் சிவாஜி படப்பாடல்களை இன்னும் கேட்கவில்லை என்று தெரிந்தது.
4)anonymous நண்பர் ஒருவர் அந்த சொல் வவ்வல் இல்லை மௌவல் என்று கூறிப்பிட்டிருந்தார்.
(ஆமாம் மௌவல் என்றால்?)
அடுத்த பதிவில் தேனீ reader பகுதிக்குச் சென்று சில வலைபதிவுகளை படித்து - என் எண்ணங்களை இங்கு பதிவு செய்ய முயற்சி செய்யவா?

20 ஜூன், 2007

வவ்வலை விடப்போவதில்லை.

வவ்வலை விடப்போவதில்லை.
வவ்வலுக்கான அர்த்தம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
ஆனால் வவ்வல் ஒரு மலர் இல்லை.
வவ்வல் குறித்து வலை பக்கங்கள் கிடைத்தது.
அவை:

1)வவ்வு, [ vvvu, ] கிறேன், வவ்வினேன், வேன், வவ்வ. To take up by the handful, and carry off, வார.
வவ்வல், v. noun. Taking up. (சது.) (from web page:(http://dsal.uchicago.edu/dictionaries/winslow/)




படம் : சிவாஜி
பாடியவர்கள் : ஹரிஹரன், சாதனாசர்கம்

இசை : ஏ.ஆர். ரஹ்மான்பாடல் : வைரமுத்து

பல்லவி========ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னைகையோ வவ்வல் வவ்வல்உன் பூவிழிப் பார்வை போதுமடிஎன் பூங்கா இலைகளும் பதறுமடிஉன் கால்கொலுசொலிகள் போதுமடிபல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு

ஆ: அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு

பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)

ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னகையோ வவ்வல் வவ்வல்சரணம்-1=========

பெ: ஹோ.. ஆ..ஆ..ஆ..

ஆ: ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்

பெ: புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்பூவுக்குள் குளிப்பீரா
ஆ..(புன்னகைப் பேரரசே)விடியும்வரை மார்புக்குள் இருப்பீராவிழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா

ஆ: ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்செயல்புயல் நானடி

பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)

ஆ: பூம்பாவாய்..சரணம்-2=======

ஆ: பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்வந்து ஒளிந்து கொண்டேன்
சுகம்சுகம் கண்டேன்

பெ: ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடிவெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்

ஆ: அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்முரண்பாட்டு மூட்டை நீ

பெ: வாஜி.வா வா வா வா..வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)

ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....

ப்ளாகிலே சிவாஜி (ரஜினி) படங்கள்.



ப்ளாகிலே சிவாஜி (ரஜினி) படங்கள் போடுவோம்.


ரஜினி ரசிகன் அல்லவா நான் !

18 ஜூன், 2007

.சிவாஜி


வியாழக்கிழமை 14/06/07 முதல் சிவாஜி திரைப்படத்தைப் பற்றி தகவல்கள் நிறைய படித்தேன், கேட்டேன் மற்றும் பார்த்தேன்.


much hyped film


பாடல்கள் கேட்டேன்.

ஒரு பாடலில் ஆம்பல் மற்றும் வவ்வல் வார்தைகள் வருகிறது.

பாடல் இனிமையாக உள்ளது.

தேனியில் கிடைக்கும் அகராதியில் ஆம்பல் என்றால் lilyப் பூ என்று தெரிந்து கொண்டேன்.

வவ்வல் தேடியபொழுது, வவ்வால் கிடைத்தது.

வௌவல் என்று எழுத வேண்டுமா?
__________________________________________________________________
வவ்வல் 1 1. bat, vespertilionidae cheiroptera ; 2. pomfret,
sea-fish, stramatovsparu
ஆம்பல் 4 ஆம்பல் 1. water-lily, nymphaea lotus ; 2. musical pipe;
3. a melody-type played on a pipe; 4. bamboo; 5. blow-horn; 6. elephant; 7.
toddy; 8. a very high number; 9. affliction; 10. arrangement, order; 11.
moon
___________________________________________________________________

வௌவல் என்றால் எந்த மலர்?

14 ஜூன், 2007

தவபுதல்வன் கவனத்திற்கு.





















முதலில் dashboard செல்லவும். (படம் பார்க்கவும்)


அடுத்தது settings.


settingsல் comments.


படத்தில் ஒரு வட்டம் போட்டிருக்கிறேன்.


commentsல் மூன்று options உள்ளன.


anyone தேர்ந்தெடுக்கவும்.

only members of this blog only
registered users
optionகள் -
என்னை மாதிரி கிறுக்கன்கள் மாத்திரம் கிறுக்குவார்கள்.
anyone, blogகை படிக்கும் எல்லாக் கிருக்கற்களும் கிறுக்குவார்கள்.

13 ஜூன், 2007

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

ஹல்லோ !! பாலசுப்ரமணியம் கணபதி, வணக்கம்.நானா?,என்னைப் பற்றியா!காத்திருக்கிறேன் கண்களை விரித்து. -
தவபுதல்வன் எனது வலைபதிவில் எழுதிய comment.

நற்றி.....

இவர் ஒரு கை தேர்ந்த techie,
அருமையான கவிஞர்.
எழுத்தில், சந்தேகங்களை நிவர்த்தி செய்வதில் மிகவும் சுறுசுறுப்பு.
குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஒரு பதிவை ஏற்படுதியுள்ளார். .
மேலும் சொல்கிறேனே அடுத்த பதிவுகளில்.


ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் -
வெறும்கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(2)(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனிதஇன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(2)(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதைநமக்காக நம் கையால் செய்வது நன்று

(2)(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) -
அதில்பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(2)(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க (2)
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(2)(ஏழு)


தவபுதல்வன், தேனீ

(தொடரும்.....)

11 ஜூன், 2007

தவபுதல்வன்

தவபுதல்வன்
- இவர் நான் compose tamil தளத்தில் சந்தித்த நண்பர்.
ஏதாவது வேலை செய்யும்பொழுது ஒரு துணை கிடைத்தால் அந்த வேலையின் பளு தெரியவே தெரியாது.
அந்த வேலை செய்ய இன்னும் ஆர்வம் அதிகரிக்கிறது.
இந்த பதிவுக்கு அவர் முயற்சிகள் எனக்கு உற்சாகமளிக்கிறது.

இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தேனீ தளத்தைதான், இந்த பூ வட்டமடித்துக்கோண்டிருக்கும்.
இன்று தேனீயில் தமிழ் பாடல் வரிகளுக்கான பக்கத்திற்குச் சென்றேன். பாரதியின் வரிகளை copy செய்தேன்:

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

பாரதிதான் கடவுளை தீண்டிய அனுபவத்தை, எவ்வளவு அழகாக சொல்லுகிறார்?

தவபுதல்வனைப் பற்றியும் தேனீயில் நான் சுவைத்த தேனைப் பற்றியும் எனது அடுத்த பதிவில் எழுத ஆசை!

08 ஜூன், 2007

தேனீ


ஓ..

இன்று வலையில் எங்கெல்லாமோ சென்று விட்டேன்.

எவ்வளவு பதிவுகள்?

எவ்வளவு வசதிகள்?

தற்போது தேனீ வலையகத்தில் மாத்திரம் தேடுகிறேன்.

தேனீ அகராதியில் link சொல்லுக்கு தொடுத்தல் என்ற அர்த்தம் கிடைத்தது. நல்ல தமிழ் பக்கங்களை இந்த பக்கத்தின் தொடுத்தல் பகுதியில் தொடுக்கிறேன்.

தேனீயில் இன்னும் என்னவெல்லாம் வச்திகள் உள்ளன?
தொடர்கிறேன்....தொடுக்கிறேன்.

பக்கதில், அதாவது தொடுத்தல் பகுதியின் மேலுள்ள படம் மற்றும் இந்த பதிவினூடே இணைத்த படம் பிடித்துள்ளதா?

படிப்பது எழுதுவது சும்மாயிருப்பது!

சில சமயம் படிப்பது சுகம்.
சில சமயம் எழுதுவது சுகம்.
சும்மாயிருப்பது சுகமோ சுகம்!
சும்மாயிருக்கும்பொழுது,தமிழ் வலை தளங்களுக்கு <லின்க்> கொடுத்து வைக்கலாம்.
இந்த குறிப்புடன் வரும் லின்க்:

தேனீ

லின்க் என்பதை தமிழில் என்ன சொல்லலாம்?
ஒவ்வொரு குறிப்பையும் ஒரு கேள்விக்குறியுடன் முடிக்கலாம்.
அதற்கான பதில் தயாரானவுடன், அடுத்த குறிப்பை தொடங்குகிறேன்.
குறிப்புகளுக்கு தொடர்பு வைத்து விட்டேன்!
ஆக லின்க் (link) என்பதற்கு தமிழ் சொல் என்ன?

06 ஜூன், 2007

'வலை கிறுக்கல்'

கிறுக்கல்கள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கட்டும்!
சந்தோஷம் என்னவென்றால், தமிழில் blog செய்ய கற்றுக்கொண்டுவிட்டேன்!
blog என்ற ஆங்கில சொல்லை தமிழில் என்ன சொல்லலாம்? வலை குறிப்பு? என்னைப் பொறுத்தவரை 'வலை கிறுக்கல்' பொருத்தமாகப்படுகிறது.இந்த கிறுக்கலை எழுத உதவியவை:
1)Compose Tamil
2)
தேனீ
மற்றும் நண்பர் அம்பி.
அடுத்த கிறுக்கலை இதனுடன் சம்பந்தப்படுத்த வேண்டும்.

test

please click the link This song is sung by. Satyanarayana.