vairamuthu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vairamuthu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 ஜூலை, 2008

சின்ன சின்ன ஆசை


வைரமுத்து சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நிபுணர்.ரோஜா திரைப்படம் பார்த்தபொழுது எனக்கு "சின்ன சின்ன ஆசை" பாட்டு நிரம்ப பிடித்திருந்தது.

ஏன் இன்றும் கூட 'டை... ங்...' என்று ஜிங்கிளாக அந்த இசை வரும்பொழுது, "சின்ன சின்ன ஆசை" பாடல் கேட்கும் இன்பம் பெரிய இன்பத்தை கொடுக்கிறது."என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை"
##########
"பூ பூக்கும் ஓசை, அதை கேட்கத்தான் ஆசை" - வைரமுத்து சாரு உங்க ஆசை ஜோரு!கருவாச்சி காவியத்தில், கருவாச்சி மூலமாக பாம்பு தோலுரிக்கும் காட்சியைக் கூட ஆசையுடன் பார்த்து விட்டீர்களே!

##########

அதிகமாக பொறாமை படாமல், வைரமுத்து ரசித்தவைகளை, நான் ரசித்தவைகளாக பாவித்துக் கொள்கிறேனே!

##########
இப்ப பாருங்க எனது யாஹீ'விலிருந்து கருவாச்சி காவித்தின் இன்ப துளிகளை பகிர்ந்து கொள்ளும் எனது சின்ன சின்ன ஆசையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனது யாஹு ID திருடப்பட்டு, நான் மெயிலில் DIAMOND PEARL என்றொரு folder-ல் சேகரித்திருந்த குறிப்புகள் எல்லாம் பணால் ஆகி விட்டது. சின்ன ஆசையை சின்னதாக சில பதிவுகளில் செய்து கொண்டு விட்டேன். போதுமல்லவா?
##########
கொஞ்சம் பெரிதாக ஆசைப் படுகிறேன். நான் கிறுக்கிய சில கவிதைகளை அடுத்த பதிவிலிருந்து பதிக்கிறேன்!

ஓகே?
############

21 டிசம்பர், 2007

தேனீ தேன்கூடு விக்கி சென்றிருந்தேன்.

புதுசு.


google indictransliteration.


இதில் நான் தமிழில் ஜாலியாக எழுதலாம்.


தேனீ, தேன்கூடு விக்கி சென்றிருந்தேன்.


தேடல் வார்த்தை: வைரமுத்து.


wiki.


http://ta.wikipedia.org/wiki/வைரமுத்து


வாழ்க்கைக் குறிப்பு: வைரமுத்து.

தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலை பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.



இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருடைய மகன் கபிலன்.


தேனீ


இந்த பாடல் வரி படித்தது:


தாஜ் மஹால் படத்திலிருந்து,


திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடாசிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடாஎட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடாஎட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா.


நான் இடுக்கைகள் எழுத அரிவாள தீட்டிகிட்டு வருகிறேன்.

தேன்கூடூ

இங்கு வைரமுத்துவை தேடப் போய் இட்டலி வடை வலையில் விழுந்தேன்.


கடிகார முட்கள் போல்... வைரமுத்து கவித்துவமான பேச்சு
மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரை நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் ஒரு கடிகாரம் போன்றது. கடிகாரம் இயங்க 2 முட்கள் தேவை. சின்ன முள்ளும், பெரிய முள்ளும் தேவை. இரண்டு முள்ளும் இல்லாவிட்டால் காலத்தை காட்ட முடியாது. சின்ன முள் நிதானமானது, நேரம் காட்டும். பெரிய முள் சுறுசுறுப்பானது, வேகமாக ஓடும். எனவே சின்ன முள்ளும், பெரிய முள்ளும் கடிகாரத்திற்கு தேவை.
திராவிட இயக்கத்தின் மீது ஆசை உள்ளவன் என்ற முறையில் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடிகாரத்தின் முட்களைப் போல் நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். அண்ணாவின் வாழ்த்தை பெற்றவர் கலைஞர். தளபதி மு.க. ஸ்டாலினுக்கு கலைஞரின் வாழ்த்து இருக்கிறது. அவருக்கு அண்ணாவின் வாழ்த்தும் இருந்தால் அவர் பெறும் வெற்றி பொன் எழுத்துக்களில் பொறித்துக் கொள்ள வேண்டிய வெற்றியாக இருக்கும்.

மேலும் படியுங்கள்.

மற்றொரு சுறு சுறு வலை பக்கத்தையும் பார்த்தேன்.

அது "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்"

தேன்கூட்டி்ற்குச் சென்றால் எதை படிப்பது என்ற குழப்பம் நிறையவே!

ஜெஸிலாவின் கிறுக்கல்கள் தூபாயிலிருந்து கிறுக்கப்படுகிறது.

நான் எங்கிருந்து அதை படிக்கிறேன் என்பதை காண்பிக்கிறது.

புது இடுக்கை பதிவு ஆனால் எனக்கு இ மெயில் மூலமாக தெரியும்.


எழுத்து சுறு சுறுப்பாக உள்ளது.


எனது அடுத்த பதிவு அடுத்த வருடம்.

எனது தேடல் வைரமுத்து தான்.

கூட கொஞ்சம் வலை தளங்கள்.





--
http://madscribbler.googlepages.com/

21 செப்டம்பர், 2007

அவமானம் தாங்குதல்.

மற்றோரு முத்து வைரத்திலிருந்து:

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு முதல் தகுதி என்ன?

அவமானம் தாங்குதல்.

சுயமானமே பெரிதென்று கருதுகின்றவர்கள் பொதுமானம் காக்க முடியாது.


அனாதைப் பிள்ளைகளுக்கு நிதி திரட்டக் கடை வீதிக்குப் போகிறார் அன்னை தெரசா.


ஒரு கடைக்காரன் கஞ்சன், தேனிலவுக்குக் கூடத் தனியாய்ப் போய் வந்தவன்.



அவனிடம் கையேந்துகிறார் அன்னை."ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு..."



"ஒண்ணும் தரமுடியாது; ஓடிப்போ கெழவி"



ஏந்திய கை மடங்கவில்லை. "ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு..."



"சொன்னாக் கேக்கமாட்டே.."



ஏந்திய இடக்கையில் வந்து விழுகிறது அவன் காறித்துப்பிய கற்றை. எச்சில் விழுந்த இடக்கையை மூடிக்கொண்டு,



"நீ காறித்துப்பியது எனக்கு; என் பிள்ளைகளுக்கு..." என்று வலக்கை நீட்டுகிறார் அன்னை.



எழுந்து நின்று கும்பிட்டு, கண் துடைத்துக்கொண்டே காசு போடுகிறான் கடைக்காரன்.

கேள்விகளுக்கு உருப்படியான பதில்கள் கொடுப்பது ஒரு கலை.
எனது அடுத்த பதிவில் நண்பர் ப. நா கேட்கும் கேள்விகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.

14 செப்டம்பர், 2007

எனக்குப் பிடித்தது.

இதோ குமுதத்தில் வாசித்த எனக்குப் பிடித்த வைரமுத்து பதில்:

இந்த உலகத்தில் கொடுத்து வைத்தவர் யார்?

இதோ இந்தப் பதிலை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் -
ஆண்டுதோறும் நிகழும் பத்து லட்சம் பூகம்பங்களில் ஏதேனுமொன்றால் இந்த பூமி எங்கோ ஒரு மூலையில் அதிர்ந்து கொண்டிருக்கிறது.


உலகின் ஏதேனுமோர் எரிமலை அக்கினி வாந்தி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.



ஏதோ ஒரு சாலை விபத்தில் உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன உடல்கள்.


சில 'பயாப்சி' சோதனைகள் புற்றுநோயை உறுதிப்படுத்துகின்றன.


பலரின் பங்குகள் சந்தையில் சரிந்து கொண்டிருக்கின்றன.


உரிமையில்லாத பெண் உடல்களில் சில மிருகங்கள் வன்முறையால் நுழைந்து கொண்டிருக்கின்றன.


சில நீதிமன்றங்களில் உறவுகளின் கடைசி கையொப்பம் பதிவாகிக் கொண்டிருக்கிறது.



இவற்றுள் ஏதோரு பாதிப்பும் நேராமல் குமுதம் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களல்லவோ கொடுத்து வைத்தவர்?

இசை அரசி பி.சுசீலா அவர்கள் படிய சமீபத்தில் கேட்டவை.

solo: பக்கத்து வீட்டு பருவமச்சான்...பார்வையிலே படம் பிடிச்சான்...
with TMS 1)அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்......
2)ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன்.... நீ ஒரு தனிப் பிறவி.....

அடுத்தப் பதிவில் வைரமுத்துவின் இன்னொரு அருமையான பதில்.

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...