விக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜனவரி, 2008

ஞானி சிறுகதைகள்

தேனீயில் ஞானி கதைகள் சுவாரஸ்யமாய் உள்ளது.
சாம்பிளுக்கு இங்கு ஒரு கதை கொடுக்கிறேன்.
மேலும் தேனீயில் படிக்கலாம்.
அல்லது ஞானி கதைகளை ஞானி என்கிற வலை தளத்தில் படிக்கலாம்.
இதன் ஆசிரியர் மோகன் கிருட்டிணமூர்த்தி.
சிறுகதைகள் சிறுசாக, ஒரு சாதரண குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை களமாகக் கொண்டு அற்புதமான யதார்த்தத்தை கொடுக்கிறது.

நரை

என்னங்க தலை நல்லா நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. போய் டை பண்ணிகிட்டு வாங்க என்று ஒரு நாள் மாலை நச்சரித்தாள் என் மனைவி.

அட டையெல்லாம் நான் பண்ணிக்க மாட்டேன். நான் இயற்கையா தான் இருப்பேன். நான் ஞானியோட சிஷ்யன். நாளைக்கு ஞானியாக போறவன். சே. போ என்றேன்.

நீங்களாவது ஞானியாகறதாவது என்று நக்கலாக சொல்லிவிட்டு அடுப்பறைக்குள் நுழைந்தாள்.

எதிர்வீட்டு பெண்மணி திடீரென்று உள்ளே நுழைந்தார். கட்டுக்கு அடங்காமல் வெளியே வந்து விழும் தொந்தியை மூச்சு பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டேன். வாங்க, வாங்க உட்காருங்க.

எங்க வீட்ல டிவி மக்கர் பண்ணுது. சட்டி ஒலி பாக்கனும் என்றார் அந்த பெண்மணி.

அதுக்கு என்ன. உட்காருங்க என்று சொல்லி தொலைகாட்சி துவக்கிவிட்டு சமையலறைக்குள் விரைவாக சென்று தண்ணீர் குவளை எடுத்து வந்து அவர் முன் வைத்தேன்.

என்ன சார் இல்லையா வீட்ல என்றேன்.

அவரா. டை அடிச்சிட்டு வர போயிருக்காரு. நாளைக்கு ஏதோ பெரிய மீட்டிங்கா.

அட டை அடிப்பாரா அவர்? அடப்பாவி மனிதா உன் முடியை பார்த்து இத்தனை வயதிலும் என்ன இளமை என்றெல்லவா நினைத்திருந்தேன் என்று மனதுக்குள் திட்டினேன்.

பின்னே. நாப்பது வயசில் நரைக்காம இருக்குமா? உங்களுக்கு எத்தனை வயது? என்றார் என்னிடம் சட்டென்று.

வரக்கூடாத கேள்வி என்று நினைக்கும் போதே வந்த கேள்வி. முப்பதததததததைந்து என்றேன். உள்ளே இருந்து என் மனைவி………..தெட்டு என்று முடித்தாள்.

ஹிஹி எட்டு என்று முடித்தேன்.

புயலை கிளப்பிவிட்டு தொடர் முடிந்ததும் வீடு திரும்பினார் அந்த பெண்மணி.

கையில் சப்பாத்தி கட்டையுடன் என் மனைவி பத்திரகாளியாக வெளியே வந்தாள். 38ஐ 35ன்னு சொல்றீங்க, தம் கட்டி வயித்தை இழுத்து பிடிச்சி வச்சிருக்கீங்க, தண்ணி எடுத்திட்டு வர துள்ளி ஓடி வர்றீங்க. இதுல ஞானி ஆவப்போரிங்களா. உங்களை விட 2 வயது பெரியவர் அவரே டை அடிச்சிக்கிறார்ல. போய் டை அடிச்சிட்டு வாங்க என்றாள் காட்டமாக.

பூனை மாதிரி உள்ளே சென்று சட்டை போட்டுக் கொண்டு முடி திருத்தும் நிலையத்திற்கு கிளம்பினேன்.

எதிர்பட்டான் ஞானி. நடந்ததை சொன்னேன்.

ஹாஹா வென்று சிரித்தான்.

நான் இருக்கும் இடத்திலிருந்து நீ இருக்கும் இடம் ரொம்ப தூரம் என்று சொல்லி பறந்தான்.

அவன் போன திசையை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.



ஞானி

ஞானி - சிறுகதை தொகுப்பு
இதன் ஆசிரியர் விக்கி ஞானி என்கிற தளத்தில் விவாதத்திற்கும் அவகாசமளிக்கிறார்.
அங்கு சென்று பார்க்க ஆசை.
விரைவில் நிறைவேற்றிகொள்கிறேன்.
இந்த பதிவினுடன் வைரமுத்து வரிகள்:

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே

{படம் ஜெண்டில்மேன்}



தேனீயுடன் இந்தப்பதிவு முடிகிறது.
அடுத்த பதிவிற்கு விக்கி செல்கிறேன்.


--
http://madscribbler.googlepages.com/

20 ஜூலை, 2007

அசை போடுதல்



நான் ஒரு மாடு.




இங்கே பசுமையாக இருக்கிறது, அங்கே பசுமையாக இருக்கிறது என்று Blog, wiki தளங்களில் மேய்கிறேன்.




அசை போடுகிறேன் சில நேரங்களில்.




அவசர அவசரமாக உண்டதை மனதிலிருந்து கொணர்ந்து அசை போட முயற்சிக்கிறேன்.




Relaxed ஆக அசை போட்டதை பதிவு செய்ய விரும்புகிறேன்.




அப்படி விக்கியில் மேய்ந்த பொழுது கிடைத்த படங்களும் தகவலும்....


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


தேனீ பூவில் இருந்து பூந்தேன் உறிஞ்சுகின்றது
தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் பல அறுகோண அறைகள் கொண்ட, கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் வெளியிடும் மெழுகால் இந்த கூடுகள் அமைக்கப்படுகின்றன.


இந்த மாடு மறுபடி விக்கி செல்லும் தகவல்களை மேய!
cell phone மூலம் பதிவு செய்ய இந்த மாடு முயற்சி செய்யும்!











நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...