நான் ஏன் பிளாக் செய்கிறேன்?
கேள்வி கேட்டுக் கொண்டு விட்டேன். பதில் எழுத திண்டாடுகிறேன்.
BLOG செய்வது, யாரவது படிக்க மாட்டார்களா என்று தானே?
என்னுடைய எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆம், அதில்லென்ன தயக்கம்?
எண்ணங்களை அப்படியே எழுத முடியாது. ஒரு பொருள், தலைப்பு வேண்டியள்ளது. கட் கட்டாக வரும் எண்ணங்களை கட்டு கட்டாக கட்டி ஒரு வடிவு கொடுக்க வேண்டும். எண்ணங்களை கோர்வைப் படுத்த வேண்டும்.
நம் எண்ணங்களை எல்லாம் கொட்டி விட முடியுமா என்ன?
எண்ணங்களை எல்லாம் எழுதினால் எல்லோரும் படித்து விடுவார்களா என்ன? எல்லோருக்கும் வேறு உருப்படியான வேலைகள் இல்லையா!
நான் மற்றவர்கள் எழுத்தில் வடித்திருக்கும் எண்ணங்களை படித்து விடுகிறேனா என்ன?
மற்றவர்கள் என் BLOG கைப் படித்து என் எண்ணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றுதான் ஆசை. படித்து, அவர்களுடைய எண்ணங்களை கருத்தாகச் சொல்ல வேண்டுமென்றும் விரும்புகிறேன். அதனால் BLOG செய்கிறேன்.
எல்லோருக்கும் பொதுவான செய்திகளை எழுதினால் கொஞ்சம் நிறைய மக்கள் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஒரு நண்பர் word press வலை தளத்தில் நல்லதொரு பதிவு செய்கிறார். வரைட்டியான விஷயங்களை படங்களுடன் நன்றாக பகிர்ந்து கொள்கிறார். இந்த பிளாக் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஓரிரு முறை எனது கருத்துக்களை அந்த பிளாக்கில் எழுதியுள்ளேன்.அந்த நண்பர் என் பிளாக் பக்கமே வரவில்லை. இதோ எனக்குப் பிடித்த அந்த பிளாக் விலாசம்:
மற்றொரு சென்னை நண்பர் இருக்கிறார். இவரை நான் வலை மூலம் சந்தித்து, ஒரு சந்தர்பத்தில், அவர் மற்றும் அவர் குடும்பத்தினரை பர்சனலாகவும் சந்தித்திருக்கிறேன்.(பர்சனல்லாக என்பதை எப்படி தமிழ் படுத்துவது? )சார் சும்மா கவிதை எழுதி கலாய்கிறார். படியுங்களேன் அவர் கவிதைகளை: ஆம்பல் மலர்.
பொறுமையாக அவரின் ஆத்ம சரிதத்தையும் பதிக்கிறார். அவ்வப்பொழுது உரிமையாக நான் ஏன் அடிக்கடி பிளாக் செய்வதில்லை என்றும் கேட்கிறார்.
மற்றொரு நல்ல பிளாக் ஞாநி. இதைப் பற்றி இந்த பிளாக்கில் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். அதற்கான லிங்க்.ஞானி என்ற பாத்திரம் மூலம் இவர் நல்ல கருத்துக்களை சொல்கிறார். இவர் என் பிளாகிற்கு வந்து அவரின் ஞானியை சந்தித்ததற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.
வலை தளங்களில் எவ்வளவோ வலைப்பூக்கள் இருந்தாலும், சில பூக்கள் மாத்திரம் மனதில் தங்குகிறது. நமது பக்கங்கள் என்ன - ஜுஜுபி.
ஆக,
BLOGGER
WORDPRESS
WEBDUNIYA
என்ற மூன்று தளங்களில் என்னுடைய எண்ணங்களை (பெரும்பாலும் ஆபீஸ் மற்றும் குடும்பம் சம்பந்தமான எண்ணங்கள்) எழுதிக்கொண்டுள்ளேன்.
மக்கள் வந்து படித்து கருத்துக்கள் சொன்னால் மேலும் சந்தோஷமாக எழுத முயற்சி செய்வேன். வலை தளங்களில் மிதந்து கொண்டிருப்பேன்.
பார்ப்போம்.

இப்படி கேள்வி பதில்களாகவே இந்த பிளாகை சந்தோஷமாக தொடர்வோம். இந்தப் பதிவில் 'எப்படி BLOG செய்கிறேன்' என்பதை விவரிக்கவில்லை. அதை அடுத்த பதிவில் முயற்சி செய்கிறேன்.
--
cgbalu from Hubbali
1 கருத்து:
ஓ.. என் அருமை நண்பரே! எங்கோ பிறந்தோம். எங்கோ வளர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நம் எண்ணங்களை யாரிடமாவது பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறோம். அதை ஒட்டியதுதான் இந்த வலைப்பதிவுகள். நானும் நினைப்பதுண்டு. என் புளோக்குகளை யாராவது படிக்கிறார்களா? படிப்பவர்கள் ஓரிரு வார்த்தைகளிலாவது தங்கள் கருத்துக்களை உரிமையுடன் பகிர்ந்துக் கொள்ளலாமேயென. ஆனால் என்ன செய்ய. அத்திப்பூத்தார் போல் ஒரு வாசகி மெயில் அனுப்பியிருந்தார், அவருக்கு ஒரு கடவுள் பாடல் கேட்டு. விடாமல் தொடர்வோம். நம் எண்ணங்களை பதிப்போம்.
கருத்துரையிடுக