13 ஜனவரி, 2014

அடுத்த கேள்விக்காக ஒரு குறிப்பும் எழுதிக்கொள்ளவில்லையே?


ஆமாம் புது வருடத்தில் அந்த பழக்கத்தை விட்டு விட்டேன். எதற்கு ஒரு பொருளை வைத்துக் கொண்டு முழிக்க வேண்டும்? தோன்றும் எண்ணங்களை உடனே எழுதி விடுவோம். எழுத முடியாவிட்டால் அதை மறந்து புது எண்ணங்களுக்கு காத்திருப்போம்.

05 ஜனவரி, 2014

2014ல் இந்த பிளாகில் அதிகம் எழுதுவீர்களா?

இந்த 2014 ஆண்டில் சந்தோஷமாக எழுத அடிக்கடி வருவோம். சந்தோஷத்திற்காக கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.
280 டயரி வலை தளத்தில் தினமும் ஒரு 280 தமிழ் எழுத்துக்களை தட்டிக்கொண்டு வருகிறேன்.


அது மாதிரி இங்கும் எதாவது எழுதி, நாலு பேரை படிக்க வைக்க முயற்சி செய்கிறேன்.
என்ன, டயரி எழுதுவது சுலபம்.
அப்ப அப்ப நடக்குற கஷ்டங்களையும், படும் வேதனைகளையும் புலம்பி விடலாம்.
அதிகம் யோசிக்கவோ, தப்பாக எழுதி விடுவோமோ என்ற பயமும் தேவையிருக்காது.
எதாவது ஒரு பொருளைப் பற்றி மேலும் தகவல்கள் சேகரிக்கும் பாடும் பட வேண்டாம்.
சந்தோஷமாக எழுத கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.
வாரம் ஒரு முறை கொஞ்சம் மெனக்கிடலாம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
இன்னும் அடிக்கடி வர முடிந்தாலும் சந்தோஷம்தான்.
சுலபமாக டயரி எழுதும் பொழுது, எதாவது ஒரு சின்னப் பொருளைப் பற்றி நாலைந்து கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டியது.
மனதிலிருந்தோ, வேறு தகவல்களிலிருந்தோ சந்தோஷமாக எழுத வேண்டியது தான்.

CYBERSIMMAN\'S BLOG

 சென்றால் கூட இங்கு எனக்கு எழுத பொருள்கள் நிரம்ப கிடைக்கும்.

14 டிசம்பர், 2013

"சில வெப் ஷாட் " படங்களெல்லாம் உங்கள் ப்ளாகிலிருந்து போய்விட்டதே. என்ன செய்யப் போகிறீர்கள்?

யாஹூ போட்டோசில் வைத்திருந்த படம்:

வெப் ஷாட்டில் வைத்திருந்த படம் 



ஆமாம் சார். இந்த இணையகப் பயணத்தில், சில தளங்கள் முடித்து போய்விடுகின்றன. yahoo photos , yahoo geocities , Hotmail,  Google Reader  அப்புறம் வெப்ஷாட் . Yahoo  அதனுடைய photos இடத்தை முடிக்கும்பொழுது சொல்லியது: "All  Good Things Should  have  an  end " அப்படித்தானே?
இப்ப என்ன செய்தேன் என்றால், எனது இந்த ப்ளாகிற்கு ஒரு தொடர்சி வேண்டியிருப்பதால், இங்கு காணாமல் போன webshots படங்களுக்கு சம்பந்தமான பதிவுகளை கழட்டி விட்டு விட்டேன்.
"All  Good Things Should  have  an  end "
அடுத்த கேள்வி : 2014ல் இந்த பிளாகில் அதிகம் எழுதுவீர்களா?

06 செப்டம்பர், 2013

இந்தவாரம் எந்தப் பத்திரிக்கை வாங்கிப் படித்தீர்கள்?



பெரிய சைஸ் ‘கல்கி’ படிக்கும் பாக்கியம் கிடைத்தது. என்னுடைய ஆபிசர் சாருக்கு நன்றி. அவர் வாங்கி வந்த இதழை ‘படிச்சூட்டுக் கொடுங்கோ’ என்று அன்பாகக் கொடுத்தார். கல்கியில் பிரபஞ்சனின் மகாபாரத பாத்திரங்கள் பற்றிய கட்டுரைத் தொடர் வந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த இதழில் ‘விதுர’னைப்  பற்றிய கட்டுரை வந்துள்ளது. குவிக்காகப் படித்தேன்.


அடுத்த இதழில் பிரபஞ்சன் எழுதப் போவது குந்தியைப் பற்றி. தொடராகப்  படிக்க ஆசைதான். படிக்கும் wish list - ல் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். தராசு பதில் நன்றாக இருக்கும் கல்கி பத்திரிகையில். ஞானி ‘ஓ பக்கங்கள்’ எழுதுகிறார். ஓ பக்கங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். விகடனிலும் குமுதத்திலும் அவ்வப்போது ஓ பக்கங்கள்  படித்ததாக ஞாபகம். இந்த இதழில் பாரிஸ்  கட்டுரை எழுதியுள்ளார் ஞானி. பாரி என்று உச்சரிக்க வேண்டுமாம். கடைசிப் பக்கத்தில் IAS  அதிகாரி ஒருவரின் மாநில பிரிவினை குறித்தக்  கட்டுரையும் ஜம்மென்றிருந்தது.


ஆக இந்த தடவை நான் படித்த பத்திரிகை ‘கல்கி’  
சுருக்கமாக எனது கல்கி அனுபவங்கள்  :
1) பி.வி ஆர் எழுதிய ‘சென்ட்ரல்’ நவீனம்.
2)கி. ராஜேந்திரன் எழுதிய ‘சைக்கோ’ நவீனம்.
3) கடுகு என் கேள்வி ஒன்றுக்கு  பதிலளித்து - ஐம்பது ரூபாய்கள் பரிசு கொடுத்த மகிழ்சி
4)எங்கள் திருமண நாள் சந்தர்ப்பமொன்றில் ‘தராசு’ பதிலளித்த சுவாரஸ்யம் மறக்க முடியாது . அதாவது, எனது மற்றும் எனது மனைவியின் கேள்விக்கும், பதில் ஒரே இதழில் வெளிவந்தது.
5)கல்கியில் பொதுவாக இந்த வார விஷயங்களின் விமர்சினக் கடிதங்கள் ஒரு வாரம் விட்டு பிரசுரமாகும். அந்த விதத்தில் ராஜேஷ்குமார் எழுதிய நவீனமொன்றிர்கான  என்னுடைய விமர்சினக் கடிதமும் பிரசுரமாயிற்று.
6)’முக்காலி முக்கு’ என்ற சொற்றொடர் இடம் பெரும் ‘சுஜாதா’வின் நாவலொன்றை வாசித்தததும்  கல்கியிலே
8)பொன்னியின் செல்வன்.
அடுத்தக் கேள்வி "சில வெப் ஷாட் " படங்களெல்லாம் உங்கள் ப்ளாகிலிருந்து போய்விட்டதே. என்ன செய்யப் போகிறீர்கள்?

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...