24 பிப்ரவரி, 2012

சமீபத்தில் ஏதாவது கவிதை எழுதினீர்களா?

எழுதினேன். இறப்பைப் பற்றிய ஒரு கவிதை. சில நேரங்களில் மறைந்த என் உறவினர்கள் நண்பர்கள் நான் ரசித்த கலைஞ்சர்கள்  எல்லோரும் நினைவுக்கு வருவார்கள். எவனும் எவளும் நிரந்தரமில்லை என்பதை ஒரு வித பயத்துடன் உணர்ந்த பொழுது உருவானது இந்தக் கவிதை.


மறைந்தால்......
அவ்வளவேதான்..........!
"மறைந்தால்"  என்றால் பயம் வருகிறது.
"மறைவும்" "பயமும்" இன்றியமை.


மறைந்தவர்களைப்பற்றி யோசிக்கும்பொழுது.....
புதிதாக மறைந்தவர்கள் தான்,
மிகுந்த துன்பத்துடன் நினைவிற்கு வருகிறார்கள்...


பழைய மறைந்தவர்கள்
மறைந்துவிடுகிறார்கள். 

அட அடுத்த பதிப்பிற்கு ஒரு கேள்வி ரெடியாக உள்ளதே!
 "சினிமா பார்க்கும்பொழுது என்ன செய்வீர்கள்?

27 மே, 2011

கோபம் வந்தால் என்ன செய்வது?

கோபத்தின் மேல்த்தான் கோபப்பட வேண்டும்.
முடிகிறதா?
இல்லையே !

ஹி ஹி ஹி ......ஹி 

அடுத்த கேள்வி 

அடுத்த கேள்வி சமீபத்தில் ஏதாவது கவிதை எழுதினீர்களா?  

25 மார்ச், 2011

'சமீபத்தில் ரசித்த புகைப்படம் எது?'

இமேஜ் ஷாக்கில் சில படங்களை பதித்து வைத்திருக்கிறேன். அதில் இது ஒன்று. பறவை நடனமாட நிற்கிறதா? அதனுடைய பிம்பம் பிரமாதமாக உள்ளது.
Image Hosted by ImageShack.us
By madscribbler at 2008-07-௦௪
 "Creative"  என்று Search போட்டேன் ....கிடைத்த புகைப்படங்கள்:

இந்த ஆள் ஏன் சக்கர நாற்காலியை இவ்வளவு கஷ்டப்பட்டு நிப்பாட்டுகிறான்?

Uploaded with ImageShack.உச
எலும்பும் தோலுமாய் என்பதை இதைத்தான் சொல்லுவார்களோ?


Uploaded with ImageShack.உச
கட்டங்கள்



Uploaded with ImageShack.உச
துக்குணுண்டு துணுக்கிற்கு இம்புட்டு பெரிய வாய்?


Uploaded with ImageShack.உச

அடுத்த கேள்வி: கோபம் வந்தால் என்ன செய்வது?

04 டிசம்பர், 2010

அட இவனுக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்று பொறாமை வரும்பொழுது என்ன செய்வது?

பொறாமை வரும்போது, இந்த ஔவையார் பாடல் நினைவுக்கு கொணர்தல் நல்லது. 
நம்மால் கூட சில காரியங்களை எளிதாக சிறப்பாக செய்ய முடியும். 
அதை செய்வோம். 
நாம் பொறாமை படுபவர்களிடமிருந்து அவர்கள் சிறப்பாக செய்யும் காரியங்களை பாராட்டிப் பெற்றுக்கொள்வோம்.

"வான் குருவியின் கூடு வல்சுரக்குத் தொல் கறையான்
தேன் சிலம்பி யாவருக்கும் செய்ய அரிதால் - யாம் பெரிதும் 
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் கான் 
எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது!"  - ஔவையார்

 தூக்கணாங் குருவியின் கூடு, வலிமை உடைய அரக்கு, பழைமையான கறையான், தேன், சிலந்திக் கூடு, இவை யாவர்க்கும் செய்ய அரிதானவை, எனவே 'யாம் பெரிய'  என  தற்சிறப்புப் பேச வேண்டாம். எல்லோருக்கும் ஒவ்வொரு காரியம் எளிதானது, எப்போதும்! 


சில பல படங்களை பார்த்து வைத்துக் கொள்கிறேன். அடுத்த கேள்வியாக 'சமீபத்தில் ரசித்த புகைப்படம் எது?'வென கேள்வி கேட்டுக்கொள்கிறேன். ஒரு ஐந்து புகைப்படங்களை பிரசுரித்து அடுத்த பதிவை ஜமாய்கிறேன். 

எதேர்ச்சையாக இதை படிக்க நேரிடுபவர்களுக்கு நன்றி. இங்கு இருக்கும் கேள்விகளுக்கு தாங்களும் சின்னதாக, சிக்காக பதில் தரலாம் - காமென்ட் பகுதியில்

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...