மோட்டார் பைக் ஸ்டார்ட் செய்து, ஏறி உட்கார்ந்து ரைட் பண்ண ஆரம்பித்து விட்டால் தனி குஷி.
இப்பொழுது என்னிடமுள்ளது நீலக்கலர் பஜாஜ் பிளாட்டினா. "கிக்" ஸ்டார்ட் செய்யும் வயதெல்லாம் கடந்து விட்டதால், வலது கை கட்டை விரலால் அமுக்கி இயங்க வைக்கும் இயந்திரமிது.
கட்டை விரலால் அமுக்கி, உந்து கியர் போட்டு, நகரும் கியர்களை ஒவ்வொன்றாக மாற்றி வண்டி நகர தொடங்கி விட்டால் - எது எங்கு அமுக்கப்படுகிறதோ, எந்த கிளட்சை பயன் படுத்துகிறதோ, எந்த கியர்கள் மாற்றப் படுகிறதோ தெரியாது - எண்ணங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓட தொடங்கிவிடும். நான் வண்டியை ஓட்டும் வேகத்தை விட எண்ணங்கள் வேகமாக ஓடும்.
உற்சாக எண்ணங்கள் தான் அதிகம்.
ஆபீஸ், வீடு, மனைவி மக்கள் குறித்து எண்ணங்கள் இருக்கும்.
திடீரென ஒரு ஐடியா உதிக்கும். அப்பொது கடல் அலைகள் கொப்பளிப்பது போலிருக்கும்.
சமீப காலமாக் ட்விட்டரில் 140 வார்த்தைகள் எழுதும் பைத்தியம் பிடித்திருப்பதால், ஓராயிரம் ட்வீட்கள் உதயமாகும்.
இந்த உலகத்திற்கே நான்தான் அதிபதி என்ற திமிர் நிலையில் இருப்பேன்.
இப்படித்தானே, ஒரு நாள் பைகில் ரைட் செய்யும்போது வந்த ஒரு எண்ணம் இப்போது பதிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
"பைக் எண்ணங்கள்" பைக்கை விட்டு கீழே இறங்கியவுடன், மறைந்து விடுவதால், எண்ணங்கள் எண்ணங்களாகவே இறந்து விடுகிறது.
பைக்கில் போகும்பொழுது, வந்த ஒரு ஐடியாவை சாவா வரம் கொடுத்து, பிடித்து வைத்திருக்கிறேன். "பைக் எண்ணங்கள்" குறித்து இந்த கேள்வி பதிலை அவ்வப்போது தொடரும் வாய்பு உள்ளது. அதாவது "கேள்வியும் நானே பதிலும் நானே" பகுதிக்கு கேள்விகள் எதுவும் தோதாக கிடைக்கவில்லையென்றால், இருக்கவே இருக்கிறது ஒரு தயார் கேள்வி: "பைக் எண்ணங்கள் என்பது யாது?"
இந்தப்பதிவை படிப்பவர்கள் தங்கள் எண்ணங்களை பதிலாக பின்னூட்டமிடலாம். கேள்விகளும் கேட்கலாம். பதில் தெரிந்தால் அதை ஒரு பதிவாகச் செய்ய முயற்சி செய்கிறேன்.
அடுத்த கேள்விக்கான ஐடியா: (இதுவும் பைக்கில் செல்லும்பொழுது வந்த எண்ணம்தான்)
நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் கேள்வி பதில் எது?
03 ஏப்ரல், 2010
30 டிசம்பர், 2009
கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருப்பது சந்தோஷமா?
சந்தோஷம்தான்.
சந்தோஷம் இல்லை தான்.
சந்தோஷம்: நாம் மனதில் நினைத்திருந்ததுபோல் வேலை சடார் என்று முடிந்தால்.
சந்தோஷம் இல்லை: கம்ப்யூட்டர் ஹாங் ஆனால்; மின்சாரம் இல்லை என்றால்; இன்டர்நெட் இணைப்பு கிடைக்காவிட்டால்; இணைப்பு கிடைத்து, இருக்கும் வேலையை விடுத்து, பறந்து பறந்து வேண்டாத பக்கங்களுக்குச் சென்று, கடைசியில் என்ன வேலைக்கு வந்தோம் என்பதை மறப்பது!
சந்தோஷம்: Random மாக படங்களை ஸ்லைட் ஷோ போட்டு, அதனுடன் Random மாக இசையை கேட்பது.
சந்தோஷமில்லை: வேண்டிய இசை, படம் கிடைக்காமல் தேடுவது.
சந்தோஷம்: கம்ப்யூட்டர் முன்னால் உத்கர்ந்திருக்கும்பொழுது மக்கள் தொந்திரவு கொடுக்காமல் இருப்பது.
சந்தோஷமில்லை: பெண்டாட்டி வந்து என்ன செய்து கொண்டிருக்கிறிர்கள் என்றும், மேலும் நான் ஒருத்தி இருப்பது தெரியவில்லையா என்று சாடுவதும்.
சந்தோஷமில்லை: இன்னும் கம்ப்யூட்டரில் tamizhil எழுத ஆன்லைன் நம்பிக்கொண்டிருப்பது.
இதை படிப்பவர்களும் கமெண்ட்டில் பதில் எழுதலாம்.
அடுத்த கேள்வி: மோட்டர் பைக் எண்ணங்கள் என்பது யாது?
17 நவம்பர், 2009
குகிள் 'டாக்' என்றால் என்ன?
நான் சொல்ல வருவது Google doc பற்றி, google talk குறித்தல்ல.
என்னை மாதிரி கிறுக்கர்களுக்கு Talk பயம். எழுதுவது அவ்வளவாக பயமில்லை.
எழுதுவதற்கு Google டாக் நன்கு பயன் உள்ளதாக இருக்கிறது.
Google டாக் குகிள் வலை தளத்திலும் மற்றும் Sify mail லிலும் உள்ளது.
வீட்டிலேயே கணினியில் word pad ல் எழுதி குகிள் டாக்கில் அப்லோட் செய்து கொள்ளலாம் .
சரியாக எழுதி அப்லோட் செய்து கொண்டால் Blog ல் பிரசுரம் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.
அந்த டாக்குமெண்டை இ மெயில் கூட செய்யலாம்.
இந்த வசதி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அடுத்த கேள்வி: கம்ப்யூட்டர் முன்னாலேயே உட்கார வேண்டுமா சந்தோஷத்திற்கு?
கேள்விகளுக்கு இதை படிப்பவர்களும் பதில் எழுதலாம்.
20 செப்டம்பர், 2009
எப்படி பிளாக் செய்கிறேன்?
எப்படி ப்ளாக் செய்கிறேன்?
இப்படி க்ளிக்கி, அப்படி க்ளிக்கி, அந்த formக்குப் போய், இந்த formக்குபோய்....கடலென இருக்கும் Optionகளில் (optionக்கு தமிழில் என்ன?) ஒருசெட்டிங்கை தேர்ந்தெடுத்து கிறுக்கல்கள் என்று முதலில் பெயர் வைத்து,பிறகு சந்தோஷமாக எழுதுகிறேன் என்று பெயர் வைத்து கிட்டத்தட்ட 53 பதிவுகளைஇந்த ப்ளாகில் எழுதியிருக்கிறேன்.
ஓடும் ஆயிரமாயிரம் எண்ணங்களிலிருந்து....,
ஓடாமல் இருக்கும் எண்ணங்களை ஓடவைத்து ஒரு தலைப்பை தேடிக்கொள்கிறேன்.
அந்த பொருளுக்கேற்ப ஆங்காங்கு கிறுக்கி வைத்துக் கொள்கிறேன்.
கூகிள் நோட்பாட், இ மெயில் ப்ரோக்ராம்களில் ஏகப்பட்ட கிறுக்கல்கள். கூகிள்டாக்குமெண்டில் கூட பதிவுகளை வரைவு செய்து கொள்கிறேன்.
பதிவில் ஒரு படம் போட விருப்பமிருந்தால் அதற்கு ஒரு கூகிள் தேடல்.
பல சமயங்களில் ஒரு பதிவை செய்வதற்கு மாதக்கணக்காகிறது.
சில சமயங்களில் உடனேசெய்ய முடிகிறது.
மெனக்கிட்டு பதிவு செய்யும் சில பதிவுகளை படிக்க எனக்கேபிடிப்பதில்லை.
இப்படி ப்ளாக் செய்கிறேன்.
அடுத்த கேள்வி: கூகிள் டாக் என்றால் என்ன?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நரியும் திராட்சையும்:
ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...
.jpg)