03 ஏப்ரல், 2010

"பைக் எண்ணங்கள் என்பது யாது?"

மோட்டார் பைக் ‍‍‍‍‍‍‍‍‍‍‍ஸ்டார்ட் செய்து, ஏறி உட்கார்ந்து ரைட் பண்ண ஆரம்பித்து விட்டால் தனி குஷி.

இப்பொழுது என்னிடமுள்ளது நீலக்கலர் பஜாஜ் பிளாட்டினா. "கிக்" ஸ்டார்ட் செய்யும் வயதெல்லாம் கடந்து விட்டதால், வலது கை கட்டை விரலால் அமுக்கி இயங்க வைக்கும் இயந்திரமிது.

கட்டை விரலால் அமுக்கி, உந்து கியர் போட்டு, நகரும் கியர்களை ஒவ்வொன்றாக மாற்றி வண்டி நகர தொடங்கி விட்டால் - ‍‍எது எங்கு அமுக்கப்படுகிறதோ, எந்த கிளட்சை பயன் படுத்துகிறதோ, எந்த கியர்கள் மாற்றப் படுகிறதோ தெரியாது - எண்ணங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓட தொடங்கிவிடும். நான் வண்டியை ஓட்டும் வேகத்தை விட எண்ணங்கள் வேகமாக ஓடும்.



உற்சாக எண்ணங்கள் தான் அதிகம்.

ஆபீஸ், வீடு, மனைவி மக்கள் குறித்து எண்ணங்கள் இருக்கும்.

திடீரென ஒரு ஐடியா உதிக்கும். அப்பொது கடல் அலைகள் கொப்பளிப்பது போலிருக்கும்.

சமீப காலமாக் ட்விட்டரில் 140 வார்த்தைகள் எழுதும் பைத்தியம் பிடித்திருப்பதால், ஓராயிரம் ட்வீட்கள் உதயமாகும்.

இந்த உலகத்திற்கே நான்தான் அதிபதி என்ற திமிர் நிலையில் இருப்பேன்.

இப்படித்தானே, ஒரு நாள் பைகில் ரைட் செய்யும்போது வந்த ஒரு எண்ணம் இப்போது பதிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

"பைக் எண்ணங்கள்" பைக்கை விட்டு கீழே இறங்கியவுடன், மறைந்து விடுவதால், எண்ணங்கள் எண்ணங்களாகவே இறந்து விடுகிறது.

பைக்கில் போகும்பொழுது, வந்த ஒரு ஐடியாவை சாவா வரம் கொடுத்து, பிடித்து வைத்திருக்கிறேன். "பைக் எண்ணங்கள்" குறித்து இந்த கேள்வி பதிலை அவ்வப்போது தொடரும் வாய்பு உள்ளது. அதாவது "கேள்வியும் நானே பதிலும் நானே" பகுதிக்கு கேள்விகள் எதுவும் தோதாக கிடைக்கவில்லையென்றால், இருக்கவே இருக்கிறது ஒரு தயார் கேள்வி: "பைக் எண்ணங்கள் என்பது யாது?"

இந்தப்பதிவை படிப்பவர்கள் தங்கள் எண்ணங்களை பதிலாக பின்னூட்டமிடலாம். கேள்விகளும் கேட்கலாம். பதில் தெரிந்தால் அதை ஒரு பதிவாகச் செய்ய முயற்சி செய்கிறேன்.

அடுத்த கேள்விக்கான ஐடியா: (இதுவும் பைக்கில் செல்லும்பொழுது வந்த எண்ணம்தான்)
நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் கேள்வி பதில் எது?

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

நினைக்கும்போதே ஒரு சந்தோஷம் பிறக்கிறது.

test

please click the link This song is sung by. Satyanarayana.