30 டிசம்பர், 2009

கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருப்பது சந்தோஷமா?


சந்தோஷம்தான்.
சந்தோஷம் இல்லை தான்.
சந்தோஷம்: நாம் மனதில் நினைத்திருந்ததுபோல் வேலை சடார் என்று முடிந்தால்.
சந்தோஷம் இல்லை:  கம்ப்யூட்டர் ஹாங் ஆனால்;  மின்சாரம் இல்லை என்றால்; இன்டர்நெட் இணைப்பு கிடைக்காவிட்டால்;  இணைப்பு கிடைத்து, இருக்கும் வேலையை விடுத்து, பறந்து பறந்து வேண்டாத பக்கங்களுக்குச் சென்று, கடைசியில் என்ன வேலைக்கு வந்தோம் என்பதை மறப்பது!
சந்தோஷம்: Random  மாக படங்களை ஸ்லைட் ஷோ போட்டு, அதனுடன் Random மாக இசையை கேட்பது.
சந்தோஷமில்லை: வேண்டிய இசை, படம் கிடைக்காமல் தேடுவது.
சந்தோஷம்: கம்ப்யூட்டர் முன்னால் உத்கர்ந்திருக்கும்பொழுது மக்கள் தொந்திரவு கொடுக்காமல் இருப்பது.
சந்தோஷமில்லை: பெண்டாட்டி வந்து என்ன செய்து கொண்டிருக்கிறிர்கள்  என்றும், மேலும் நான் ஒருத்தி இருப்பது தெரியவில்லையா என்று சாடுவதும்.
சந்தோஷமில்லை: இன்னும் கம்ப்யூட்டரில் tamizhil  எழுத ஆன்லைன் நம்பிக்கொண்டிருப்பது.
இதை படிப்பவர்களும் கமெண்ட்டில் பதில் எழுதலாம்.
அடுத்த கேள்வி: மோட்டர் பைக் எண்ணங்கள் என்பது யாது? 


17 நவம்பர், 2009

குகிள் 'டாக்' என்றால் என்ன?




நான் சொல்ல வருவது Google doc பற்றி, google talk குறித்தல்ல.
என்னை மாதிரி கிறுக்கர்களுக்கு Talk பயம். எழுதுவது அவ்வளவாக பயமில்லை.
எழுதுவதற்கு Google டாக் நன்கு பயன் உள்ளதாக இருக்கிறது.
Google டாக் குகிள் வலை தளத்திலும் மற்றும் Sify mail லிலும் உள்ளது.
வீட்டிலேயே கணினியில் word pad ல் எழுதி குகிள் டாக்கில் அப்லோட் செய்து கொள்ளலாம் .
சரியாக எழுதி அப்லோட் செய்து கொண்டால் Blog  ல் பிரசுரம் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.
அந்த டாக்குமெண்டை இ மெயில் கூட செய்யலாம்.
இந்த வசதி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அடுத்த கேள்வி: கம்ப்யூட்டர் முன்னாலேயே உட்கார வேண்டுமா சந்தோஷத்திற்கு? 
கேள்விகளுக்கு இதை படிப்பவர்களும் பதில் எழுதலாம்.

20 செப்டம்பர், 2009

எப்படி பிளாக் செய்கிறேன்?

எப்படி ப்ளாக் செய்கிறேன்?
இப்படி க்ளிக்கி, அப்படி க்ளிக்கி, அந்த formக்குப் போய், இந்த formக்குபோய்....கடலென இருக்கும் Optionகளில் (optionக்கு தமிழில் என்ன?) ஒருசெட்டிங்கை தேர்ந்தெடுத்து கிறுக்கல்கள் என்று முதலில் பெயர் வைத்து,பிறகு சந்தோஷமாக எழுதுகிறேன் என்று பெயர் வைத்து கிட்டத்தட்ட 53 பதிவுகளைஇந்த ப்ளாகில் எழுதியிருக்கிறேன்.
ஓடும் ஆயிரமாயிரம் எண்ணங்களிலிருந்து....,
ஓடாமல் இருக்கும் எண்ணங்களை ஓடவைத்து ஒரு தலைப்பை தேடிக்கொள்கிறேன்.
அந்த பொருளுக்கேற்ப ஆங்காங்கு கிறுக்கி வைத்துக் கொள்கிறேன்.
கூகிள் நோட்பாட், இ‍‍ மெயில் ப்ரோக்ராம்களில் ஏகப்பட்ட கிறுக்கல்கள். கூகிள்டாக்குமெண்டில் கூட பதிவுகளை வரைவு செய்து கொள்கிறேன்.
பதிவில் ஒரு படம் போட விருப்பமிருந்தால் அதற்கு ஒரு கூகிள் தேடல்.
பல சமயங்களில் ஒரு பதிவை செய்வதற்கு மாதக்கணக்காகிறது.
சில சமயங்களில் உடனேசெய்ய முடிகிறது.
மெனக்கிட்டு பதிவு செய்யும் சில பதிவுகளை படிக்க எனக்கேபிடிப்பதில்லை.
இப்படி ப்ளாக் செய்கிறேன்.
அடுத்த கேள்வி: கூகிள் டாக் என்றால் என்ன?

16 ஜூலை, 2009

நான் என் BLOG செய்கிறேன்?

நான் ஏன் பிளாக் செய்கிறேன்?

கேள்வி கேட்டுக் கொண்டு விட்டேன். பதில் எழுத திண்டாடுகிறேன்.

BLOG செய்வது, யாரவது படிக்க மாட்டார்களா என்று தானே?

என்னுடைய எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆம், அதில்லென்ன தயக்கம்?

எண்ணங்களை அப்படியே எழுத முடியாது. ஒரு பொருள், தலைப்பு வேண்டியள்ளது. கட் கட்டாக வரும் எண்ணங்களை கட்டு கட்டாக கட்டி ஒரு வடிவு கொடுக்க வேண்டும். எண்ணங்களை கோர்வைப் படுத்த வேண்டும்.

நம் எண்ணங்களை எல்லாம் கொட்டி விட முடியுமா என்ன?

எண்ணங்களை எல்லாம் எழுதினால் எல்லோரும் படித்து விடுவார்களா என்ன? எல்லோருக்கும் வேறு உருப்படியான வேலைகள் இல்லையா!

நான் மற்றவர்கள் எழுத்தில் வடித்திருக்கும் எண்ணங்களை படித்து விடுகிறேனா என்ன?

மற்றவர்கள் என் BLOG கைப் படித்து என் எண்ணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றுதான் ஆசை. படித்து, அவர்களுடைய எண்ணங்களை கருத்தாகச் சொல்ல வேண்டுமென்றும் விரும்புகிறேன். அதனால் BLOG செய்கிறேன்.

எல்லோருக்கும் பொதுவான செய்திகளை எழுதினால் கொஞ்சம் நிறைய மக்கள் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஒரு நண்பர் word press வலை தளத்தில் நல்லதொரு பதிவு செய்கிறார். வரைட்டியான விஷயங்களை படங்களுடன் நன்றாக பகிர்ந்து கொள்கிறார். இந்த பிளாக் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஓரிரு முறை எனது கருத்துக்களை அந்த பிளாக்கில் எழுதியுள்ளேன்.அந்த நண்பர் என் பிளாக் பக்கமே வரவில்லை. இதோ எனக்குப் பிடித்த அந்த பிளாக் விலாசம்:

மற்றொரு சென்னை நண்பர் இருக்கிறார். இவரை நான் வலை மூலம் சந்தித்து, ஒரு சந்தர்பத்தில், அவர் மற்றும் அவர் குடும்பத்தினரை பர்சனலாகவும் சந்தித்திருக்கிறேன்.(பர்சனல்லாக என்பதை எப்படி தமிழ் படுத்துவது? )சார் சும்மா கவிதை எழுதி கலாய்கிறார். படியுங்களேன் அவர் கவிதைகளை: ஆம்பல் மலர்.
பொறுமையாக அவரின் ஆத்ம சரிதத்தையும் பதிக்கிறார். அவ்வப்பொழுது உரிமையாக நான் ஏன் அடிக்கடி பிளாக் செய்வதில்லை என்றும் கேட்கிறார்.
நான் சென்ற மற்றொரு பிளாக் ஜெஸிலாவின் கிறுக்கல்கள். தற்பொழுதிய டெக்னிக்களை உபயோகப்படுத்தி உருவாகிய பிளாக். நல்ல சினிமாப் படங்களை விமர்சினம் செய்கிறார். கவிதைக் கூட்டங்களைப் பற்றி எழுதுகிறார். இவரது வலைப் பூவை விகடன் விலாசமிட்டுக் காட்டியுள்ளது. கருத்துக்கள் சொல்ல நல்லதொரு நண்பர் குழாமும் இவருக்குள்ளது. கருத்து சொல்ல இவரை என் பிளாகுக்கு வரவழைக்க முடியவில்லை.
மற்றொரு நல்ல பிளாக் ஞாநி. இதைப் பற்றி இந்த பிளாக்கில் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். அதற்கான லிங்க்.ஞானி என்ற பாத்திரம் மூலம் இவர் நல்ல கருத்துக்களை சொல்கிறார். இவர் என் பிளாகிற்கு வந்து அவரின் ஞானியை சந்தித்ததற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.
வலை தளங்களில் எவ்வளவோ வலைப்பூக்கள் இருந்தாலும், சில பூக்கள் மாத்திரம் மனதில் தங்குகிறது. நமது பக்கங்கள் என்ன - ஜுஜுபி.
ஆக,
BLOGGER
WORDPRESS
WEBDUNIYA
என்ற மூன்று தளங்களில் என்னுடைய எண்ணங்களை (பெரும்பாலும் ஆபீஸ் மற்றும் குடும்பம் சம்பந்தமான எண்ணங்கள்) எழுதிக்கொண்டுள்ளேன்.
மக்கள் வந்து படித்து கருத்துக்கள் சொன்னால் மேலும் சந்தோஷமாக எழுத முயற்சி செய்வேன். வலை தளங்களில் மிதந்து கொண்டிருப்பேன்.
பார்ப்போம்.
இப்படி கேள்வி பதில்களாகவே இந்த பிளாகை சந்தோஷமாக தொடர்வோம். இந்தப் பதிவில் 'எப்படி BLOG செய்கிறேன்' என்பதை விவரிக்கவில்லை. அதை அடுத்த பதிவில் முயற்சி செய்கிறேன்.





--
cgbalu from Hubbali

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...