20 செப்டம்பர், 2009

எப்படி பிளாக் செய்கிறேன்?

எப்படி ப்ளாக் செய்கிறேன்?
இப்படி க்ளிக்கி, அப்படி க்ளிக்கி, அந்த formக்குப் போய், இந்த formக்குபோய்....கடலென இருக்கும் Optionகளில் (optionக்கு தமிழில் என்ன?) ஒருசெட்டிங்கை தேர்ந்தெடுத்து கிறுக்கல்கள் என்று முதலில் பெயர் வைத்து,பிறகு சந்தோஷமாக எழுதுகிறேன் என்று பெயர் வைத்து கிட்டத்தட்ட 53 பதிவுகளைஇந்த ப்ளாகில் எழுதியிருக்கிறேன்.
ஓடும் ஆயிரமாயிரம் எண்ணங்களிலிருந்து....,
ஓடாமல் இருக்கும் எண்ணங்களை ஓடவைத்து ஒரு தலைப்பை தேடிக்கொள்கிறேன்.
அந்த பொருளுக்கேற்ப ஆங்காங்கு கிறுக்கி வைத்துக் கொள்கிறேன்.
கூகிள் நோட்பாட், இ‍‍ மெயில் ப்ரோக்ராம்களில் ஏகப்பட்ட கிறுக்கல்கள். கூகிள்டாக்குமெண்டில் கூட பதிவுகளை வரைவு செய்து கொள்கிறேன்.
பதிவில் ஒரு படம் போட விருப்பமிருந்தால் அதற்கு ஒரு கூகிள் தேடல்.
பல சமயங்களில் ஒரு பதிவை செய்வதற்கு மாதக்கணக்காகிறது.
சில சமயங்களில் உடனேசெய்ய முடிகிறது.
மெனக்கிட்டு பதிவு செய்யும் சில பதிவுகளை படிக்க எனக்கேபிடிப்பதில்லை.
இப்படி ப்ளாக் செய்கிறேன்.
அடுத்த கேள்வி: கூகிள் டாக் என்றால் என்ன?

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

"optionக்கு தமிழில் என்ன?"

அட தெரிந்த வார்த்தைதான், நினைவுக்கு வராமல் மறந்துபோச்சே. ஆனாலும் "வாய்ப்பு" எனவும் எடுத்து கொள்ளலாம். நான் பேப்பரில் கிறுக்கி வைப்பதையே பதிவு செய்ய முடிவதில்லை. நீங்கள் பரவாயில்லை, எங்கெங்கோ கிறுக்கி வைத்து பதிவாக ஒன்று சேர்த்து விடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

எமது கணனியில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்ததால் பதிவுகள் பதிக்கவில்லை. தற்சமயம் சிக்கல்களை சிறிது களைந்திருக்கிறேன். வித்தியாசமான சிந்தனையால் வித்தியாசமான பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்நோக்கலாமென நினைக்கிறேன்.

test

please click the link This song is sung by. Satyanarayana.