மற்றோரு முத்து வைரத்திலிருந்து:
பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு முதல் தகுதி என்ன?
அவமானம் தாங்குதல்.
சுயமானமே பெரிதென்று கருதுகின்றவர்கள் பொதுமானம் காக்க முடியாது.
அனாதைப் பிள்ளைகளுக்கு நிதி திரட்டக் கடை வீதிக்குப் போகிறார் அன்னை தெரசா.
ஒரு கடைக்காரன் கஞ்சன், தேனிலவுக்குக் கூடத் தனியாய்ப் போய் வந்தவன்.
அவனிடம் கையேந்துகிறார் அன்னை."ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு..."
"ஒண்ணும் தரமுடியாது; ஓடிப்போ கெழவி"
ஏந்திய கை மடங்கவில்லை. "ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு..."
"சொன்னாக் கேக்கமாட்டே.."
ஏந்திய இடக்கையில் வந்து விழுகிறது அவன் காறித்துப்பிய கற்றை. எச்சில் விழுந்த இடக்கையை மூடிக்கொண்டு,
"நீ காறித்துப்பியது எனக்கு; என் பிள்ளைகளுக்கு..." என்று வலக்கை நீட்டுகிறார் அன்னை.
எழுந்து நின்று கும்பிட்டு, கண் துடைத்துக்கொண்டே காசு போடுகிறான் கடைக்காரன்.
கேள்விகளுக்கு உருப்படியான பதில்கள் கொடுப்பது ஒரு கலை.
எனது அடுத்த பதிவில் நண்பர் ப. நா கேட்கும் கேள்விகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.
21 செப்டம்பர், 2007
14 செப்டம்பர், 2007
எனக்குப் பிடித்தது.
இதோ குமுதத்தில் வாசித்த எனக்குப் பிடித்த வைரமுத்து பதில்:
இந்த உலகத்தில் கொடுத்து வைத்தவர் யார்?
இதோ இந்தப் பதிலை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் -
ஆண்டுதோறும் நிகழும் பத்து லட்சம் பூகம்பங்களில் ஏதேனுமொன்றால் இந்த பூமி எங்கோ ஒரு மூலையில் அதிர்ந்து கொண்டிருக்கிறது.
உலகின் ஏதேனுமோர் எரிமலை அக்கினி வாந்தி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஏதோ ஒரு சாலை விபத்தில் உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன உடல்கள்.
சில 'பயாப்சி' சோதனைகள் புற்றுநோயை உறுதிப்படுத்துகின்றன.
பலரின் பங்குகள் சந்தையில் சரிந்து கொண்டிருக்கின்றன.
உரிமையில்லாத பெண் உடல்களில் சில மிருகங்கள் வன்முறையால் நுழைந்து கொண்டிருக்கின்றன.
சில நீதிமன்றங்களில் உறவுகளின் கடைசி கையொப்பம் பதிவாகிக் கொண்டிருக்கிறது.
இவற்றுள் ஏதோரு பாதிப்பும் நேராமல் குமுதம் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களல்லவோ கொடுத்து வைத்தவர்?
இசை அரசி பி.சுசீலா அவர்கள் படிய சமீபத்தில் கேட்டவை.
solo: பக்கத்து வீட்டு பருவமச்சான்...பார்வையிலே படம் பிடிச்சான்...
with TMS 1)அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்......
2)ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன்.... நீ ஒரு தனிப் பிறவி.....
அடுத்தப் பதிவில் வைரமுத்துவின் இன்னொரு அருமையான பதில்.

10 செப்டம்பர், 2007
இசை அரசியின் பாடல்கள் மற்றும் தகவல்கள்.
ஓ செப்டெம்பர் நகர்ந்து கொண்டிருக்கிறது.
10 தேதி ஆகி விட்டது.
கிறுக்கல்களுக்கு வரவேயில்லை.
ஓ.கே.
இன்று வந்து விட்டேன்.
தேன்கூடு சென்று வைரமுத்து தேடினேன்.
குமுதத்தில் வரும் வைரமுத்து பதில்களை சிலாகித்திருந்தார்.....கோ.இராகவன்.
இன்னிசையரசி பி.சுசீலா அவர்களின் பாடல்களில் மெய்மறந்து கரைந்து போகும் உள்ளங்களின் துடிப்புகள் இந்த வலைப்பூவின் பதிவுகள்.
இசையரசி
இசை அரசியின் பாடல்கள் மற்றும் தகவல்கள்.
அருமையாக உள்ளது.
அடுத்த பதிவில் எனக்குப்பிடித்த வைரமுத்து பதில் ஒன்றை பதிவு செய்கிறேன்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
test
please click the link This song is sung by. Satyanarayana.