24 ஜூன், 2007

சார் மௌவல் தான் கரீக்டு.


தேனீயில் வலைப்பூ திரட்டி,
என்றொரு பகுதியில் சில வலை பதிவுகளுக்கு செல்லும் பயணத்தை மேற்கொண்டேன்.
latest பதிவு ஒன்றும் வசமாக கிடைக்கவில்லை.
இன்னும் பொறுமையான தேடலை மேற்கொண்டு,
நல்ல பதிவுகளை படித்து, இரசித்து, எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்!


! ! எளிமையே இனிமை ! !

..தேடு..கிடைக்கும்..

கிடைத்ததை பிடித்துக் கொள்..

தொலையும்..

கவலை கொள்ளாதே..

எல்லாமே போன கணக்கு தான்..
(from http://holdat9000.blogspot.com/index.html)

**************************************
நேற்றிரவு சன் டி.வி. ஒளிபரப்பிய சிவாஜி திரைப்பட விமர்சனத்தில் ரஜனி வாயசைப்பில்...கண்டுபிடித்துவிட்டாள் என் பெண்!...இவ்வளவு நாள் அவர்களை பாடு படுத்திய வவ்வல் சமாசரத்தை!
சார் மௌவல் தான் கரீக்டு.
மௌவல் என்றால் காட்டு மல்லிகை.
Anonymous comment எழுதிய அன்பரே....
தீர விசாரித்து இந்த மௌவல் மெய்யை உணர்ந்தேன்.
அன்பரே அடிக்கடி இந்த பதிவுக்கு வந்து என் சந்தேகங்களை நீக்கவும்.
*****************************************
அடுத்த பதிவில் த.பு. அவர்கள் comment ஒன்றில் ஏற்பட்ட எண்ணங்களை எழுத முயற்சி செய்கிறேன்!

21 ஜூன், 2007

வவ்வல் - கவ்வல்.

வவ்வலை கவ்விக்கொண்டிடிருந்து விட்டேன்.
ஆமாம் வவ்வல் என்றால் கவ்வுதல்.
நான் நினைத்த மாதிரி 'பூ' இல்லை.
(ஹ்ஹ......ஹா)
வவ்வலை கவ்வியபொழுது நிகழ்ந்த நிகழ்வுகள்:
1)google தேடுதல் பக்கம் கிடைத்தது.
2)வலையில் ஒரு நல்ல அகராதி கிடைத்தது.
3)blog நண்பர் தவபுதல்வன் சிவாஜி படப்பாடல்களை இன்னும் கேட்கவில்லை என்று தெரிந்தது.
4)anonymous நண்பர் ஒருவர் அந்த சொல் வவ்வல் இல்லை மௌவல் என்று கூறிப்பிட்டிருந்தார்.
(ஆமாம் மௌவல் என்றால்?)
அடுத்த பதிவில் தேனீ reader பகுதிக்குச் சென்று சில வலைபதிவுகளை படித்து - என் எண்ணங்களை இங்கு பதிவு செய்ய முயற்சி செய்யவா?

20 ஜூன், 2007

வவ்வலை விடப்போவதில்லை.

வவ்வலை விடப்போவதில்லை.
வவ்வலுக்கான அர்த்தம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
ஆனால் வவ்வல் ஒரு மலர் இல்லை.
வவ்வல் குறித்து வலை பக்கங்கள் கிடைத்தது.
அவை:

1)வவ்வு, [ vvvu, ] கிறேன், வவ்வினேன், வேன், வவ்வ. To take up by the handful, and carry off, வார.
வவ்வல், v. noun. Taking up. (சது.) (from web page:(http://dsal.uchicago.edu/dictionaries/winslow/)




படம் : சிவாஜி
பாடியவர்கள் : ஹரிஹரன், சாதனாசர்கம்

இசை : ஏ.ஆர். ரஹ்மான்பாடல் : வைரமுத்து

பல்லவி========ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னைகையோ வவ்வல் வவ்வல்உன் பூவிழிப் பார்வை போதுமடிஎன் பூங்கா இலைகளும் பதறுமடிஉன் கால்கொலுசொலிகள் போதுமடிபல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு

ஆ: அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு

பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)

ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்புன்னகையோ வவ்வல் வவ்வல்சரணம்-1=========

பெ: ஹோ.. ஆ..ஆ..ஆ..

ஆ: ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்

பெ: புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்பூவுக்குள் குளிப்பீரா
ஆ..(புன்னகைப் பேரரசே)விடியும்வரை மார்புக்குள் இருப்பீராவிழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா

ஆ: ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்செயல்புயல் நானடி

பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)

ஆ: பூம்பாவாய்..சரணம்-2=======

ஆ: பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்வந்து ஒளிந்து கொண்டேன்
சுகம்சுகம் கண்டேன்

பெ: ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடிவெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்

ஆ: அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்முரண்பாட்டு மூட்டை நீ

பெ: வாஜி.வா வா வா வா..வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)

ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....

ப்ளாகிலே சிவாஜி (ரஜினி) படங்கள்.



ப்ளாகிலே சிவாஜி (ரஜினி) படங்கள் போடுவோம்.


ரஜினி ரசிகன் அல்லவா நான் !

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...