01 செப்டம்பர், 2019

இடும்பை என்றால் என்ன?

இடும்பை பற்றி, அன்று ஒரு குறள் படித்தேனே,
அது எத்தனையாவது குறள் ?




பால்: பொருட்பால் 


அதிகாரம்:  இடுக்கணழியாமை.


Hopefulness in trouble.


 இடும்பைக்கு இடும்பை படுப்பர்

இடும்பைக்கு இடும்பை படn அ தவர்


இங்கு ஏன் படா (அ) என்று நடுவில் ஒரு (அ) சேர்க்கப் பட்டுள்ளது? 


ஏதோ ஒரு இலக்கணம். இப்படி தெரிந்து கொண்டேன். 
'படாதவர்' என்னும் சொல்லை, நீட்டிச் சொல்ல வேண்டும்.


படா nnnn தவர் 


அதாவது  இடும்பையை கண்ட 'பயமில்லாமை'  அரைவாசி,
முக்கால்வாசி என்று இருக்காமல்,  
முழுவாசியாக - முழுவது(உ)மாக - இருக்க வேண்டும்.


இடும்பை என்றால் என்ன?


இடும்பை என்றால் துன்பம்.
Trouble. கஷ்டம். பிரச்சினை.


துன்பத்துக்கு துன்பம் கொடுங்கள்.


Trouble, trouble, when trouble, troubles you.


கஷ்டத்தை கடுமையாக கஷ்டப் படுத்துங்கள்.


பயப்படாமல் …


துன்பத்தை துன்பப் படுத்துவர் துன்பத்துக்கு துன்பப்படாதவர்.


துன்பம் என்ன பெரிய பருப்பn ?


நன்றாக வேக விடுங்க.


சரியா?

💀



08 ஆகஸ்ட், 2019

G handwrite Board.

 "என்னப்பா இந்த கூகிள் Hand Write பேnர்ட்ல எழுதி ஒரு போஸ்ட் போடணம்னு ஆசையாக உள்ளதா?"
" ஆமாம்."
 "அப்ப எழுது மேன்."
 "டைட்டில் எழுதிக்கினியா?"
"எழுதிக்கினேன். 
ஒரு 'பொருள்'ல நாலு வார்த்தைகள் எழுதினவுடன் தலைப்பு கிடைத்து விடுகிறது. 
அப்புறம், மேலும் நாலு வார்த்தைகள் கிடைத்து விடுகிறது எழுதுவதற்கு."
 "பலே!"
" அதற்கு மேலும் நாலு வார்த்தைகள் கிடைப்பதற்கு முக்க வேண்டியுள்ளது."
 "முக்கு."
" ஹஹ்ஹா"
 "ம்ம்ம்ம்"
மேலும் வார்த்தைகள் கிடைப்பதற்கு ரொம்ப நாள் முக்கியிருப்பாய் போலுள்ளது?
ஆமாம், 56 வார்த்தைகளுக்குப் பிறகு இன்றுதான் வேறு வார்த்தைகள்
சேர்ப்பதற்கு எத்தனித்திருக்கிறேன்.
என்ன வார்த்தைகள் சேர்க்கலாம்?
75 வார்த்தைகள் எட்டி இருக்கிறேன்.
நல்லாத்தான் இருக்கு, இந்த முக்கல்கள்.  எதையோ எழுத வேண்டும்
என்று மனது நினைக்க - வார்த்தைகளை மனது தேட  -
எப்படி சொல்வதென்று மனது தவிக்க…….
அட, எழுதி முடித்து விட்டாயே!






02 மே, 2019

"திங்கள் மற்றும் செவ்வாய்"

வாழ்க்கையின் இந்த அத்தியாயம்: "திங்கள் மற்றும் செவ்வாய்"
இந்த திங்கள் மற்றும் செவ்வாய்  கிழமைகளில் சிறப்பு என்னவென்றால்
நான் எனது ரயில்வே பணியிலில்  வேலை செய்யும் கடைசி இரண்டு நாட்கள்.
இந்த கணினி உபயோகம் இனி நின்று விடும்.
நன்றி கணினி.
கடந்த குறிப்பில் சொன்ன சோலார் பில்லை திருப்பி அனுப்பி விட்டேன்.
இனி இந்த சீட்டுக்கு வரும் நபர் பார்த்துக் கொள்ளட்டும்.
செவ்வாயன்று எனது ரிட்டைர்மெண்ட், சின்னதாக இனிமையாக நடந்தது.
சுப்பாராவ் அருமையாக நடத்திக் கொடுத்தார்.
மகன் மனைவி மற்றும் தங்கை இந்த நிகழ்வுக்கு வந்தது மகிழ்வைத் தந்தது.
ஹைதராபாத்திலிருந்து நண்பர் வந்து,
ரிடைர்மென்ட் நிகழ்சியில் கலந்து கொண்டது பாக்கியம்.
இந்த கணினி உபயோகப் படுத்தி இந்தக் குறிப்புக்களை எழுதியது
மனதிற்கு உற்சாகம்.
நன்றி கணினி. நன்றி SWR.
இனி என்ன எழுதலாம் என்பதை வீட்டிலிருந்து பார்க்கலாம்.
நண்பர்கள் கொடுத்த நினைவுச் சின்னம் அருமையாக இருந்தது.
அம்மாவுக்கு காட்டினேன்.

Great!

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...