19 ஏப்ரல், 2019

நான்காவது வாரம்

எனக்குப் பிடித்தமாக நாள், வாரம் தொடங்க வேண்டுமா என்ன?

அந்த நாள் இட்டுச் செல்லுகிற போக்கில் சென்று நமது முக்கியமான குறிக்கோளையும் நடத்திக் கொள்ள வேண்டாமோ?

முக்கியமான குறிக்கோள் என்ன?
மனம் மெச்சும் படி செயல் செய்ய வேண்டும்.

ஒரு ஜியோ பில் பாசாகாமல் தேங்கி நிற்கிறது.
சந்தோஷுக்கு கால் சரியில்லையென்று லீவ் போட்டுவிட்டு சென்று விட்டான். பாபுவின் உதவி பெற்று வேலை செய்யலாமென்றால்,
அவனுக்கு சர்ச் வேலைகள் உண்டென லீவ் போட்டு விட்டான்.
ஜியோ பில் எப்படி பாஸ் ஆகி மனம் என்னை மெச்சும்?

இருக்கட்டும்.

எனக்கு பிடித்தமானது நடக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை
.
இதென்ன எழுத தோன்றும் பொழுது எழுத முடியாததும், எழுத எத்தனிக்கையில் வார்த்தைகள் வராததும்?

இந்த வாரம் மூன்று வேலை நாட்கள். இரண்டு விடுமுறைகள்.

அமீர் திருமண ரிசப்ஷன் திங்கட்கிழமை. MTS ரயில்வே கலியாண மண்டபத்தில்.

சீனு, பிராதர் அர்ஜுன் ஜதே காரில் சென்று வந்தோம்.



12 ஏப்ரல், 2019

ஒவ்வொரு நாளும் சில வார்த்தைகள்.

இந்த வாரம் மூன்றாம் போஸ்ட் வாரமல்லவா?
இன்று திங்கட்கிழமை.
ஒவ்வொரு நாளும் சில வார்த்தைகள் எழுதிக்கொள்ளலாம்.
இன்று செவ்வாய்கிழமை. இன்றைய வார்த்தைகள்:
புதனும் வியாழக்கிழமையும் CL போட்டுக் கொண்டுள்ளேன்.
இன்னும் ஒரு CL பாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமைக்கு ஆபிஸ்  வந்து விட்டேன்.
புதனும் வியாழனும் பயணங்கள். ‘ராணி சென்னம்மா’
மஹாதேவனுடைய புது டாடா SUV வண்டி மற்றும் சித்தகங்கா இண்டர்சிட்டி.
ஆகிய பயண ஊர்திகளில் பயணப்பட்டேன்
பயணத்திற்கான நிகழ்வு: மஹாதேவனுடைய நிச்சியதார்த்த வைபவம்.
இந்த வைபவம் வெல்லூர் ‘லட்சுமி பவன்’ ஹாலில் நடந்தது.
நன்று.
மகனையும்  பார்த்தேன்.
அவன்  புகப் போகும் புது  மனையை பார்க்க முடியவில்லை.
இருக்கட்டும்.  அவனுக்கு நல்லவைகள் அமையட்டும்.
இன்னும் சொற்ப தினங்களே.  இந்தக் கணினியை பயன் படுத்தும் யோகம்.
இப்போதைய கணக்குப்  படி 9 நாட்கள்.

அடுத்த வாரம் மூன்று நாட்கள் கிடைக்கும்,
இந்தக் கணினியை உபயோகப் படுத்த.
எழுதி விடுவோம்,  
இன்னொரு நூறு வார்த்தைகளை ஜம்மென்று.

20 மார்ச், 2019

அட நன்று.

அட
நன்று
கூகிள் கீப்- ல் எழுத, தமிழ் உபகரணம் ஒன்று போட்டுக்கொண்டுள்ளேன்
Chrome browser ல் . நன்கு வேலை செய்கிறது.
இதோ இன்னும் 42 நாட்களில் ரிடையர் ஆகப் போகிறேன்.
அதற்குள் சில நூறு வார்தைகள் எழுதிக் கொள்கிறேன்.
எப்பொழுதாவது எனக்கு குறிப்பு எடுத்துக் கொள்ள பிடிக்கும்
என்று சொல்லியிருக்கிறேனா?
சொல்லவில்லையென்றால் இப்பொழுது சொல்கிறேன்.
நோட்புக்கும் பேனாவும் சட்டைப் பையில் வைத்துக் கொள்ள பிடிக்கிறது.
சிறு நோட்புக் வைத்துக் கொண்டுள்ளேன்.
அந்த சிறு நோட் புக்கில் எழுதியதை கொஞ்சம் விவரமாக,
கொஞ்சம் அழகாக ஒரு பெரிய நோட் புக்கில் எழுதிக் கொள்ள முயற்சி
எடுத்துக் கொள்கிறேன்.
அப்படி எழுதும் பொழுது எதோ பெரிதாக செய்ததாக, புரிந்ததாக உணருகிறேன்.
நோட் புத்தகத்தை புரட்டும் பொழுது, சில சங்கடங்கள் நிவர்த்தி
ஆகியிருப்பதை பார்க்கிறேன்.
சில கணக்குகள் சரியாகி உள்ளது.
சில  பல ‘to do’  பாட்டியல்கள்  ஜாலியாக ‘டிக்’ ஆகியுள்ளது.
நன்று
அட

26 அக்டோபர், 2018

தமோவோ தமோ.

காலையிலிருந்து மூன்று குணங்களை, மனம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
காலையில் எழுந்தால் தமோவோ தமோ.
பரவாயில்லை, தமோவை தமோ என்று ஒப்புக் கொள்ளும் ‘சத்துவ’ குணம் 
எட்டிப் பார்க்கிறது.
‘அட இன்னும் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்திருக்கிலாமாயிருந்தது’
‘என்ன ஒரு ஒத்துழையாமை, உடம்பும் மனமும். இன்னும் படுத்து விடலாமா?’
தமோ தமோ தமோ.
பால் வாங்கி வந்து, ரேடியோ  விவித்பாரதியில் திரிவேணி பாடல்கள் கேட்டு.
காப்பிக்கு டிகாஷன் போட்டு, அம்மா பெண்டாட்டியின் புடவைகளை 
தோய்க்க ‘தமோ’ பட்டு, தமோவாக குளித்து, 
தமோவாக, விஷ்ணு ஸஹஸ்ரநாம சொல்லி, 
நேற்று உபன்யாசத்தில் கேட்ட ‘வசு’ நாமாவை, எனது புத்தகக்கத்தில் கண்டு பிடித்து…….
அம்மாவுக்கு காபி கொடுத்து…..
ஹே….தமோ குணம் போய், ரஜோ குணம் வந்து விட்டதா?
ஆபிசில் போய் கிளுட்டலாம்...புது செக்ஷன் கம்ப்யூட்டரில் எழுதலாம்….
நேற்று எழுதிய ஆப்பிஸ் பரீட்சை ..நினைத்து நினைத்து பெருமை படலாம்…..
ப்ரமோஷன் வந்த மாதிரி பெருமை பட்டுக் கொள்ளலாம்.

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...