25 மார்ச், 2011

'சமீபத்தில் ரசித்த புகைப்படம் எது?'

இமேஜ் ஷாக்கில் சில படங்களை பதித்து வைத்திருக்கிறேன். அதில் இது ஒன்று. பறவை நடனமாட நிற்கிறதா? அதனுடைய பிம்பம் பிரமாதமாக உள்ளது.
Image Hosted by ImageShack.us
By madscribbler at 2008-07-௦௪
 "Creative"  என்று Search போட்டேன் ....கிடைத்த புகைப்படங்கள்:

இந்த ஆள் ஏன் சக்கர நாற்காலியை இவ்வளவு கஷ்டப்பட்டு நிப்பாட்டுகிறான்?

Uploaded with ImageShack.உச
எலும்பும் தோலுமாய் என்பதை இதைத்தான் சொல்லுவார்களோ?


Uploaded with ImageShack.உச
கட்டங்கள்



Uploaded with ImageShack.உச
துக்குணுண்டு துணுக்கிற்கு இம்புட்டு பெரிய வாய்?


Uploaded with ImageShack.உச

அடுத்த கேள்வி: கோபம் வந்தால் என்ன செய்வது?

04 டிசம்பர், 2010

அட இவனுக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்று பொறாமை வரும்பொழுது என்ன செய்வது?

பொறாமை வரும்போது, இந்த ஔவையார் பாடல் நினைவுக்கு கொணர்தல் நல்லது. 
நம்மால் கூட சில காரியங்களை எளிதாக சிறப்பாக செய்ய முடியும். 
அதை செய்வோம். 
நாம் பொறாமை படுபவர்களிடமிருந்து அவர்கள் சிறப்பாக செய்யும் காரியங்களை பாராட்டிப் பெற்றுக்கொள்வோம்.

"வான் குருவியின் கூடு வல்சுரக்குத் தொல் கறையான்
தேன் சிலம்பி யாவருக்கும் செய்ய அரிதால் - யாம் பெரிதும் 
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் கான் 
எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது!"  - ஔவையார்

 தூக்கணாங் குருவியின் கூடு, வலிமை உடைய அரக்கு, பழைமையான கறையான், தேன், சிலந்திக் கூடு, இவை யாவர்க்கும் செய்ய அரிதானவை, எனவே 'யாம் பெரிய'  என  தற்சிறப்புப் பேச வேண்டாம். எல்லோருக்கும் ஒவ்வொரு காரியம் எளிதானது, எப்போதும்! 


சில பல படங்களை பார்த்து வைத்துக் கொள்கிறேன். அடுத்த கேள்வியாக 'சமீபத்தில் ரசித்த புகைப்படம் எது?'வென கேள்வி கேட்டுக்கொள்கிறேன். ஒரு ஐந்து புகைப்படங்களை பிரசுரித்து அடுத்த பதிவை ஜமாய்கிறேன். 

எதேர்ச்சையாக இதை படிக்க நேரிடுபவர்களுக்கு நன்றி. இங்கு இருக்கும் கேள்விகளுக்கு தாங்களும் சின்னதாக, சிக்காக பதில் தரலாம் - காமென்ட் பகுதியில்

31 அக்டோபர், 2010

ஸ, ரி,க, ம, ப, த, நி என்ற எழு ஸ்வரங்கள் என்றால் என்ன தெரியுமா?

சட்ஜம் (மயிலின் நாதம்)                               - ஸ 
ரிஷபம் (மாட்டு சத்தம்)                                  - ரி
காந்தாரம் (ஆடு போடும் சத்தம்)                   -க 
மத்யமம் (பறவையின் கூவல்)                     - 
பஞ்சமம் (குயிலின் ஒலி)                                -ப 
தைவதம் (குதிரையின் கனைப்பு)                 -த 
நிஷாதம் (யானையின் பிளிறல் )                 -நி           




அடுத்த கேள்வி: அட இவனுக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்று பொறாமை வரும்பொழுது என்ன செய்வது?
எதேர்ச்சையாக இதை படிக்க நேரிடுபவர்களுக்கு நன்றி. இங்கு இருக்கும் கேள்விகளுக்கு தாங்களும் சின்னதாக, சிக்காக பதில் தரலாம் - காமென்ட் பகுதியில். 

30 ஜூன், 2010

மனோ திடமான நம்பிக்கை என்பது யாது?

  • இருள் சூழ்ந்த நேரங்களில் வெற்றி என்ற வெளிச்சத்தைப்  பார்ப்பது. 
  • நம்மால் முடியும் என்பவைகளை முன்னால் கொண்டுவந்து செய்வது.
  • 'தொப்' பென்று தோல்வியில் விழுந்தபோது 'சடாரென' எழுந்திருப்பது.
  • கடினமான கடினங்களில் புகுந்து பார்ப்பது.
  • துளியும் பயமில்லாமல் எதிர்காலத்திற்கு முகத்தை காண்பிப்பது.
  • கவலை என்ற காசோலையை அமைதி என்ற பணமாக மாற்றிக்கொள்வது.
  • கல்லைப்போல் நமது நம்பிக்கைகளில் உறுதியாக நிற்பது. 
  • "கண்டிப்பாக வெற்றி கொள்வேன்" என்ற உறுதியிலிருப்பது. 


(ஷுலர் "திடமான நம்பிக்கைப் பற்றி )
அடுத்த கேள்வி ச ரி க ம ப தா நி ச பற்றி தெரிந்ந்து கொள்ளலாமா? 

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...