08 ஜூன், 2007

தேனீ


ஓ..

இன்று வலையில் எங்கெல்லாமோ சென்று விட்டேன்.

எவ்வளவு பதிவுகள்?

எவ்வளவு வசதிகள்?

தற்போது தேனீ வலையகத்தில் மாத்திரம் தேடுகிறேன்.

தேனீ அகராதியில் link சொல்லுக்கு தொடுத்தல் என்ற அர்த்தம் கிடைத்தது. நல்ல தமிழ் பக்கங்களை இந்த பக்கத்தின் தொடுத்தல் பகுதியில் தொடுக்கிறேன்.

தேனீயில் இன்னும் என்னவெல்லாம் வச்திகள் உள்ளன?
தொடர்கிறேன்....தொடுக்கிறேன்.

பக்கதில், அதாவது தொடுத்தல் பகுதியின் மேலுள்ள படம் மற்றும் இந்த பதிவினூடே இணைத்த படம் பிடித்துள்ளதா?

படிப்பது எழுதுவது சும்மாயிருப்பது!

சில சமயம் படிப்பது சுகம்.
சில சமயம் எழுதுவது சுகம்.
சும்மாயிருப்பது சுகமோ சுகம்!
சும்மாயிருக்கும்பொழுது,தமிழ் வலை தளங்களுக்கு <லின்க்> கொடுத்து வைக்கலாம்.
இந்த குறிப்புடன் வரும் லின்க்:

தேனீ

லின்க் என்பதை தமிழில் என்ன சொல்லலாம்?
ஒவ்வொரு குறிப்பையும் ஒரு கேள்விக்குறியுடன் முடிக்கலாம்.
அதற்கான பதில் தயாரானவுடன், அடுத்த குறிப்பை தொடங்குகிறேன்.
குறிப்புகளுக்கு தொடர்பு வைத்து விட்டேன்!
ஆக லின்க் (link) என்பதற்கு தமிழ் சொல் என்ன?

06 ஜூன், 2007

'வலை கிறுக்கல்'

கிறுக்கல்கள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கட்டும்!
சந்தோஷம் என்னவென்றால், தமிழில் blog செய்ய கற்றுக்கொண்டுவிட்டேன்!
blog என்ற ஆங்கில சொல்லை தமிழில் என்ன சொல்லலாம்? வலை குறிப்பு? என்னைப் பொறுத்தவரை 'வலை கிறுக்கல்' பொருத்தமாகப்படுகிறது.இந்த கிறுக்கலை எழுத உதவியவை:
1)Compose Tamil
2)
தேனீ
மற்றும் நண்பர் அம்பி.
அடுத்த கிறுக்கலை இதனுடன் சம்பந்தப்படுத்த வேண்டும்.

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...