சந்தோஷமாக எழுதுவதற்கு இன்னொரு ப்ராஜக்டை செய்து கொள்கிறேன். அதாவது நூறு வார்த்தைகள் எழுதுவது. 'கேள்வியும் நானே பதிலும் நானே' ப்ராஜெக்டும் தொடரும்.
நூறு வார்த்தைகள் கொண்ட ஒரு பாரா, ஒரு விஷயம், ஒரு...மனதில் தோன்றுவது எதுவோ அது. எழுதுவது ஒரு சந்தோஷம் கொடுக்கிறது. சந்தோஷத்தை அனுபவிப்போம். அவ்வளவுதான்.
தோன்றுவதை உடனே எழுத முயற்சிக்க வேண்டும். சில சமயம் பிரமாண்டமான கவிதைகளும், தகவல்களும் 'சல சல ' என்று மனதில் உதயமாகிறது. உதயமாகட்டும். அதை அனுபவிச்சுக்க. எழுதி, மேலும் சந்தோஷம் கொள்ள வேண்டுமா என்ன?
ஆமாம். எண்ணங்களுக்கு ஒரு அமைப்பு கொடுத்த மாதிரி ஒரு feel! மனதை படம் பிடித்து விட்டேன் என்ற மகிழ்வு.
முயற்சிப்போம். 2016 ல் 366 நாட்கள் உள்ளன. சந்தோஷத்தை படம் பிடிப்பது இரட்டை ட்ஜிட்ல வருதா அல்லது ஒற்றை டிஜிட்ல வருதா என்று பார்ப்போம்.
எண்ணங்களை படம் பிடிப்பது ஒரு பொழுதுபோக்கு. முயற்சி செய்கிறேன். மகிழ்சி. சந்தோஷம்.
படம் இணையகத்திலிருந்து கூகிள் டிரைவில் சேகரித்தது.
cgbalu from Hubbali