அந்தக் காலத்தில் ஜோக் அட்டைப் படத்துடன் கூடிய குமுதம் அளவிலான விகடனை படித்துக் கொண்டிருந்தேன் என்று ஆரம்பிக்க மாட்டேன். (குமுதத்தை விட ஒரு சுற்று பெரிசு விகடன்)
பெரிய அளவிலான விகடன் வாசிப்பு குறைச்சல் தான். இருந்தாலும் விகடன் வாசிப்பு வரப் பிரசாதம் தான்.
நிற்க.
சொல் வனம் சரியாக இருக்கா? கேள்வியைப் பாருங்க. வார்த்தைகளை வ'கரத்திலேயே அமைத்துள்ளேன்.
சொல் வனம் பகுதி நல்ல வளமாக உள்ளது விகடனில்.
வாசகர்கள் வனப் பகுதியை நன்கு வளப் படுத்துகிறார்கள்.
ப. தியாகு எழுதிய இந்த சொல் வனத்தை பாருங்களேன்:
மிடறு மிடறாக....
சற்றே தகிக்கிறது என்றாலும்
மறுக்கவியலாது
அது
ஒவ்வொரு மிடறிலும்
இனிப்பதையும்,
தேநீர்போலும்
வருமிந்த
ஊடல்.
கவிதைப் பக்கத்தில் ஒரு குழந்தை வகுப்பெடுக்கும் நேர்த்தி, அப்படியே அதை உங்களுடன் பகிர மனம் விழைகிறது.
எல்லாம் செய்கிறேன். ஆனால் சிறுகதை வாசிப்பு அபூர்வமாக அமைகிறது. சுப்ரபாரதிமணியன் எழுதிய "இது அழகிகளின் கதையல்ல" ஒரு நெருடலை எற்படுத்தியது.
வாசிப்புக்கு சிறந்தது சில கட்டுரைகள். நடப்புக் கட்டுரைகள். பிரியா தம்பியின் "பேசாத பேச்செல்லாம்.." நல்ல பேச்சு. மகளிர் சுற்றுலா செல்லுகையில் ஏற்படும் இன்னல்களை நன்றாகப் பேசுகிறது. ஒரு வரியை சுட்டு ட்வீட் ஆக்கினேன்.
நமக்கு முன்னால் இவ்வளவு பெரிய உலகம் இருக்கிறப்போ, நமக்குனு தனியா என்ன துக்கம் இருக்கு?
— பாலு_ஹுப்பள்ளி. (@hubbalibalu) September 23, 2014
வாசிக்கும் ரசனையை பற்றி இதுவரை வரைந்தேன். (வ...வா!!)
இதைத் தவிர சமீப கால செய்திகள்....சினிமா செய்திகள் ...இன் பாக்ஸ் முதலியன.....இவைகளை பிறகொரு தரம் கூற விரும்புகிறேன்.
இந்த ப்ளாக் பாணியை நான் விகடன் பகுதியான நானே கேள்வி... நானே பதில்...பகுதி போல் அமைத்துக் கொண்டுள்ளேன். ஒரு நாள் இந்தப்பகுதியில் நான் எதாவுது எழுத வேண்டும் என்ற அவா உள்ளது.
cgbalu from Hubbali