பத்திரிகைகள் விருப்பமாய் இருந்தன . மிக மிக விருப்பமாய் சிறு வயதில். ஆர்வமாக குமுதம் வாங்கிப்படிப்பேன் . அரசு பதில்கள் மிக சுவாரஸ்யமாய் இருக்கும். கேள்விகளை தபால் கார்டில் எழுதிப் போடுவேன் . பதில் கிடைத்தால் எதோ மிகப் பெரியதாக சாதித்து விட்டதாக நினைப்பு.
"ஆஹா பத்திரிகை உலகில் எதோ சாதித்து விடப்போவதாக நினைப்பு."
முயற்சிகள் நடந்தன . குமுதம் சில துணுக்குகளை வெளியிட்டது. நடிகை சுஜாதா பற்றி எழுதிய கட்டுரை பிரசுரித்தது . எழுதிய சிறுகதைகளை திருப்பி அனுப்பியது.
விகடன் மூன்று சிறுகதைகளை பிரசுரம் செய்து நல்ல சன்மானமும் கொடுத்தது. அப்புறம், ஒரு சிறுகதை (பூரிப்பு) வெளியிட்டபொழுது நான் ஆசிரியருக்கு கதையை கொஞ்சம் மாற்றியதாக கடிதம் எழுதிப் போட்டேன். பதிலுக்கு ஆசிரியர் கதையில் இந்த மாதிரி மாற்றங்கள் செய்வது சகஜம் . அந்த மாற்றத்தால் வாசகர்களின் வரவேற்பும் நன்றாக இருந்தது என்றும் எழுதியிருந்தார். மேலும் இந்த மாதிரி மாற்றங்களை நான் விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பாமலிருப்பததே நன்று என்று எழுதியும் விட்டார்.
அப்புறம் படைப்புகளுக்கு ஐடியாவும் வரவில்லை. சிறுகதை எழுதுவது சாத்தியப்படவும் இல்லை .
இப்பொழுது எனக்கான பத்திரிகைகளை ட்விட்டர் மற்றும் சில பக்கங்களை கிறுக்குவதன் மூலமும் நானே தயாரித்திக் கொண்டுள்ளேன். (வாசகர்கள் படிக்க மாட்டார்களா என்று ஒரு ஏக்கம் மனதோரத்தில் உள்ளது )
பெரிய விகடனையும் ...நம்பர் one குமுதமும் படிப்பதே இல்லை. வலையில் எப்பொழுதாவது காசில்லாமல் படிக்க கிடைத்தால் ஒரு பார்வை பார்கிறேன்.
ஆக என் பத்திரிக்கை படிக்கும் ஆர்வம் எழுதும் ஆர்வம் மக்கிப் போய் உள்ளது ,
இந்தக் கட்டுரை எழுதுவதன் மூலம் அந்த ஆர்வத்தை மறுபடி கொணர விரும்புகிறேன்.
வாரம் தோரும் கடைக்குச் சென்று இரண்டு பத்திரிகைகளை வாங்கி படித்து ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டு அந்தப் பத்திரிகையில் வந்த மாட்டரை என் ஸ்டைலில் எழுதா முயற்சிக்கிறேன்.
ஆக இந்தப்பதிப்பில் நான் இப்பொழுது கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டால் இரண்டு போஸ்டிங்களுக்கு சரக்கு தயார்.
1) சந்தோஷமாக அடிக்கடி என் எழுத வருவதில்லை?
2)இந்தவாரம் எந்தப் பத்திரிக்கை வாங்கிப் படித்தீர்கள்?