14 டிசம்பர், 2013

"சில வெப் ஷாட் " படங்களெல்லாம் உங்கள் ப்ளாகிலிருந்து போய்விட்டதே. என்ன செய்யப் போகிறீர்கள்?

யாஹூ போட்டோசில் வைத்திருந்த படம்:

வெப் ஷாட்டில் வைத்திருந்த படம் 



ஆமாம் சார். இந்த இணையகப் பயணத்தில், சில தளங்கள் முடித்து போய்விடுகின்றன. yahoo photos , yahoo geocities , Hotmail,  Google Reader  அப்புறம் வெப்ஷாட் . Yahoo  அதனுடைய photos இடத்தை முடிக்கும்பொழுது சொல்லியது: "All  Good Things Should  have  an  end " அப்படித்தானே?
இப்ப என்ன செய்தேன் என்றால், எனது இந்த ப்ளாகிற்கு ஒரு தொடர்சி வேண்டியிருப்பதால், இங்கு காணாமல் போன webshots படங்களுக்கு சம்பந்தமான பதிவுகளை கழட்டி விட்டு விட்டேன்.
"All  Good Things Should  have  an  end "
அடுத்த கேள்வி : 2014ல் இந்த பிளாகில் அதிகம் எழுதுவீர்களா?

06 செப்டம்பர், 2013

இந்தவாரம் எந்தப் பத்திரிக்கை வாங்கிப் படித்தீர்கள்?



பெரிய சைஸ் ‘கல்கி’ படிக்கும் பாக்கியம் கிடைத்தது. என்னுடைய ஆபிசர் சாருக்கு நன்றி. அவர் வாங்கி வந்த இதழை ‘படிச்சூட்டுக் கொடுங்கோ’ என்று அன்பாகக் கொடுத்தார். கல்கியில் பிரபஞ்சனின் மகாபாரத பாத்திரங்கள் பற்றிய கட்டுரைத் தொடர் வந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த இதழில் ‘விதுர’னைப்  பற்றிய கட்டுரை வந்துள்ளது. குவிக்காகப் படித்தேன்.


அடுத்த இதழில் பிரபஞ்சன் எழுதப் போவது குந்தியைப் பற்றி. தொடராகப்  படிக்க ஆசைதான். படிக்கும் wish list - ல் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். தராசு பதில் நன்றாக இருக்கும் கல்கி பத்திரிகையில். ஞானி ‘ஓ பக்கங்கள்’ எழுதுகிறார். ஓ பக்கங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். விகடனிலும் குமுதத்திலும் அவ்வப்போது ஓ பக்கங்கள்  படித்ததாக ஞாபகம். இந்த இதழில் பாரிஸ்  கட்டுரை எழுதியுள்ளார் ஞானி. பாரி என்று உச்சரிக்க வேண்டுமாம். கடைசிப் பக்கத்தில் IAS  அதிகாரி ஒருவரின் மாநில பிரிவினை குறித்தக்  கட்டுரையும் ஜம்மென்றிருந்தது.


ஆக இந்த தடவை நான் படித்த பத்திரிகை ‘கல்கி’  
சுருக்கமாக எனது கல்கி அனுபவங்கள்  :
1) பி.வி ஆர் எழுதிய ‘சென்ட்ரல்’ நவீனம்.
2)கி. ராஜேந்திரன் எழுதிய ‘சைக்கோ’ நவீனம்.
3) கடுகு என் கேள்வி ஒன்றுக்கு  பதிலளித்து - ஐம்பது ரூபாய்கள் பரிசு கொடுத்த மகிழ்சி
4)எங்கள் திருமண நாள் சந்தர்ப்பமொன்றில் ‘தராசு’ பதிலளித்த சுவாரஸ்யம் மறக்க முடியாது . அதாவது, எனது மற்றும் எனது மனைவியின் கேள்விக்கும், பதில் ஒரே இதழில் வெளிவந்தது.
5)கல்கியில் பொதுவாக இந்த வார விஷயங்களின் விமர்சினக் கடிதங்கள் ஒரு வாரம் விட்டு பிரசுரமாகும். அந்த விதத்தில் ராஜேஷ்குமார் எழுதிய நவீனமொன்றிர்கான  என்னுடைய விமர்சினக் கடிதமும் பிரசுரமாயிற்று.
6)’முக்காலி முக்கு’ என்ற சொற்றொடர் இடம் பெரும் ‘சுஜாதா’வின் நாவலொன்றை வாசித்தததும்  கல்கியிலே
8)பொன்னியின் செல்வன்.
அடுத்தக் கேள்வி "சில வெப் ஷாட் " படங்களெல்லாம் உங்கள் ப்ளாகிலிருந்து போய்விட்டதே. என்ன செய்யப் போகிறீர்கள்?

01 செப்டம்பர், 2013

சந்தோஷமாக அடிக்கடி என் எழுத வருவதில்லை?

சந்தோஷமாக  எழுதுவதற்கு தினந்தோரும்  வர ஆசைதான். ஆசை  இருந்தால்  போதுமா? சரக்கு வேண்டாமா?  எழுதுவதற்கான சரக்குத் தான். வேறெந்த சரக்கையும் மனதில் கொள்ளவில்லை. முயற்சிப்போம். குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையேனும் சந்தோஷமாக நல்ல சரக்கை கேள்வி பதில் பாணியில் இங்கு எழுதுவோம்.


22 ஜூலை, 2013

பத்திரிகை உலகில் என் அனுபவம் என்ன?

பத்திரிகைகள் விருப்பமாய் இருந்தன . மிக மிக விருப்பமாய்  சிறு  வயதில். ஆர்வமாக குமுதம் வாங்கிப்படிப்பேன் . அரசு  பதில்கள் மிக சுவாரஸ்யமாய் இருக்கும். கேள்விகளை தபால் கார்டில்  எழுதிப்  போடுவேன் . பதில் கிடைத்தால்  எதோ  மிகப்  பெரியதாக  சாதித்து  விட்டதாக  நினைப்பு.
"ஆஹா பத்திரிகை  உலகில்  எதோ சாதித்து  விடப்போவதாக  நினைப்பு."
முயற்சிகள்  நடந்தன . குமுதம்  சில துணுக்குகளை  வெளியிட்டது. நடிகை  சுஜாதா  பற்றி  எழுதிய  கட்டுரை  பிரசுரித்தது . எழுதிய சிறுகதைகளை திருப்பி  அனுப்பியது.
விகடன்  மூன்று  சிறுகதைகளை  பிரசுரம் செய்து  நல்ல சன்மானமும்  கொடுத்தது. அப்புறம்,  ஒரு சிறுகதை (பூரிப்பு) வெளியிட்டபொழுது நான் ஆசிரியருக்கு கதையை கொஞ்சம் மாற்றியதாக கடிதம் எழுதிப் போட்டேன். பதிலுக்கு ஆசிரியர் கதையில் இந்த மாதிரி மாற்றங்கள் செய்வது சகஜம் . அந்த மாற்றத்தால் வாசகர்களின் வரவேற்பும் நன்றாக இருந்தது என்றும் எழுதியிருந்தார். மேலும் இந்த மாதிரி மாற்றங்களை நான் விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பாமலிருப்பததே நன்று என்று எழுதியும் விட்டார்.
அப்புறம் படைப்புகளுக்கு ஐடியாவும் வரவில்லை. சிறுகதை எழுதுவது சாத்தியப்படவும் இல்லை .
இப்பொழுது எனக்கான பத்திரிகைகளை ட்விட்டர் மற்றும் சில பக்கங்களை கிறுக்குவதன் மூலமும் நானே தயாரித்திக் கொண்டுள்ளேன். (வாசகர்கள் படிக்க மாட்டார்களா என்று ஒரு ஏக்கம் மனதோரத்தில் உள்ளது )
பெரிய விகடனையும் ...நம்பர் one குமுதமும் படிப்பதே இல்லை. வலையில் எப்பொழுதாவது காசில்லாமல் படிக்க கிடைத்தால் ஒரு பார்வை பார்கிறேன்.
ஆக என் பத்திரிக்கை படிக்கும் ஆர்வம் எழுதும் ஆர்வம் மக்கிப் போய் உள்ளது ,
இந்தக் கட்டுரை எழுதுவதன் மூலம் அந்த ஆர்வத்தை மறுபடி கொணர விரும்புகிறேன்.
வாரம் தோரும் கடைக்குச் சென்று இரண்டு பத்திரிகைகளை வாங்கி படித்து ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டு அந்தப் பத்திரிகையில் வந்த மாட்டரை என் ஸ்டைலில் எழுதா முயற்சிக்கிறேன்.
ஆக இந்தப்பதிப்பில் நான் இப்பொழுது கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டால்  இரண்டு போஸ்டிங்களுக்கு சரக்கு தயார்.
1) சந்தோஷமாக அடிக்கடி என் எழுத வருவதில்லை?
2)இந்தவாரம் எந்தப் பத்திரிக்கை வாங்கிப் படித்தீர்கள்?

03 ஜூன், 2013

"பொன்னியின் செல்வன் சரித்திர நவீனத்தில் அமரர் கல்கி உபோயகம் செய்த திருக்குறள்கள் யாவை?"

சமீபத்தில்  "பொன்னியின்  செல்வன் " படிக்கும் பாக்கியம்  கிடைத்தது. நல்ல நல்ல வரிகளை ட்வீட்  செய்துகொண்டே நவீனத்தை சுவைத்தேன். அதில் அமரர்  கல்கி  உபயோகித்த திருக்குறள்களை  எழுதி வைத்துக்கொண்டு  facebook  திருக்குறள்  பக்கத்தில்  குறிப்புகளாக post  செய்து  கொண்டேன். அவைகளை  ஒரு  storify  ஆகச்  செய்து  இந்தப்பதிப்பை கொணர்கிறேன்.

What will be my next question
அடுத்த  கேள்வியாக  நான்  என்னையே  கேட்டுக்கொள்ள  விரும்புவது :
பத்திரிகை  உலகில்  என்  அனுபவம்  என்ன?

21 ஏப்ரல், 2013

ஓரிரண்டு ஆங்கில tweet களை தமிழ் படுத்திக் கொடுப்பீர்களா?

ஒன்றென்ன, இரண்டென்ன , மூன்று  கொடுக்கிறேன்!! மூ ன்று  ட்வீட்களை  தேர்வு செய்து  கொண்டு  அவைகளை  தமிழ்படுத்த இவ்வளவு  நாட்கள்  எடுத்துக்கொண்டுள்ளேன் . என்னே  என்  சுறு சுறுப்பு !! இதோ மூன்று  அருமையான  ட்வீட்டுகளின்  மொழி  பெயர்ப்பு .


உன்னைப்பற்றி எதோ பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா? எல்லாம் "கடன் வாங்கப்பட்டது", அதுவும் அவர்களைப்பற்றி அவர்களுக்கே தெரியாதவர்களிடமிருந்து, கடன் வாங்கப் பட்டது. - ஓஸ்லோ










இந்த மொழிபெயர்ப்பு முயற்சி  எனக்குப்  பிடித்துள்ளது. அடிக்கடி  முயற்சி  செய்ய  முயற்சிக்கிறேன்.
தற்பொழுது  பொன்னியின்  செல்வன்  படிக்கையில், அமரர்  கல்கி  அந்த  நவீனத்தில் மேற்கோள்  காட்டிய  திருக்குறள்களை ,  FACEBOOK  திருக்குறள்  பக்கத்தில் சேகரித்துக்  கொண்டு  வந்துள்ளேன். அந்த  முயற்சி  எனக்கொரு  கேள்வி  பதிலை இங்கு  பதிக்க  வாய்பளித்துள்ளது. வழக்கம்  போல  அதி  விரைவாக  இங்கு  வருகிறேன்.

அடுத்த  கேள்வி  இந்தப்  வலைப்பூவில் :
"பொன்னியின்  செல்வன்  சரித்திர  நவீனத்தில்  அமரர்  கல்கி  உபோயகம்  செய்த திருக்குறள்கள்  யாவை?"

13 ஜனவரி, 2013

சமீபத்தில் தாங்கள் தடுக்கி விழுந்த இந்த blog எழுதுவதற்கான உபயோகமான தளம் யாது?

சமீபத்தில் தமிழ் டீக் ஷனரி எ‌ன்ற வலை தளத்தில் தடுக்கி விழுந்தேன்.
ந‌ல்ல முயற்சி.

NIL என்னும் ஆங்கில் வார்த்தைக்கு பொருள் பார்த்தேன்.
'ஒன்றுமில்லை"' எ‌ன்ற பொருள் வந்தது.

"Anxious' 'restless' ஆகிய ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் பொருள் தேடினேன். தளம் என்ன பொருள் சொல்லியது தெரியுமா?

We couldn't find an exact match for the word 'Anxious'. 
Alternatively, you can visit the below links. 

பொங்கல் எ‌ன்ற தமிழ் வார்த்தைக்கு ஆங்கில பொருள் தேடினேன்.
பதில் இப்படி வந்தது:

We couldn't find an exact match for the word 'பொங்கல்'. 
Alternatively, you can visit the below links.

அவசரத்திற்கு உடனே பொருள் கிடைக்கவில்லை.

"Anxious' 'restless' ஆகிவிட்டேன்.

Online Tamil Transliteration பகுதிக்கு செ‌ன்று "ண" எழுத முயற்சி செய்தேன். 
n, shift+N, n+underscore எல்லாம் முயற்சி செய்து பார்த்தேன். பயனில்லை.

ரொம்ப  விரைவாக  எழுதும்  இந்த  சந்தோஷமான  blog  க்கு  இந்த தளம் உபயோகமாகுமா?

அடுத்த கேள்வி: ஓரிரண்டு ஆங்கில tweet  களை தமிழ் படுத்திக் கொடுப்பீர்களா?


test

please click the link This song is sung by. Satyanarayana.