17 ஜூலை, 2012

இப்படி ப்ளாக் பண்ணி என்ன சாதிக்க விரும்புகிறேன்?

ஆமாம் என்ன சாதிக்க விரும்புகிறேன்? 
ப்ளாகை அலங்கரிக்க விரும்புகிறேன். (இதை அகஸ்மாத்தாக  அல்லது தடுமாறி இங்கு விழுந்து, படிக்க நேரிடும் வாசகரே இந்த ப்ளாக் டிசைன் பிடித்துள்ளதா? ) மனதில் தோன்றும் எண்ணத்தை எப்படியாவது பிடித்து  ஒரு வடிவமைப்புக்கு கொணர   முயற்சிக்கிறேன்.
எழுத்துக்களையும் படங்களையும் உபயோகிக்க முயலுகிறேன்.
பெருங்கடலாக விரிந்திருக்கும் இணையகத்திலிருந்து சில கருவிகளை வசதிகளை உபயோகிக்க  கற்றுக்கொள்கிறேன். இதனூடே சுமாராக சிந்திக்க,சிரிக்க முயலுகிறேன். 
யாராவது இந்தப்பதிப்புகளைப் படித்தால் இன்னும் சந்தோஷம்தான்!!


Instapaper, Evernote, Pocket என்று வித விதமான கருவிகளை இணையகத்தில் உபயோகித்து வருகிறேன். இணையகத்தின் முகவரியை தன்னில் store செய்து கொண்டு, தகவல்களை எனக்கு வேண்டிய பொழுது தருகின்றன இந்த அருமையான கருவிகள்.எந்த தகவலை எந்த கருவியில் வைத்தேன் என்ற குழப்ப விளையாட்டு சுவாரஸ்யமாக உள்ளது.

sky-drive, இப்பொழுது googledrive  
போன்றவைகள் எக்கச்சக்கமான இடங்களை  கொடுத்து word  document, excel sheets, presentations, படங்கள்  என்று தகவல்களை பாதுகாத்து வைத்துக்கொள்ள உதவுகின்றன. Dropbox  என்ற கருவியின் மூலம்  இசைகளையும், படங்களையும் பல கணினி கைபேசிளில்  வைத்துக்கொள்ளலாம். ஆபீசில் கிறுக்கியதை  dropbox ல்  தள்ளி வீட்டில் வந்து அதை எழுத்தாக்க முயற்சிக்கலாம்.

மொத்தத்தில் வான வெளியில் அல்லது ஆகாயத்தில் அல்லது மேகத்தில் நிறைய, ரொம்ப நிறைய டிஜிடல் சமாச்சாரங்களை Store செய்து வைத்துக்கொள்ளலாம்.

25 GB + 2.5 GB + ...........பல பல GB கள். வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்தாலும் நிரம்பிவழியாத Space கள்.
மொத்தத்தில் எல்லாப் பயன்களையும் பயன்படுத்தப் பாடுபடும் பயனர் அடியேன். சந்தோஷமாக எழுதுவோம். 
இப்பொழுது கூகிள் translate என்ற பயனை அறிந்து கொண்டுள்ளேன். அடுத்தப்பதிப்பாக கூகிள் translate பக்கத்திற்குச் சென்று ஒரு பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதி அது இன்னொருப்பெட்டியில் தமிழாவதை அனுபவித்து, அந்த அனுபவத்தை ஒரு பதிப்பாக பதிக்க விரும்புகிறேன். என்னை என்ன கேள்வி கேட்டுக்கொள்ளலாம்? கூகிள் மொழி மாற்றல் பெட்டியில் உங்கள் அனுபவம் எப்படி?

test

please click the link This song is sung by. Satyanarayana.