04 மே, 2012

கணினி தொலைகாட்சி பெட்டி அல்லது திரை அரங்கிலோ சினிமா பார்த்தால் மனம் என்ன செய்து கொண்டிருக்கும்

 நல்ல வசனங்களை குறிப்பெடுக்கும். அந்த விதத்தில் சமீபத்திய எனது பதினோரு குறிப்புகள்.

1)நாளிக்கு கிடைக்கிற பால்கோவாவைவிட இன்றைய பப்பிர்மிட்டாய் மேல். கருப்பு கஞ்சா வசனம்

2)மில்லி மீட்டர் மாட்டருக்கு கிலோ மீட்டர் கவலையா? - மெரீனா படத்து வசனம்.


3)ஆறினதை திங்கலாம். நாறினதை திங்கலாமா?  - மெரீனா படத்து வசனம்.


4)காசாலே அடிக்கும் காசுள்ளவந்தான் 'பூஷ்வா ' - பாரதிராஜா பேசும் வசனம் படம்: இரட்டைசுழி 


5)"கதை கேக்கணம்'னு ஆசையா?

பேசாம ரெண்டு சீரியல் பாருங்க" இரட்டைசுழி வசனம்

6)"டீச்சருக்கு ரெண்டு சாக்பீசும் டஸ்டரும் வாங்கிக் கொடு


 எழுதும்பொழுதும் உன் ஞாபகம் வரும்: அழிகும்போழுதும் உன்


 ஞாபகம் வரும்" இரட்டைசுழி வசனம் 


7) மரங்கள் ஓய்வெடுக்க காற்று விடவில்லை. - அன்பே சிவம் பாடல் ஒன்றில் 


8) "நீரில் நீந்திடும் மீன்யினமே..நீ பாலில் வாழ்த்திட முடியுமா?" - நீர்க்குமிழி படப் பாடல் ஒன்று 


9) "Mr . சாமா, உங்களை மாமா'ன்னு கூபபிடறத்துக்கு முன்னால கொஞ்சம் காமா திங்க் பண்ண வேண்டாமா?"  - நீர்க்குமிழி


10) "மறந்தோம் என்பது நித்திரையடா"நீர்க்குமிழி


11) "அனுபவத்தில் நீ பேசுறதா நினைக்கிறாய்; அந்த அனுபவத்தாலேயே நான் பேசாமலிருக்கிறேன்" நீர்க்குமிழி 


இப்படி ப்ளாக் பண்ணி என்ன சாதிக்க விரும்புகிறேன்? என்னும் கேள்விதான் இப்பொழுது இந்தக் குறிப்புகளை எழுதும் பொழுது கேள்வியாக வந்து கொண்டிருக்கிறது . பதிலை ஒரு குறிப்பாக அடுத்தப் பதிப்பில் பதித்து விடுவோமே! 





test

please click the link This song is sung by. Satyanarayana.