நம் பதிவுகளில் இணையதள, இணைய வலைப்பக்கங்கள் முகவரிகளைக் குறித்தால், அதை Click செய்து, அந்தப் பக்கத்திற்கு செல்லமுடிகிறது. 'இசையரசி', 'தமிழ் நெஞ்சங்கள்' 'தேனி' இப்படி குறியீடுகள் தமிழில் எப்படிக் கொண்டு வருவது ?
- தவப்புதல்வன்.
விதி தான் நமக்குவிதித்து இதுவென
விதியை நொந்துவிசனத்தால்
மனம்விதிர்த்திருந்தேன்.
மதியால் வெல்லும்மதிதான்
நமக்குமதிப்பைத்
தரும்மதியை உணர்ந்தேன்
மகிழ்வுடன் நானே.
ஆம்பல் மலரில் தாங்கள் எழுதிய இந்தக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. இப்பொழுது ஆம்பல் மலர் என்ற வார்த்தையை அடிக்கோடு போட்டுக்கொண்டு அந்த மலரின் இணைய விலாசத்தை எழுதப்போகிறேன்.
உங்கள் blog அல்லது email எழுதும் கட்டத்தில் link செய்வதற்கு ஒரு icon உண்டு.
அதாவது குறியீட்டுச் சின்னம்.
இப்படி இருக்கும்.(படம்)">
முதலில் நீங்கள் இணைய விலாசம் கொடுக்க விரும்பும் வார்த்தையை அடிக்கோடு செய்து கொள்ளவும்.
(select செய்து கொள்ளவும்.)
insert link click செய்யவும்.
இங்கு நான் ஆம்பல் மலர் என்ற வார்த்தையை select செய்து கொண்டுள்ளேன்.
ஆம்பல் மலர் இணைய முகவரி : http://aambalmalar.blogspot.com/
அதை insert link சின்னத்தை நான் click செய்தவுடன் வந்த பெட்டிகளில் copy செய்து கொள்வேன்.
அப்பொழுது அந்த வார்த்தையை click செய்தவுடன் ஆம்பல் மலர் வந்துவிடும் - அருமையான கவிதை இதழ்களுடன்!
எங்கே மெல்ல முயற்சி செய்யுங்களேன். கிறுக்கல் பக்கத்தை link செய்யுங்கள் முதலில் email லில் முயன்று பாருங்கள்.சந்தேகம் இருப்பின் சிறு சிறு, கேள்விகளாக கேட்கவும்.
இப்பொழுது நீங்கள் ஆம்பல் மலர் போன்ற வார்த்தைகளை தமிழில் எழுதி..கட்டத்தில் போடுகிறீற்களே அது மாதிரி தமிழில் எழுதி பெட்டியில் போட வேண்டியது. அப்புறம் லின்க் செய்ய வேண்டியது. அவ்வளவுதான்!
தேனீ, தேன் கூடு, விக்கி இணையகங்களுக்குச் சென்று நாட்கள் ஆகி விட்டன. அங்கு பயணித்தப் பின் - கொஞ்சமான சரக்குடன் அடுத்த பதிவு.