பைத்தியக்காரனடா நான்.
ஆபீஸீக்கு போகும்பொழுதும், வரும்பொழுதும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று browsing centreல பொழுதை செலவிடுகிறேன்.
விடுமுறைகளில் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை browsing centre எனது பிரார்த்தனைக்கூடமாக உள்ளது.
கிறுக்குத்தனமாக, பதிவுகள் செய்கிறேன்.
பயனடைகிறேனோ இல்லையோ,
வலை தளங்களுக்கு செல்கிறேன்.
ஏன்? எதற்கு?
விடை தெரியவில்லை.
என்ன பயனடைகிறேன்?
தெரியவில்லை!
தேன் கூடு தகவல்கள்:
1)உங்கள் இடுகை உடனடியாக தேன்கூட்டில் தெரிய பிங் செய்யுங்கள்!
(பிங் என்றால் என்ன?)
2)நிறைய இடுக்கைகள். ஒரு இடுக்கை எழுதும் நண்பர் பெயர்:
இட்லி சட்னி சாம்பார்......எனக்கு பிடித்த ஐடம் கூட.....
பெயர்: சட்னிவடை பெயர்க் காரணம்: சுவைஞர்களை நம்பி வைத்த பெயர்.
உண்மைக் காரணம்: பயம் தான் பிறந்தது, வளர்ந்தது: உணவகங்களில். நிரந்திர பொழுது போக்கு: சுடும் பதிவுகள் தற்போதைய பொழுதுபோக்கு: கதம்ப பதிவுகள் நிரந்திர நண்பர்கள்: இட்லி, வடை, சட்னி, சாம்பார்.
http://idlyvadai.blogspot.com/ என்ற பதிவிலிருந்து.
3)குற்றாலம் ....
http://msams.blogspot.com/ என்ற பதிவிலிருந்து.
அடுத்த பதிவிற்கான தகவல்களுக்கும் தேன்கூடு செல்கிறேன்.
படிக்க, தேட நிறைய உள்ளது.
தேன் கூட்டிற்கு வந்த வழிகள்:
1)ஒரு முறை தவப்புதல்வன், தேன்கூடு பற்றி சொல்லியிருந்தார்.
அன்புள்ள kirukan G. அவர்களுக்கு,
வணக்கம்.தங்களின் "கிறுக்கல்கள்" வலைத் தொகுப்பை பார்வையிட்டேன்.
அதில் என் கருத்தையும் தெரிவித்திருந்தேனே!!
பார்த்தீர்களா ? தங்கள் வலைத் தொகுப்பை தமிழ் வெளியிட, http://www.thenkoodu.com/ இணயதளத்தை பார்வையிடவும்.
unicode தரவிறக்கம் (download ) செய்துக் கொள்ளலாம்.
ஏ-கலப்பை unicode தரவிறக்கம் செய்துக் கொண்டு, தமிழ் எழுத்துக்களை key Board யில் தெரிந்து கொண்டு, உபயோகிக்கவும்.
அதிலேயே ஆங்கிலம்,தமிழ் எழுத்துக்களை மாற்றி, மாற்றி உபயோகிக்கவும் வசதியும் உள்ளது.
எப்படியெனில், Alt+2 ஐ, உபயோகித்து ஆங்கில எழுத்துருவிலிருந்து தமிழெழுத்துக்களுக்கும், தமிழெழுத்திலிருந்து ஆங்கில எழுத்திற்க்கும் மாற்றி மாற்றி உபயோகித்துக் கொள்ளலாம்.கிருக்கல்களில் உங்கள் EMail முகவரி சரியில்லாத்தால் தொடர்புக் கொள்ளமுடியவில்லை. உங்களுக்கு தெரிந்ததை எனக்கும் சொல்லிக் கொடுங்கள்.
இந்த பக்கத்திலே அப்படியே செய்திகளும் தகவல்களும் குவிந்து கிடக்கிறது.
எதை படிக்க?
எதை குறித்துக்கொள்ள?
இதை செய்த நண்பருக்கு நேரம் எப்படி கிடைக்கிறது?
படிக்கவே எனக்கு தகடுதித்தம்!
இப்படி தகவல்களை மேய்ந்து கொண்டு தேன்கூடு வந்துள்ளேன்.